2012 சாஹித்ய அகாடமி விருது
தோல் என்ற நாவலுக்காக டி. செல்வராஜுக்கு கிடைத்திருக்கிறது. ஜெயமோகனின் இரண்டாம் பட்டியலில் (முக்கியமான, ஆனால் முழு கலை வெற்றி கூடாத படைப்புகள்) அவரது தேநீர் நாவல் இருக்கிறது என்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை. மலரும் சருகும், அக்னிகுண்டம், மூலதனம் என்று இன்னும் சில நாவல்களையும் எழுதி இருக்கிறாராம். படித்தவர்கள் யாராவது இருந்தால் எப்படிப்பட்ட புத்தகங்கள் என்று கொஞ்சம் சொல்லுங்கள்.
தமிழுக்கான கமிட்டியில் சா. கந்தசாமி, அப்துல் ரஹ்மான் (கவிஞரோ?), பேராசிரியர் பாலசுப்ரமணியம் இருக்கிறார்கள். சா. கந்தசாமி இருக்கும் கமிட்டி தகுதி உள்ளவரையே தேர்ந்தெடுத்திருக்கும் என்று நம்புவோம். (வேறு வழியில்லை. :-))
அவருடைய ஒரு பேட்டி இங்கே. பேட்டியிலிருந்து இவர் கம்யூனிஸ்ட் சார்புள்ள எழுத்தாளர், வக்கீல் என்று தெரிகிறது.
அவருடைய புகைப்படம் சரியாகக் கிடைக்கவில்லை, யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள் புகைப்படத்துக்கு சுட்டி தந்த பாலசுப்ரமணியனுக்கு நன்றி! பிற மொழியில் வெற்றி பெற்றவர்களையும் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள்.
தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்
தொடர்புடைய சுட்டி:
சாஹித்ய அகாடமி அறிவிப்பு
நக்கீரன் பேட்டி
அவருடைய புகைப்படம் இங்கே… http://en.wikipedia.org/wiki/Daniel_Selvaraj
LikeLike
தோல்’ நாவலுக்கு இந்தாண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர். டி.செல்வராஜ் அய்யாவிற்கு வாழ்த்துகள்.
LikeLike
இதோ முழு பட்டியல்
1. Patkari Ipare Mor Desh (novel)-Chandana Goswami-Assamese
2. Birasan (novel)-Subrata Mukhopadhyaya-Bengali
3. Boro Khonthai (poetry)-Guneswar Musahary-Bodo
4. Tim-Tim karde Tare (poetry)-(late) Bal Krishnan Bhaura
5. These Errors are Correct (poetry)-Jeet Thayil-English
6. Sakshibhasya (critic)-Chandrakant Topiwala-Gujarati
7. Patthar Fenk Raha Hoon (poetry)-Chandrakant Devtale-Hindi
8. Mabbina Haage Kaniveyaasi (poetry)-H.S.Shivaprakash-Kannada
9. Yath Aangnas Manz (poetry)-Makhan Lal Knawal-Kashmiri
10. Kavyasutra (poetry)-kashinath Shamba Lolienkar-Konkani
11. Kist-Kist Jeewan (Autobiography)-Shefalika Verma-Maithili
12. Marannu Vecha Vasthukkal (poetry)-K.Satchidanandan-Malayalam
13. Mathou Kanba DNA (novel)-Jodha C.Sanasam-manipuri
14. Phoenixchya Rakhetun Uthala Mor (short stories)-Jayant Pawar-Marathi
15. Ekantavas (short stories)-Uday thulung-Nepali
16. Kanta O’Anyana Galpa (short stories)-Gourahari Das-Odia
17. Maha Kambani (poetry)-Darshan Buttar-Punjabi
18. Aankh Hinye Ra Hariyal Sapna (poetry)-Aaidan Singh Bhati-Rajasthani
19. Laghupadhyaprhbandhatrayi (poetry)-Ramji Thakkura-Sanskrit
20. Banchaw Akan Goj Hor (short stories)-Gangadhar Hansda-Santali
21. Miteea Khaan Miteea Taaeen (short stories)-(late) Indra Vaswani
22. Thol (novel)-D.selvaraj-Tamil
23. Peddibhatla Subbaramaiah Kathalu Vol-1 (short storeis)-Peddibhatla Subbaramaiah-Telugu
24. Ghurfa-i-Ghaib (poetry)-Krishna Kumar Toor-Urdu.
பட்டியலில் இரண்டு லேட் இருப்பதிலிருந்து சா.அ.அ. லேட்டாகத்தான் வரும் என்பது புரிகிறது.
LikeLike
கேசவமணி, பாலசுப்ரமணியன், விவரங்களுக்கும் டி. செல்வராஜ் புகைப்படத்துக்கும் நன்றி!
LikeLike