Skip to content

கணேஷ்-வசந்த் நாவல் – ஆயிரத்தில் இருவர்

by மேல் திசெம்பர் 30, 2012

sujathaசில சமயம் சுஜாதா ஒரு கதையை சுவாரசியமாக ஆரம்பித்துவிட்டு எப்படியோ முடித்தால் போதும் என்று முடித்துவிடுவார். இந்தக் கதையும் அப்படித்தான்.

ganesh-vasanthகதையின் காலம் எழுபதுகளின் இறுதி. ஓயே ஓயே என்று ஒசிபிசா குழுவின் பாட்டு ஒன்று சென்னையில் படு பிரபலமாக இருந்த காலம். பேப்பரைத் திறந்தால் தினமும் காஸ் வெடித்து மனைவி சாவு, கணவன்/மாமியார் கைது என்று செய்தி வந்து கொண்டிருந்த காலம். என் மகள் நாராயணியை அவள் கணவன் – ஐ ஏ எஸ் அதிகாரி – கொன்றுவிட்டு காஸ் வெடித்து சாவு என்று சமாளித்துவிட்டான் என்று ஒரு குருட்டு அப்பாவும் வசந்த் சைட் அடிக்க வசதியாக அவரது இளைய மகள் பிரதிமாவும் கணேஷ்/வசந்தை அணுகுகிறார்கள். கணவனுக்கு இரண்டாவது கல்யாணம் நடக்கப் போகிறது. கணேஷ்-வசந்த் துப்பறிந்து கேஸ் போடலாம் என்று சொல்ல வரும்போது எல்லாரும் சமாதானம் ஆகிவிடுகிறார்கள். குருட்டு அப்பா ஏதோ தப்பாக சொல்லிவிட்டேன், கேஸ் எல்லாம் போடப்போவதில்லை என்கிறார். அதிகாரி மணம் செய்து கொள்ளப் போகும் பெண் தாக்கப்படுகிறாள். என்ன மர்மம் என்று வழக்கம் போலத் துப்பறிகிறார்கள்.

அப்பா குருடு இல்லை, மகளிடமே நடிக்கிறார். எதற்கு? Sympathy உருவாக்கவாம். உருவாக்கி என்ன செய்ய? கடைசியில் மர்மம் எல்லாம் ஜூஜூபியாக அவிழ்கிறது. யாரோ எடிட்டர் அவ்வளவுதான் பக்கம் என்று சொல்லிவிட்டாரோ என்னவோ, நேராக ஒரு confession!

கணேஷ்-வசந்த் கதைகளின் மீது எனக்கு இருக்கும் ஆர்வம் மர்மங்களாலோ அல்லது துப்பறிவதிலோ இல்லை. கதாபாத்திரங்கள் – குறிப்பாக வசந்த் என் பதின்ம வயதுகளின் ஹீரோவாக இருந்ததுதான் முக்கிய காரணம். இன்றைய இளைஞர்களை கணேஷ்-வசந்த் நாவல்கள் கவருமா என்பது சந்தேகம்தான். இந்த குறுநாவல் அந்த சந்தேகத்தை இன்னும் வலுவாக்குகிறது. எனக்கு நாஸ்டால்ஜியா, என் blog, அதனால் கணேஷ்-வசந்த் கதை படித்தால் நாலு வரி எழுதிவிடுகிறேன்.

கணேஷ்-வசந்த் ரசிகர்களுக்கு மட்டும்தான்.


தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம்

Advertisements
3 பின்னூட்டங்கள்
  1. kesavamani permalink

    RV Sir, தங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த கணேஷ்-வசந்தை தாண்டிவந்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.

    Like

  2. // இன்றைய இளைஞர்களை கணேஷ்-வசந்த் நாவல்கள் கவருமா என்பது சந்தேகம்தான்// முப்பது வயதை இளைஞன் லிஸ்டில் வைத்தால் கவருகின்றது என்று நம்பவேண்டும்.

    Like

  3. கேசவமணி, எல்லா கணேஷ்-வசந்த் கதைகளையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இன்னும் குறையவில்லையே!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: