எஸ். ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள்

s.ramakrishnanஎஸ்.ரா.வின் நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள் என் reference-களில் ஒன்று. தொகுப்புகள் தளத்தில் இவற்றில் சில தவிர மிச்ச அனைத்துக்கும் இணைப்புகள் கொடுத்திருக்கிறார்கள். அருணா உபயத்தில் தெரிய வந்தது. சிங்கமணிக்கு ஒரு ஜே!

சிங்கமணியும் ஜெயமோகன் தேர்வுகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது அப்போதுதான் தெரிந்தது. இன்றைக்கு எங்கள் லிஸ்டில் அதிக இணைப்புகள் இருப்பதால் அதை தொடர வேண்டி இருக்கிறது…

அழியாச்சுடர்கள், தொகுப்புகள், ஓப்பன் ரீடிங் ரூம் தொகுப்பாளர்கள் மிச்ச சிறுகதைகளை தேடிப் பதிப்பித்தால் இன்னும் சவுகரியம். குறிப்பாக பல ஈழ எழுத்தாளர்களின் சிறுகதைகள் நூலகம் தளத்தில் புத்தகங்களின் ஒரு பகுதியாகக் கிடைக்கிறது. pdf வடிவத்திலிருந்து கட் பேஸ்ட் செய்யும் வசதி எனக்கு கிடையாது. அதனால் மொத்த புத்தகத்துக்கும் சுட்டி கொடுத்திருக்கிறேன். அதை அப்படி கட் பேஸ்ட் செய்ய முடிந்தால் வசதியாக இருக்கும்.


தொகுக்கப்பட்ட பக்கம்: References, எஸ். ராமகிருஷ்ணன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: ஜெயமோகன் தேர்ந்தெடுத்த தமிழ் சிறுகதைகள்