எஸ். ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள்

s.ramakrishnanஎஸ்.ரா.வின் நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள் என் reference-களில் ஒன்று. தொகுப்புகள் தளத்தில் இவற்றில் சில தவிர மிச்ச அனைத்துக்கும் இணைப்புகள் கொடுத்திருக்கிறார்கள். அருணா உபயத்தில் தெரிய வந்தது. சிங்கமணிக்கு ஒரு ஜே!

சிங்கமணியும் ஜெயமோகன் தேர்வுகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது அப்போதுதான் தெரிந்தது. இன்றைக்கு எங்கள் லிஸ்டில் அதிக இணைப்புகள் இருப்பதால் அதை தொடர வேண்டி இருக்கிறது…

அழியாச்சுடர்கள், தொகுப்புகள், ஓப்பன் ரீடிங் ரூம் தொகுப்பாளர்கள் மிச்ச சிறுகதைகளை தேடிப் பதிப்பித்தால் இன்னும் சவுகரியம். குறிப்பாக பல ஈழ எழுத்தாளர்களின் சிறுகதைகள் நூலகம் தளத்தில் புத்தகங்களின் ஒரு பகுதியாகக் கிடைக்கிறது. pdf வடிவத்திலிருந்து கட் பேஸ்ட் செய்யும் வசதி எனக்கு கிடையாது. அதனால் மொத்த புத்தகத்துக்கும் சுட்டி கொடுத்திருக்கிறேன். அதை அப்படி கட் பேஸ்ட் செய்ய முடிந்தால் வசதியாக இருக்கும்.


தொகுக்கப்பட்ட பக்கம்: References, எஸ். ராமகிருஷ்ணன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: ஜெயமோகன் தேர்ந்தெடுத்த தமிழ் சிறுகதைகள்

11 thoughts on “எஸ். ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள்

 1. ஆர்.வி – இந்த லிஸ்டில் 90 கதைகள் வரை படித்து விட்டேன். மீதியைப் படித்து விட்டு , ஜே. மோவின் லிஸ்டையும் படிக்க வேண்டும். அவருடையதில் 100 படித்து மீதி பாக்கி வைத்திருக்கிறேன். இந்த லிஸ்ட பைத்தியம் எப்ப விடும் என்று தெரியவில்லை. வேறு எதாவது படிக்கும் போது கூட home work முடிக்காதது போல guilty ஆக உள்ளது:) சிங்கமணிக்கும் அழியாசுடர் ராமுக்கும் ஒரு ஜே! ஜேயெல்லாம் போட்டுருக்கேன் அதற்காகவாவது குறிப்பாக மீதி கதைகளை அவர்கள் விரைவில் ஏற்றுவார்கள் என நம்புகிறேன்:)

  Like

 2. // ஜேயெல்லாம் போட்டுருக்கேன் அதற்காகவாவது குறிப்பாக மீதி கதைகளை அவர்கள் விரைவில் ஏற்றுவார்கள் என நம்புகிறேன்:) // அருணா, நானும்!

  Like

 3. பட்டியல் வைத்து படிப்பது ஒரு வகையில் நம் வாசிப்பை மேன்மைபடுத்துகிறது. நானும் எஸ்.ரா&ஜெயமோகன் இவர்களின் பட்டியலை வைத்தே புத்தகங்களை வாசிக்கிறேன்.

  Like

 4. சித்திரவீதிக்காரன், பட்டியல்கள் – அதுவும் ஜெயமோகனின் பட்டியல்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. என்ன, மனிதர் 12 வருஷம் முன்னாள் போட்ட பட்டியலை அப்டேட் செய்ய மாட்டேன் என்கிறார்!

  Like

 5. மிக்க நன்றி. எஸ் ரா கொடுத்த பட்டியலில் 93 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் திண்ணை, பண்புடன் குழுமம் ஆகியவற்றிலிருந்தே தொகுக்கப்பட்டுள்ளது. இதில் பெரிய பங்கு சென்ஷியையே சாரும். அவருக்குத்தான் நன்றிகளை சொல்ல வேண்டும். ஜெமோவின் பட்டியல் முடிந்த அளவிற்கு விரைவில் தொகுக்கப்படும். நன்றிகளுடன் சிங்கமணி

  Like

 6. சிங்கமணி – ஒரு மிகப் பெரிய நன்றி. ஜெ,மோவோட பரிந்துரையை இந்த தளத்துல இருக்கற format ல வேற இப்ப மாத்தி இருக்கீங்க. தினமும் அங்க வந்து படிக்க வேண்டியது தான் இனி பாக்கி. கலக்கறீங்க போங்க!

  Like

  1. நன்றி அருணா, தினமும் ஏதாவது செய்ய முடியுமா தெரியல, முயற்சி செய்வோம்…. நேற்று பாரதியின் ரயில்வே ஸ்தானம் சிறுகதை மிகவும் சிரமமாக ஆயிற்று….. பாரதியின் கதைகள் புத்தகத் தொகுப்பில் இந்த சிறுகதை இல்லை அவருடைய கட்டுரைகள் தொகுப்பிலிருந்தது. ஜெமோ நல்ல வேளை தந்துள்ளார் என்றே நினைக்கிறேன். கூடிய விரைவில் முழுதும் தொகுக்க முயற்சிப்போம்.

   நன்றிகளுடன் சிங்கமணி

   Like

 7. சிங்கமணி, என் தரப்பிலும் நன்றி! என் ஜெயமோகன் லிஸ்ட் தொகுப்பில் இன்று உங்களுடையதை விட நிறைய கதைகள் இருக்கின்றன, இன்னும் பத்து updates பாக்கி வேறு. பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

  Like

 8. வணக்கம் ஆர் வி. நம்முடைய தொகுப்புகள் தளத்தில் அனைத்தும் உபயோகபடுத்தப்பட்டுவிட்டது. மேலும் பல கதைகளுக்கு லிங்க் கொடுத்திருக்கிறேன். என்னிடம் அனைத்து புத்தகங்கள் இருந்தும் Scan செய்ய வசதியில்லை. நண்பரிடம் கொடுத்திருக்கிறேன் அவர் டைப் செய்து கொடுத்ததும் மிச்சமுள்ள கதைகள் பதிவேற்றப்படும். நன்றிகளுடன் சிங்கமணி

  Like

 9. வணக்கம் ஆர் வி., நம் தமிழ்த் தொகுப்புகள் தளம் முற்றிலும் புதியதாக வேறு வடிவத்தில் உள்ளது. அதன் முகவரி http://www.thoguppukal.in/ இத்தளத்தில் மேலும் பல புதிய பதிவுகள் பதிவேற்றப்பட்டுள்ளது. பார்த்து பயன் பெறுக…….. நன்றிகளுடன் சிங்கமணி.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.