Skip to content

அகிலனின் “வெற்றித் திருநகர்”

by மேல் ஜனவரி 7, 2013

அகிலன் எனக்கு ஒரு pet peeve. என்னால் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியாத ஒரு எழுத்தாளர். அதுவும் சிறு வயதில் குற்றம் குறை அவ்வளவாகத் தெரியாது, அப்போதே என்னால் கயல்விழியை தாங்க முடியவில்லை. ஒரு காலகட்டத்தின் ஆதர்சமாக இருந்தவர், விருது பெற்ற எழுத்தாளர் இவ்வளவு மோசமாகவா எழுதுவார் என்ற சந்தேகத்திலேயே நானும் ஏழெட்டு புத்தகம் படித்துப் பார்த்துவிட்டேன், எல்லாமே பேப்பருக்குப் பிடித்த கேடுதான்.

அகிலன் எழுதியவற்றில் எனக்கு ஓரளவாவது தேறுவது வெற்றித் திருநகர் என்ற சரித்திர நாவல்தான். விஸ்வநாத நாயக்கர் அப்பா நாகமரை எதிர்த்து வென்றது ஒரு உன்னதமான நிகழ்ச்சி. அதை அகிலனால் கூட கெடுக்க முடியவில்லை. 🙂

கிருஷ்ணதேவராயரை தீர்க்க தரிசனம் நிறைந்த ஒரு மன்னராக – அதுவும் ஒன்றான பாரத நாடு என்ற எண்ணம் உடையவராகவும், ராஜபுதன நாடுகளோடு சேர்ந்து முகலாயரை எதிர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவராகவும் சித்தரித்திருக்கிறார். அவரது சபையில் இருக்கும் பிரபுக்கள் அதை உணர முடியாததால் முட்டுக்கட்டை போடுகிறார்கள். ராயரால் அவர்களின் மனதை மாற்ற முடியவில்லை.

அமைச்சராக இருக்கும் சாளுவர் ராயருக்குப் பிறகு விஜயநகர சாம்ராஜ்யம் நிற்காது என்பதை உணர்கிறார். மதுரையைத் தலைநகராகக் கொண்ட இன்னொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதற்கு தன் மாப்பிள்ளையை மன்னராக்க பல சதிகளை செய்கிறார். விஸ்வநாதனுக்கும் தன் மகள் லக்ஷ்மிக்கும் உள்ள ஈர்ப்பை ஊக்குவிக்கிறார். நாகமரைத் தூண்டிவிடுவதே அவர்தான். ராயர் விஸ்வநாதனையே மதுரை மன்னன் ஆக்கிய பிறகும் அவரது சதிக்கு பொருளே இல்லாமல் போய்விடுகிறது. இருந்தாலும் தான் வில்லன், அதனால் சதி செய்தாக வேண்டும் என்று தொடர்ந்து சதி செய்து கொண்டே இருக்கிறார். அவர் கடைசியில் லக்ஷ்மியை மணக்கக் கூடாது என்று விஸ்வநாதனிடம் சத்தியம் வாங்கிக் கொள்வது ஒன்றுதான் உருப்படியான வில்லத்தனமாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் வருவது போல (ராஜராஜ சோழன் திரைப்படத்தில் சிவகுமாரும் முத்துராமனும் இப்படி சண்டை போட்டுக் கொள்வதாக எனக்கு மங்கலான ஒரு நினைவு) நாகமரும் விஸ்வநாதனும் படைகளை மோதவிடாமல் தாங்கள் இருவரும் தனியாக கத்தி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். எதற்கு வீண் சண்டை என்று கோலி பம்பரம் ஏதாவது விளையாடி அதில் வெல்பவருக்கு தோற்றவர் அடிமை என்று சொல்லி இருக்கலாம். அகிலனுக்கு அது தோன்றாமல் போய்விட்டது.

கிருஷ்ணதேவராயரிடம் பல இன்றைய விழுமியங்களை – ஒன்றான பாரத நாடு இத்யாதி – ஏற்றி இருக்கிறார். ஜெயமோகனிடம் சமீபத்தில் இப்படி இன்றைய விழுமியம் அன்றைய மனிதர்களிடம் இருக்கிறதே என்று கமென்ட் அடிப்பதைப் பற்றி கொஞ்சம் இடி வாங்கினேன். நடக்கவே முடியாத விஷயம் என்று ஒன்றுமில்லை, அதற்கான சாத்தியக் கூறு இருந்தால் அது ஆசிரியரின் கற்பனை என்று விட்டுவிட வேண்டும் என்று அவர் சொன்னார். அதற்கான சாத்தியக் கூறு உண்டு என்று நிறுவ கொஞ்சம் வலுவான ஆதாரம் வேண்டும் என்றுதான் எனக்கு இன்னும் தோன்றுகிறது. ராயர் ராணா சங்காவுக்கு உதவி செய்தார் என்று ஏதாவது இருந்தால் சரி, இல்லாவிட்டால் இப்படி எழுதுவது எனக்கு உறுத்தத்தான் செய்கிறது.

வெற்றித் திருநகர் கிழக்கு தளத்தில் கிடைக்கிறது. விலை 250 ரூபாய்.

ஆனால் என்ன குறை சொன்னாலும் இதுதான் எனக்கு அகிலனின் சிறந்த சரித்திர நாவல். இது மட்டுமே எனக்கு கொஞ்சமாவது அப்பீல் ஆகிறது.

வெற்றித் திருநகர் ஜெயமோகனின் வணிக சரித்திர நாவல்களின் இரண்டாம் பட்டியலில் இடம் பெறுகிறது. என் கண்ணில் அது முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேங்கையின் மைந்தனை விட நல்ல நாவல்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

Advertisements
4 பின்னூட்டங்கள்
  1. ஏதோ கேள்விப் படாத நாவலாக இருக்கின்றது. வேங்கையின் மைந்தன் அவ்வளவு ஒன்றும் மோசமில்லை. அங்கங்கு கொஞ்சம் ஜவ்வாக இருந்தாலும் ஓகே ரகம். கயல் விழி தூக்கம்தான் வரும், அதுவும் சினிமாவாகி இன்னும் கெடுக்கப்பட்டது. நீங்கள் சொல்லும் புத்தகத்தை, ஓசியில் கிடைத்தால் படிக்கலாம் போல.

    Like

  2. kesavamani permalink

    அவர் கதைகளை ஓசியில் வாசிப்பது கொடுமை என்றால், காசு கொடுத்து வாங்கிப் படிப்பது இன்னும் கொடுமை .

    Like

  3. ரெங்கசுப்ரமணி மற்றும் கேசவமணி, என்ன அகிலனைக் கண்டால் கரித்துக் கொட்டுபவன் நான் மட்டும் இல்லை போலிருக்கிறதே!

    Like

Trackbacks & Pingbacks

  1. அகிலனின் கயல்விழி | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: