Skip to content

காதரின் ஸ்டாக்கெட் எழுதிய “ஹெல்ப்”

by மேல் ஜனவரி 12, 2013

The_Help_movieஹெல்ப் போன வருஷம் திரைப்படமாக வந்து வெற்றி பெற்றது. ஆக்டேவியா ஸ்பென்சருக்கு சிறந்த குணசித்திர நடிகைக்கான ஆஸ்கார் கிடைத்தது. வயோலா டேவிசுக்கும் விருது கிடைத்திருக்க வேண்டும். இவர்கள் இருவரைத் தவிர ஹில்லியாக நடித்த ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்டும் கலக்கி இருந்தார். சிறந்த நடிப்பு, சுவாரசியமான கதை இரண்டும் திரைப்படத்தை உயர்த்தின. ஆனால் படம் உலக மகா சிறந்தது இல்லை, அதற்கு அடுத்த படியில்தான் இருந்தது.

kathryn_stockettபடத்தைப் பார்த்ததிலிருந்து நாவலையும் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். சமீபத்தில் ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். புத்தகமும் அப்படித்தான். சுவாரசியமானது, ஒரு காலகட்டத்தை/சூழலை நமக்கு காட்டுகிறது, ஆனால் உலக மகா புத்தகம் இல்லை.

ஐம்பதுகள். அமெரிக்காவில் மிஸ்சிசிபி மாநிலம் கறுப்பர்களுக்கு எதிரான இன வெறியில் முன்னணியில் இருந்தது. ஒரு டிபிகல் சிறு நகரம். வெள்ளையர்கள் நகரத்துக்கு கறுப்பர்கள் “சேரி”யிலிருந்து தலைமுறைகளாக சென்று வீட்டு வேலை செய்கிறார்கள். ஹில்லி என்ற குடும்பத் தலைவி ஒரு டிபிகல் bully. அவளைப் பின்பற்றும் ஒரு கூட்டம். பல விதங்களில் அவமானப்படுத்தப்படும், ஒடுக்கப்படும் கறுப்பு வேலைக்காரிகள். தற்செயலாக ஸ்கீட்டர் என்ற பெண் கறுப்பு வேலைக்காரிகளின் கண்ணோட்டத்தை புத்தகமாக எழுத முனைகிறாள். அவளுக்கு தகவல் தருவதாகத் தெரிந்தால் இவர்கள் ஒழிந்தார்கள். ஆனாலும் ஒருவர் இருவர் என்று ஆரம்பித்து பலரும் அவளுக்கு “பேட்டி” கொடுக்கிறார்கள். புத்தகம் தங்களைச் சித்தரிக்கிறது என்று உணரும் வெள்ளை எஜமானிகள் தவிக்கிறார்கள்.

கதையின் உச்சக்கட்டம் என்று ஆசிரியர் நினைத்திருப்பது மின்னி என்ற வேலைக்காரி ஹில்லிக்கு கேக் செய்து கொடுக்கும் நிகழ்ச்சிதான். ஆனால் எனக்கு உச்சக்கட்டமாகத் தெரிவது பலரும் ஸ்கீடடரிடம் பேச வரும் இடம்தான்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

Advertisements

From → World Fiction

8 பின்னூட்டங்கள்
 1. நாவலை வாசிக்க வாய்ப்பு கிட்டாவிட்டாலும் படத்தை வாய்ப்பு கிட்டும் போது பார்க்கிறேன். பகிர்விற்கு நன்றி.

  Like

 2. Balajee permalink

  இந்த அறிமுகத்துக்கு நன்றி ஆர்.வி.. Mississippiயில் கொஞ்ச காலம் இருந்தவன் என்ற முறையிலும், அங்கு இது போன்ற சின்னத்தனமான அனுபவங்களை சிறிது எதிர் கொண்டவன் என்றதாலும் (பல நல்லனுபவங்களும் உண்டு) நான் இதை கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

  Jackson தான் தலைநகரம் சார், என்ன இப்படி சிறு நகரம் என்று கூறிவிட்டீர்கள். அப்போ நான் இருந்ததெல்லாம்? 😉

  Like

 3. அருணா permalink

  ஆர்.வி – உங்ககிட்ட வாங்கிட்டு போய் படிச்சது தான். நல்லா இருந்தது. ஆனால் படத்தை முதலிலேயே பார்த்து விட்டதால் வியோலா டேவிசும், எம்மா ஸ்டோனும், அக்டோவியா ஸ்பென்சருமே கண் முன்னால் வந்தது கொஞ்சம் உபத்திரவமாக இருந்தது.

  Like

 4. அருணா permalink

  பாலாஜி – மிஸ்ஸிஸிபில்ல இருந்துருக்கீங்களா? நான் கலிபோர்னியா தாண்டி எங்கயுமே அமெரிக்கால இருந்ததில்ல. அதனாலயே என்னுடையது ஒரு முழு அமெரிக்க அனுபவம் இல்லைன்னு தோணும். Missisippi Burning என்ன ரொம்ப ரொம்ப பாதிச்ச படம்.

  Like

 5. Balajee permalink

  உண்மைதான். Mississippi’யில் இருந்தது மிக நல்ல அனுபவம் அருணா. எவரும் தேடித் போகாத ஒரு இடம். எனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் ஒரு அதிர்ஷ்டமே. அப்பொழுது அதை உணரவில்லை நான், obviously :).

  அதனாலேயே எனக்கு பல southern dramas & similar small town movies மீது ஒரு தனிப்பட்ட விருப்பம். நிறைய படங்கள் மனதுக்கு நெருக்கமானவை (Driving Miss Daisy, The Green Mile, …). சில படங்களின் பாத்திரங்கள் நான் நேரில் சந்தித்த மனிதர்களை அப்பட்டமாக நினைவுபடுத்தும். அது ஒரு added value தானே?

  Like

 6. Saw this film last year, i nice film as you said but not The Best. Anyway its new thing to know about people who had lived like this.. Thanks for sharing your novel experience regarding this film..

  Like

 7. அருணா permalink

  பாலாஜி – எனக்கும் உங்களுக்கும் அமெரிக்கா சினிமா ரசனை ஒத்துப் போகும்னு நினைக்கிறேன். Southern Dramas எனக்கும் பிடிக்கும். நம் பார்வையிலிருந்து மிகவும் மாறுபடும் இடத்தில் இருப்பது என்பது நமக்கு பல திறப்புக்களை அளிக்கும்னு தான் நினைக்கிறேன்.

  Like

 8. பாலாஜி, ஜாக்சன்தான் தலைநகரா? என் பெண்ணின் பாடப் புத்தகங்களை கொஞ்சம் நானும் படித்து வைத்துக் கொள்ள வேண்டும்! எனக்கும் Driving Miss Daisy மற்றும் Green Mile பிடிக்கும். இந்திரகுமார், பாலாஜி குறிப்பிட்ட படங்களை பார்த்திருக்கிறீர்களா? சித்திரவீதிக்காரன், இவற்றையும் உங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: