ரொம்ப நாளாயிற்று இப்படி ஒரு படத்தை என்ஜாய் செய்து. உட்டி ஆலன் திரைக்கதையில் கலக்கிவிட்டார். திரைக்கதைக்காக அவருக்கு கிடைத்த ஆஸ்கார் முற்றிலும் சரியானவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய பாரிசில் ஒரு எழுத்தாளன். திருமணம் ஆகப் போகிறது. ஹாலிவுட்டில் திரைக்கதை ஆசிரியனாக நன்றாக சம்பாதிக்கிறான். ஆனால் அவனுக்கு இலக்கியம் படைக்க ஆசை. மனைவி ஆகப் போகிறவளுக்கு இலக்கியம் கிலக்கியம் எல்லாம் ஒரு விஷயம் இல்லை. 1920களின் பாரிஸ் – ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரல்ட், ஹெமிங்வே, பிகாசோ, கோல் போர்ட்டர், சால்வடார் டாலி, லூயி புனுவெல், கெர்ட்ரூட் ஸ்டெய்ன், டி.எஸ். எலியட் போன்றவர்களின் பாரிஸ் – அவனைப் பொறுத்த வரை ஒரு லட்சிய உலகம். ஒரு நாள் இரவு பாரிசில் அவனுக்கு வழி தவறிவிடுகிறது. இரவு பனிரண்டு மணிக்கு ஒரு காரில் வரும் ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரல்ட்! பிறகு அவன் தினமும் அந்த இடத்துக்கு வந்து இரவு 12 மணிக்கு 1920களின் பாரிசுக்குப் பயணிக்கிறான். ஹெமிங்க்வேயை சந்திக்கிறான். கெர்ட்ரூட் ஸ்டெய்ன் அவனது நாவலைப் படிக்க வாங்கிக் கொள்கிறாள். பிகாசோவின் காதலிக்கும் அவனுக்கும் பரஸ்பர ஈர்ப்பு ஏற்படுகிறது. ஒரு நாள் இரவு அவர்கள் இருவரும் 1920களின் பாரிசிலிருந்து அவளது லட்சிய உலகத்துக்கு – La Belle Epoque – 1890களின், பால் காகின், டூலோஸ்-லாட்ரெக் ஆகியோரின் பாரிஸ் – பயணிக்கிறார்கள். பால் காகினுக்கோ மைக்கேலான்ஜெலோவின் உலகம்தான் லட்சிய உலகம்!
ஓவன் வில்சன் இத்தனை சிறப்பாக நடிப்பார் என்று நான் நினைத்ததில்லை. டாலி வரும் காட்சி simply superb! கீழே அந்தக் காட்சியைக் கொடுத்திருக்கிறேன். படத்தின் நடுவில் இந்தக் காட்சி வருவதால் முழுதும் புரியாமல் போகலாம்; இருந்தாலும் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
2011இல் வந்த திரைப்படம். உட்டி ஆலன் இயக்கம். ஓவன் வில்சன், ரேச்சல் மக்காடம்ஸ், கேத்தி பேட்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். நான் டிவிடியைப் பார்த்தேன், ஆனால் யூட்யூபிலேயே கிடைக்கிறதாம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்
தொடர்புடைய சுட்டி: IMDB குறிப்பு
Thanks, RV. I would love to watch this movie
PAK
LikeLike
நல்ல கற்பனைக்கதையாக இருக்கிறதே! வாய்ப்பு கிட்டும்போது கட்டாயம் பார்க்கிறேன். பகிர்விற்கு நன்றி.
LikeLike
ஆர்.வி – நான் உட்டி ஆலனின் பரம ரசிகை. அவர் படங்கள் அனைத்தும் பெரும்பாலும் பார்த்து இருக்கிறேன். Netfllix ல் ஒரே வாரத்தில் மொத்தமாக, குளிக்காமல் கொள்ளாமல், சாப்பாடு வாங்க ஒரு வேளை மட்டும் வெளியே போய் வந்து, போனையும் அணைத்து விட்டு முழி பிதுங்கும் வரை சினிமா பார்ப்பதில் உள்ள ஆனந்தம்! அதுவும் உட்டி ஆலன் என்றாம் பரமானந்தம். இதை இந்தியாவில் பார்த்தேன். அவருடைய கிளாசிக்கில் வராது, ஆனாலும் நல்ல படம். ஒரு நியூராடிக்கான, நியூயார்க் ஜூ என்றால் இவரை நினைக்காமல் இருக்கவே முடியாது
ஓவன் வில்சன் வெஸ் ஆண்டர்சனின் ராயல் டெனன்பம்ஸிலும் மிக நன்றாக நடித்திருப்பார். How do you know என்ற தஸ்தாவெஸ்கியின் அசடன் சாயலில் பால் ரட் நடித்த படத்திலும் நன்றாக நடித்திருப்பார்,
LikeLike
I love this film i also wore a small post on this film.. i am completely blown by this movie.. nice share..
LikeLike
சித்திரவீதிக்காரன், PAK, நீங்கள் இருவரும் Midnight in Paris படத்தை நிச்சயமாக ரசிப்பீர்கள். இந்திரகுமார், இன்னொரு ரசிகரை சந்திப்பதில் மகிழ்ச்சி! அருணா, Royal Tenenbaums கொஞ்சம் பயமுறுத்துகிறது. How do you know – கேள்விப்பட்டதே இல்லை.
LikeLike