Skip to content

தி. ஜானகிராமனின் சிறுகதை – துணை

by மேல் ஜனவரி 17, 2013

thi_janakiramanதி.ஜா.வின் ஒரு பிரமாதமான சிறுகதையை ஆபிதீன் மீண்டும் பதித்திருக்கிறார். எப்போது படித்தாலும் புன்னகை வரவழைக்கும் சிறுகதை. தாத்தாக்களுக்கு துணையாகப் போகும் ஒரு “இளைஞனின்” அனுபவம். கட்டாயம் படியுங்கள்!


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள், தி.ஜா. பக்கம்

தொடர்புடைய சுட்டி: துணை பற்றி நண்பர் சிவா கிருஷ்ணமூர்த்தி

Advertisements
9 பின்னூட்டங்கள்
  1. சிவா கிருஷ்ணமூர்த்தி permalink

    துணை – எனது ஆல் டைம் பேவரிட்டில் ஒன்று.
    அதைப் பற்றி சிலாகித்து ஆம்னிபஸ்ஸில் எழுத முயற்சித்தது கீழே…

    http://omnibus.sasariri.com/2012/10/blog-post_2552.html

    சிவா கிருஷ்ணமூர்த்தி

    Like

  2. Balajee permalink

    நானும் அடிக்கடி எடுத்துப் படிக்கும் கதை இது 🙂

    -பாலாஜி

    Like

  3. நல்ல கேலியான நடையில் எழுதப்பட்ட கதை. வயிறு வலிக்க சிரிக்க வைக்காது, ஜில்லென்று சந்தோஷ புன்னகையை தோற்றுவிக்கும். படித்து முடித்ததும் மனதும் லேசாக இருக்கும். அவர்களின் உரையாடல்களும், வர்ணனைகளும் பிரமாதப்படுத்தியிருக்கின்றார்.

    Like

  4. ஜானகிராமனின் சிறுகதை வாசித்ததில்லை. வாசித்துவிட்டு மறுமொழியிடுகிறேன். பகிர்விற்கு நன்றி.

    Like

  5. அருணா permalink

    ஆர்.வி – முடிவு முதலிலேயே ஊகிக்க முடிவது என்றாலும், தாத்தாவின் பெயர், வீட்டு வர்ணனை, தஞ்சாவூர் குசும்பு சொல்லாட்சி எல்லாம் சேர்ந்த புன்னகையை வரவழைக்கும் கதை இது. எனக்கு என்னமோ தி.ஜாவின் நாவல்களை விட அவர் சிறுகதைகளே அதிகம் பிடிக்கிறது. அவர் சிறுகதைகளில் சில பக்கங்களில் வரையும் சித்திரம் அபாரமானது.

    Like

  6. துணை க்கு நன்றி. மொத்தமாய் 30 வருடம் ஊரை விட்டு கிளம்பி, காவேரிக்கரைப் பக்கம் போய் 14 வருடங்கள் ஆன பேர்வழி அடியேன். முன்னாள் காவேரிக்கரை தற்போது ரியோ க்ரேண்ட் கரை. திடீரென தமிழக ஞாபகம் வந்தால், அதிலும் வாஞ்சியாறு ஸ்பரிசத்தை நினைத்தால் (காவிரி => அரசலாறு=>வாஞ்சியாறு) – படிக்க எடுக்கறது தி.ஜா நூல்களை மட்டுமே. 10, 15 தடவையாக திரும்பி, திரும்பி அக்பர் ஸாஸ்திரியை மட்டும். என்னத்தான் இணையத்தில் ஜெ.மோ, நா.நா (இவர் எங்கள் வீட்டில் தங்கிச் சென்றது என்றுமே மகிழ்வான நிகழ்வு) என படிக்க முடிந்தாலும், இவர்களுடைய எழுத்துக்கள் சில சமயங்களில் இன்று வரை சாப்பிடாத சொதி, புளிசேரி போல… தி.ஜா எழுத்து பொரிச்ச குழம்பு, பால் கொழுக்கட்டை மாதிரி. இல்லாமல் முடியாது.

    Like

  7. கிழங்களுக்கிடையில் என்ன வெகண்டையான உரையாடல்கள். தஞ்சாவூர்
    குறும்புப் பேச்சுக்களுக்கு தி.ஜா வை யாரால் அடித்துக் கொள்ள முடியும்?

    Like

  8. சிவா, பாலாஜி, ரெங்கசுப்ரமணி, அருணா, ராதாகிருஷ்ணன் துரைசாமி எல்லாரும் துணை சிறுகதையை ரசிப்பதில் துணையாக இருந்தாலும் வாஞ்சியாறு வாசன் பிள்ளையின் மறுமொழி பிரமாதம். அது என்ன சார் தினமும் பொரிச்ச குழம்பு சாப்பிடுகிறீர்களா? எப்படி நடக்கிறது? ரியோ கிராண்டே கரையில் எங்கு இருக்கிறீர்கள்? சித்திரவீதிக்காரன், இன்னுமா படிக்கவில்லை?

    சிவா, உங்கள் கட்டுரைக்கான சுட்டியை பதிவில் இணைத்துவிட்டேன்.

    Like

  9. 🙂 வாஞ்சியாறு http://tinyurl.com/vaanjiaaru வாசன் – பட்டப்பெயருக்கு நன்றி, ரொம்ப பிடித்திருக்கிறது. நான் 1/2 பாதி வாஞ்சியாறு – பாதி கொள்ளிடம். எல்லாமே காவேரித்தண்ணீர்.

    >> ரியோ கிராண்டே கரையில் எங்கு இருக்கிறீர்கள்? >> http://vassan.kollidam.com/#fragment-3

    ஆர்வமுள்ள தமிழ் வாசகன் நான் – அவ்வளவே. உங்கள் வலைப்பதிவுகளுக்கு நன்றி.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: