என்னைக் கவர்ந்த திரைப்படங்களில் நாடோடி மன்னனும் ஒன்று. எம்ஜிஆரின் எல்லா சாகசப் படங்களுக்கும் பின்னால் ஏதோ ஒரு ஆங்கிலத் திரைப்படமோஅல்லது புத்தகமோ இருக்கும் என்பதை பின்னால்தான் புரிந்து கொண்டேன். பிற்காலத்தில் Prisoner of Zenda புத்தகத்தைப் படித்தபோது நாடோடி மன்னனின் மூலக்கதையை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
Zenda இத்தனைக்கும் அசகாய சூரத்தனம் நிறைந்த கதை அல்ல. என் கண்ணில் அதன் கவர்ச்சியே கதை நம்பக் கூடிய விதத்தில்தான் எடுத்துச் செல்லப்படுவதுதான். ஒரே ஆள் நூறு பேரை சுற்றி சுற்றி அடிப்பது போன்ற மிகைப்படுத்தல்கள் எல்லாம் கிடையாது. கதையில் ஒரே ஒரு அதிசயம்தான். அதற்கும் ஹோப் பலமான அடிப்படை போட்டிருப்பார். Zenda-வை விட அதன் தொடர்ச்சியான Rupert of Hentzau இன்னும் திறமையாகப் பின்னப்பட்ட கதை. இரண்டையும் minor classics என்று சொல்லலாம்.
Zenda நாவல் 1894-இல் வெளிவந்தது. ரூபர்ட் 1898-இல் வெளிவந்தது. கூடன்பர்க் தளத்தில் இரண்டு புத்தகத்தையும் படிக்கலாம்.
Zenda நாவல் பல முறை திரைப்படமாக்கப்பட்டது. 1937-இல் ரொனால்ட் கோல்மன், டக்ளஸ் ஃபேர்பாங்க்ஸ், டேவிட் நிவன் நடித்து வெளியான படம்தான் சிறந்தது என்று சொல்வார்கள். பார்க்கக் கூடிய படம்தான். ஆனால் எனக்கு எப்போதும் நாடோடி மன்னன்தான் டாப்!
பதின்ம வயதில் படிக்க சுவையான சாகசக் கதைகள். அந்த வயதில் இருக்கும் பையன்களுக்கு வாங்கிக் கொடுங்கள்!
பிற்சேர்க்கை: நண்பர் ரெங்கசுப்ரமணி அசோகமித்திரன் இந்த genre திரைப்படங்களைப் பற்றி எழுதியதை ஒரு பின்னூட்டத்தில் கொஞ்சம் சுருக்கமாகத் தந்திருக்கிறார். அது கீழே:
அசோகமித்திரன் அவரது ஆதி நாடோடி மன்னன் கட்டுரையில்
இரட்டை வேட கத்திச்சண்டை படங்களுக்கு முன் மாதிரியான படங்கள் மூன்று, Corsican Brothers, Man in the Iron Mask, Prisoner of Zenda. முதலிரண்டு நாவல்களில் கதாநாயகனின் அச்சாக இன்னொருவர் இருக்க முக்கியக் காரணம், அவர்கள் இரட்டையர்கள். ப்ரிஸனரில் வேறு வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள். பிரிஸனரில் காதலர்கள் காதலை தியாகம் செய்து விடுவார்கள். வில்லன் சாகாமல் எங்கோ ஓடி விடுவான்
ஆறாம் ஜார்ஜ் பட்டம் தரித்ததை ஒட்டி எடுக்கப்பட்டது. பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு, இன்னொரு பிரிட்டிஷ் முடிசூட்டு விழா நடந்தது. அப்போதும் இன்னொரு Prisoner of Zenda படம் வண்ணத்தில் வந்தது. இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெறவில்லை.
ஹிந்தியில் அப்படம் கைதி என்ற பெயரில் உப்புச்சப்பில்லாமல் வந்தது. அது பத்மினியின் முதல் அசல் ஹிந்திப்படம். நாடோடி மன்னன் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு அசல் படத்தின் கதியை அடைந்தது.
அந்தோணி ஹோப் வக்கீல் தொழிலை விட்டு முழு நேர நாவலாசிரியரானார். Rupert of Hentzau என்ற நாவலை எழுதினார். ரூபர்ட், பிரிஸனரின் வில்லன்.
இது சுருக்கம், அவரது வரிகளல்ல. அடுத்து வருவது அவரது வரிகள் அப்படியே.
//ஒரு மோசமான நாவல் கூட ஓரளவு சுவாரசியமான திரைப்படமாக மாற்றப்படலாம் என்பதற்கு Prisoner of Zenda ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.//
தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்
தொடர்புடைய சுட்டிகள்:
புத்தகத்தை இணையத்தில் படிக்க
Prisoner of Zenda – IMDB குறிப்பு
Reblogged this on nik*.
LikeLike
அசோகமித்திரன் அவரது ஆதி நாடோடி மன்னன் கட்டுரையில்
இரட்டை வேட கத்திச்சண்டை படங்களுக்கு முன் மாதிரியான படங்கள் மூன்று, கார்சிகன் பிரதர்ஸ், மேன் இன் தி ஐர்ன் மாஸ்க், தி பிரிஸனர் ஆஃப் சாண்டா. முதலிரண்டு நாவல்களில் கதாநாயகனின் அச்சாக இன்னொருவர் இருக்க முக்கியக் காரணம், அவர்கள் இரட்டையர்கள். ப்ரிஸனரில் வேறு வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள். பிரிஸனரில் காதலர்கள் காதலை தியாகம் செய்து விடுவார்கள். வில்லன் சாகாமல் எங்கோ ஓடி விடுவான்
ஆறாம் ஜார்ஜ் பட்டம் தரித்ததை ஒட்டி எடுக்கபட்டது. பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு, இன்னொரு பிரிட்டிஷ் முடிசூட்டு விழா நடந்தது. அப்போதும் இன்னொரு பிரிஸனர் ஆஃப் சாண்டா படம் வண்ணத்தில் வந்தது. இரண்டு படங்களும் பெரிய வெற்றிபெறவில்லை
ஹிந்தியில் அப்படம் கைதி என்ற பெயரில் உப்புச்சப்பில்லாமல் வந்தது. அது பத்மினியின் முதல் அசல் ஹிந்திப்படம். நாடோடி மன்னன் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு அசல் படத்தின் கதியை அடைந்தது.
அந்தோணி ஹோப் வக்கீல் தொழிலை விட்டு முழு நேர நாவலாசிரயரானார். ரூபர்ட் ஆஃப் ஹெண்ஸாவ் என்ற நாவலை எழுதினார். ரூபர்ட், பிரிஸனரின் வில்லன்.
இது சுருக்கம், அவரது வரிகளல்ல. அடுத்து வருவது அவரது வரிகள் அப்படியே
//ஒரு மோசமான நாவல் கூட ஓரளவு சுவாரசியமான திரைப்படமாக மாற்றப்படலாம் என்பதற்கு பிரிஸன்ர் ஆஃப் ஸெண்டா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு//
நான் நாவலைப் படித்ததுமில்லை, நாடோடி மன்னை பார்த்ததுமில்லை. இது அதிகப்படியான தகவல்களுக்கு.
ஆங்கில நாவல்களைப் படிக்க எப்படி முயன்றாலும் முடிவதில்லை, ஹிண்டு எக்ஸ்ப்ரெஸ் கூட படிக்க மனம் வருவதில்லை. என் மகள் படிக்க ஆரம்பிக்கும் போது அவள் கூட நானும் ஆங்கிலபுத்தகங்களை படிக்க முடிவு செய்துள்ளேன். (வயது 4 மாதங்கள்)
LikeLike
ரெங்கசுப்ரமணி, அசோகமித்திரன் நாடோடி மன்னன் genre திரைப்படங்களைப் பற்றி எழுதியதையும் இப்போது சுட்டியில் இணைத்துவிட்டேன். இந்திரகுமார், உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தது மகிழ்ச்சி!
LikeLike