ஹங்கர் கேம்ஸ்

hunger_gamesஇப்போதெல்லாம் என் பதினான்கு வயதுப் பெண் ஸ்ரேயாவுக்குப் பிடிக்கும் கதைகள் பல எனக்கும் பிடிக்கின்றன, எனக்குப் பிடிக்கும் கதைகளில் பல அவளுக்கும் பிடிக்கின்றன. அவள் சிபாரிசு செய்ததில் படித்த புத்தகம் (புத்தகங்கள்) ஹங்கர் கேம்ஸ் மற்றும் அதன் sequels.

ஹங்கர் கேம்ஸில் ஒரு ரியாலிடி ஷோ. 12 “மாவட்டங்கள்” ஒரு பதின்ம வயது இளைஞன்+இளைஞியை இந்த ஷோவுக்கு அனுப்ப வேண்டும். அங்கே அவர்கள் ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிக்கிறார்கள். கடைசியில் மிஞ்சுபவர்தான் வெற்றி பெறுகிறார். இதை டிவியில் காட்டுகிறார்கள், ஸ்பான்சர்கள் சில சமயம் மருந்து/ஆயுதம் ஆகியவற்றை அனுப்புகிறார்கள். அவர்களை தயார் செய்ய, மார்க்கெட் செய்ய ஒரு டீம் வேலை செய்கிறது. காட்னிஸ் எவர்டீன் என்ற பெண்ணும் அவளை விரும்பும் பீடா என்ற இளைஞனும் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை.

விறுவிறுப்பான கதை. ரியாலிடி ஷோவுக்கான ஆயத்தங்கள் எல்லாம் நம்பக் கூடியவையாக இருக்கின்றன. ஆனால் இலக்கியம் கிலக்கியம் எல்லாம் இல்லை, “வணிக எழுத்து”.

suzanne_collinsஇந்தக் கதையைப் படிக்கும்போது எனக்கு இந்த மாதிரி விறுவிறுப்பான கதைகள் ஏன் தமிழில் வருவதில்லை என்று தோன்றிக்கொண்டே இருந்தது. எப்போ பார்த்தாலும் காதல், ஆண்-பெண் உறவு, குடும்பம் இத்யாதி. இந்த மாதிரி genre-இல் குறிப்பிட வேண்டிய ஒரே மனிதர் சுஜாதா மட்டுமே. அவரது மவுசுக்கு அதுவும் ஒரு பெரிய காரணமாக இருக்கலாம்.

ஹங்கர் கேம்ஸ் 2008இல் வெளிவந்தது. எழுதியவர் சுசேன் காலின்ஸ். 2009இல் Catching Fire, 2010இல் Mockingjay என்று இரண்டு sequels வெளிவந்தன. முதல் புத்தகத்தைப் படித்தால் போதும், மற்றவற்றை தவிர்த்துவிடலாம்.

2012இல் திரைப்படமாகவும் வந்தது. ஸ்ரேயா அடுத்த திரைப்படம் எப்போது வரும் என்று காத்திருக்கிறாள்.


தொகுக்கப்பட்ட பக்கம்: SF

தொடர்புடைய சுட்டிகள்:
சுசேன் காலின்ஸின் தளம்
IMDB குறிப்பு