ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் இயக்கிய படங்களில் மிகவும் புகழ் பெற்றது சைக்கோதான். ஆனால் அதில் பாதி பெருமையாவது மூலக்கதையை எழுதிய ராபர்ட் ப்ளோக்கை சேரவேண்டும்.
சைக்கோவைப் பார்க்காதவர்கள், குறைந்த பட்சம் கேள்விப்படாதவர்கள் குறைவு. அதனால் கதைச்சுருக்கம் எல்லாம் எழுதி நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை. “பல ஆளுமைகள் நோயை” (multiple personality disorder) இதை விட சிம்பிளாக புரிய வைத்துவிட முடியாது. படம் பார்த்தாயிற்று, தெரிந்த கதைதான் என்றாலும், சீராக ஒரு அழுத்தமான முடிவை நோக்கிப் போகிறது.
கதையின் பலவீனம் என்பது திரைப்படம்தான். முன்னே பின்னே கதை தெரியாமல் படித்தால் முடிவு ஒரு revelation ஆக இருந்திருக்கும்.
Visual ஆக பார்க்க ஏற்ற கதை. நீங்கள் படமும் பார்த்ததில்லை, கதையும் படித்ததில்லை என்றால் நேராகப் படத்தைப் பாருங்கள். நாவலை ஒட்டியே திரைப்படம் போகிறது. படிப்பதை விட இன்னும் சிறப்பான அனுபவம் ஆக இருக்கும். நாவலுக்கும் திரைப்படத்துக்கும் எனக்கு ஒரே ஒரு வித்தியாசம்தான் தெரிகிறது. மூலக்கதையில் நார்மன் பேட்ஸ் குண்டான நாற்பத்து சொச்சம் வயதுக்காரன். திரைப்படத்தில் ஒல்லியான, இளமையான அந்தோணி பெர்கின்ஸ் நார்மன் பேட்சாக நடித்திருப்பார். அது ஒரு நல்ல மாற்றம், பயங்கரத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது.
தமிழிலும் மூடுபனி என்ற பாலுமகேந்திராவின் திரைப்படம் இதன் பாதிப்பில் உருவானதுதான். ஏன், சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் திரைப்படமும் இதன் மறு ஆக்கம்தான்.
சைக்கோ நாவல் 1959இல் வெளிவந்தது. திரைப்படம் 1960இல்.
படியுங்கள், திரைப்படத்தைப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்
தொடர்புடைய சுட்டிகள்:
IMDB குறிப்பு
ராபர்ட் ப்ளோக் பற்றிய விக்கி குறிப்பு