மலர்மன்னன் – அஞ்சலி

malarmannanமலர்மன்னன் எழுதிய நாயகன் பாரதி என்ற புத்தகத்தைப் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டேன். பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்களை சிறுகதைகளாக எழுதி இருக்கிறாராம். ஒரு சிறுகதை திண்ணை தளத்தில் படித்தேன், பிடித்தும் இருந்தது. படிக்க விரும்பும் புத்தகம் என்று அதைப் பற்றி எழுத எண்ணி இருந்தேன்.

அதற்குள் மலர்மன்னன் மறைந்தார் என்ற செய்தி. வருத்தமாக இருக்கிறது.

மலர்மன்னன் போன்றவர்களின் முக்கியத்துவம் அவர்கள் சென்ற பல தசாப்தங்களின் பெரும் அரசியல் ஆளுமைகளை அருகில் இருந்து பார்த்ததிலும் அவற்றை ஆவணப்படுத்தியதிலும்தான் இருக்கிறது. மலர்மன்னன் எல்லா நிகழ்ச்சிகளையும் ஹிந்துத்துவ ஆதரவு, திராவிட இயக்க எதிர்ப்பு (ஆனால் அண்ணா மீது அவருக்கு பெரிய soft corner உண்டு) என்ற filters மூலம்தான் பார்த்தார். ஆனாலும் அந்த ஆவணக் கட்டுரைகள் முக்கியமானவையே.

அதிதீவிர ஹிந்துத்துவவாதியான மலர்மன்னனுக்கும் அஹிந்துத்துவவாதியான எனக்கும் எக்கச்சக்க கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனாலும் அவர் தமிழ் ஹிந்து தளத்திலோ திண்ணையிலோ எழுதுவதை நான் தவறாமல் படித்தேன். அதுவே அவரது வெற்றி.


தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

தொடர்புடைய சுட்டிகள்:
பாரதியை சந்தித்த பாரதிதாசன் – மலர்மன்னனின் சிறுகதை
மலர்மன்னனின் “தி.மு.க. உருவானது ஏன்?”
நாயகன் பாரதி புத்தகத்தைப் பற்றி