கரெல் கபெக் எழுதிய “R.U.R.”

karel_capekஇன்றைக்கு ரோபோ என்ற வார்த்தை பிரபலமாக இருக்கிறது. ஷங்கர்-சுஜாதா உபயத்தில் எல்லாருக்கும் தெரிந்த வார்த்தை. அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு இன்னும் நூறு வருஷம் கூட ஆகவில்லை. செக்கோஸ்லொவாகிய எழுத்தாளரான கரெல் கபெக்தான் முதல் முறையாக அதை அவரது “ஆர்.யூ.ஆர்.” என்ற நாடகத்தில் உருவாக்கிப் பயன்படுத்தினார். R.U.R. என்பது Rossum’s Universal Robots என்பதின் சுருக்கம்.

r_u_rஇன்றைக்கு நாடகம் கொஞ்சம் cliched ஆக இருக்கிறது. ஆனால் வந்தபோது புதுமையாக இருந்திருக்கும். அதே எந்திரங்கள் உயிர் பெற்று உலகைக் கைப்பற்றும் கதைதான். அனேகமாக இதுதான் முதல் முறை அந்த தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். கடைசியில் இரு எந்திரன்கள் புதிய ஆதாம்-ஏவாளாக உருவெடுப்பதாக முடித்திருப்பது இன்றும் கொஞ்சம் புதுமையாகத்தான் இருக்கிறது.

நாடகத்தை இணையத்தில் படிக்கலாம். உங்களுக்கு போரடிக்க வாய்ப்பு இருக்கிறது.


தொகுக்கப்பட்ட பக்கம்: SF

தொடர்புடைய சுட்டிகள்:
கரெல் கபெக் பற்றிய விக்கி குறிப்பு
இணையத்தில் படிக்க