Skip to content

மதம் பிடித்த மதம்

by மேல் மார்ச் 1, 2013

நான் அநிருத்த பிரம்மராயர். பொன்னியின் செல்வனின் மறுபிறவி அல்ல. சிலிக்கன் ஷெல்ஃபின் புனைப் பிறவி.

ஒரு கவிதையுடன் அறிமுகமாகிறேன். நான் மட்டுமே இதை கவிதை என்று இது வரை கூறியிருக்கிறேன்.

– இதைப் வாசித்துப் பார்த்த ஒரு நண்பர் ”இது ஒரு கவிதையே அல்ல. ஏதோ ஒரு பிரச்சாரம். வார்த்தைகள் ஒரே எழுத்தில் தொடங்க ஒரு மெனக்கெடல். எனக்குப் புரியவுமில்லை” என்று ‘வாழ்த்தினார்’.

– மற்றொரு நண்பர் இதைப் வாசிக்காமலேயே வல்லுனர் விளக்கம் கொடுத்தார். இவ்வாறு: ‘இதை எழுதியவன் மாட்டினால் அப்படியே கசக்கி பிழிந்துவிடுவேன்’ என்று கொலை வெறிகொண்டார். ஆனால் செய்யவில்லை. ”தமிழில் இப்படி ஒரு வார்த்தையே கிடையாது” என்று முதல் வரியின் முதல் வார்த்தையையே மறுத்தார்.

– மற்றொரு நண்பர் வாசிக்க மறுத்துவிட்டார். பின்னர் வாசிக்கிறேன் என்று தப்பித்தார்.

ஒரு சகோதரர் மட்டும் புதுக் கவிதைகள் என்று வரும் குப்பைகளுக்கு இந்த படிவம் எனக்கு பரவாயில்லை; புதுமையாக இருக்கிறது என்றார்.

இருப்பதை கொடுப்பதே எங்கள் ”சேவை”. எல்லா இகழும் இறைவனுக்கே;

(எழுத்து, இலக்கணம், மற்றும் பிற பிழைகளும் வாசக நண்பர்கள் இகழ்வதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கிறது.)

அலைகழிந்த ஆத்மாவே ஆன்மீகம் ஆதரவோ;
மாதவமாய் மனதிற்கு மாற்றாக மலராதோ!
இறையென்ற இயக்கத்தில் இதயமதை இளக்கினயோ,
ஆட்படுத்தி ஆணவமாய் ஆட்சிதனில் அமர்ந்தாயோ!

கற்பனையில் கரைந்துருகி காவியங்கள் கசிந்தனையே,
வெந்தமனம் வெளிச்சமிட வெஞ்சாமிரமவை  வீசினவே;
காமத்தின் கட்டுண்ட கள்வனாய் கண்டனையோ,
மென்மேலும் மதிபிறழ மனந்தன்னை மாசாக்கினையோ!

காலங்கள் கரைந்தாலும் கற்பனைகள் கரையாதோ!
முற்காலம் முதல்வந்தன முற்றிலுமே மாறாதோ;
கற்பனையை கற்பனையால் கற்றுவிக்க கற்பாயோ!
தூய்மையென துன்பத்தை தூவுகின்ற துர்பாக்கியமோ!

மாயையாய் மனம்நிறைத்து மூர்க்கத்தில் மறைந்தனையே;
ஆதரவே ஆபத்தாய் ஆர்ப்பரித்த ஆவிகளே!
மானுடனே மதிகெட்டு மூடனாகி மாறினயே,
மதமென்ற மாவிடத்தில் மூழ்கித்தான் மறுகினயே!

தோற்றுவாய் தோன்றலெனினும் கற்பனை கற்பனையே!
அன்பினில் அடிமைகொள்ளும் கற்பனையும் கற்பனையே!
வாள்முனையும் வன்முறையும் கற்பனையே கற்பனையே!
தொகைவதும் தோற்றுவதும் மதம்பிடித்த  கற்பனையே!

Advertisements

From → Uncategorized

2 பின்னூட்டங்கள்
  1. என்ன ஆர்.வி சார். கவிதை மேல் கோபம் கொண்டு புனைப் பெயரில் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டீர்களா?

    Like

    • ரெங்கசுப்ரமணி,

      இந்த பிரம்மராயர் நானில்லை! பிரம்மராயர் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்…

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: