பெ. முருகனின் இந்தக் கட்டுரை என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. எனக்கும் இப்படித்தான் புத்தகப் பைத்தியம் இருந்தது. (என் மனைவி பின்னாலிருந்து இப்ப மட்டும் என்ன தெளிஞ்சிருச்சா என்கிறாள்) ஆனால் பெருமாள் முருகனைப் போல் இல்லாமல் என் அம்மாதான் என்னை ஏழு வயதில் கிராம நூலகத்தை அறிமுகம் செய்து வைத்தாள். சிறு வயதில் படிக்க ஊக்கம் தந்ததும் அம்மாதான். அப்போதெல்லாம் நானும் வேர்க்கடலை சுற்றிய காகிதத்தைக் கூட விடமாட்டேன்.
பெ. முருகன் மொடாவில் புத்தகம் வைத்திருந்தது மாதிரி எனக்கும் ஒரு காலம் இருந்தது. திருமணம் ஆவதற்கு முன்னால் நண்பர்களுடன் ஒரு வீடு/அபார்ட்மெண்டில் சேர்ந்து வசிப்பது வழக்கம். என் அறையில் ஒரு சின்ன மெத்தை தரை மீது விரித்திருப்பேன்.நான்கு சுவர்களிலும் புத்தகங்கள் வரிசை வரிசையாக அடுக்கி வைத்திருப்பேன். தூங்கி எழுந்து கையை நீட்டினால் தட்டுப்படும் புத்தகத்தைப் படிப்பேன். இன்று அலமாரிகள் நிறைந்து வழிகின்றன, ஆனால் தேட வேண்டி இருக்கிறதே!
கட்டாயம் படியுங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: பெருமாள் முருகன் பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்: பெருமாள் முருகனின் தளம்
பெருமாள்முருகனின் பதிவை வாசித்தேன். வாசித்து வந்த பாதையை கிளரும் ஒரு நினைவு கூறும் ஓர் அற்புதப்பதிவு. பகிர்விற்கு நன்றி.
LikeLike