Skip to content

மோ யான் (2012 நோபல்) எழுதிய “ஷிஃபு, யூ வில் டூ எனிதிங் ஃபார் எ லாஃப்”

by மேல் மார்ச் 24, 2013

mo_yan2012-க்கான நோபல் பரிசு எல்லாம் அறிவித்து இரண்டு மூன்று மாதங்கள் போய்விட்டன. மோ யான் என்ற சீன எழுத்தாளர் பரிசை வென்றது மறந்தே போயிருக்கலாம். நூலகத்தில் கிடைத்த ஒரே ஒரு புத்தகத்தை – Shifu, You Will Do Anything for a Laugh (சிறுகதைத் தொகுப்பு) – படித்து முடித்து எழுதுவதற்கு இத்தனை நாளாகிவிட்டது…

மோ யானுக்கு ஒரு wicked sense of humor இருக்கிறது. உதாரணத்துக்கு ஒன்று. “Abandoned Child” என்று ஒரு சிறுகதை. சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தைதான் என்ற விதி கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. இரண்டாவது குழந்தை பிறந்தால் அபராதம் கட்ட வேண்டுமாம். மூன்றாவது குழந்தைக்கு இன்னும் அதிக அபராதம். ஆனால் ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிகம். அதுவும் கிராமப்பகுதிகளில் மிக அதிகம். அதனால் பெண் பிறந்தால் கொன்றுவிடுவது, இல்லை எங்காவது விட்டுவிடுவது, இல்லை அபராதம் கட்டிக் கொள்ளலாம் என்று தொடர்ந்து முயல்வது போன்றவை நடக்கின்றன. இந்தக் கதையின் நாயகன் விடுமுறைக்கு வீடு திரும்புகிறார். வரும் வழியில் கரும்பு வயலில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. இப்போதுதான் பிறந்த பெண் குழந்தை. மனம் கேட்காமல் வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறார். அவருக்கு நாலைந்து வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை. மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை கட்டாயம் வேண்டும். இந்தக் குழந்தையை வளர்பபதா என்று எதிர்க்கிறாள். இவர் ஊரின் அரசு அதிகாரியிடம் குழந்தையை ஒப்படைக்கப் போகிறார். அவர் குழந்தையை எங்காவது அநாதை இல்லத்துக்கெல்லாம் அனுப்ப தனக்கு வசதிப்படாது என்கிறார். நான் வளர்ப்பதற்கில்லை, குழந்தையை வேண்டுமானால் திருப்பி கரும்பு வயலிலேயே விட்டுவிடட்டுமா என்று நாயகன் கத்த, அப்படி செய்தால் நாயகன் மீது கொலைக் குற்றம் சாட்டப்படும் என்கிறார் அதிகாரி. வெறுத்துப் போய் நாயகன் திரும்பும்போது அதிகாரி அபராதம் கட்ட வேண்டியதை நினைவுபடுத்துகிறார்!

மூடப்படும் தொழிற்சாலைகள், தன் போக்கில் இயங்கும் அரசு எந்திரம், பொருந்தாத நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் என்று மோ யானின் கதைகளின் பின்புலங்கள் இந்தியர்களுக்கு மிகவும் பரிச்சயமானவை. இன்னும் சொல்லப் போனால் அறுபதுகளின் திரைப்படங்களின் பின்புலம் போல இருக்கிறது. என்ன இங்கே தொழிலாளர்களைப் பற்றி கவலையே இல்லாத முதலாளியாக வருவது அரசுதான். கம்யூனிஸ்ட் சீன அரசு இந்த மாதிரி அரசைக் குறை சொல்லும் கதைகளை அனுமதிக்காது என்று எனக்கு ஒரு பிம்பம் இருந்தது. மோ யான் என்றால் “வாயைத் திறக்காதே” என்றுதான் அர்த்தமாம். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் வாயைத் திறக்காதே என்று அவரது பெற்றோர்கள் பல முறை அறிவுறுத்தினார்களாம். அதையே புனைபெயராக வைத்துக் கொண்டாராம். மாவோ காலத்துக்கு இப்போது பரவாயில்லை போலிருக்கிறது.

“Abandoned Child” தவிர இந்தத் தொகுப்பில் எனக்குப் பிடித்த கதைகள் “Shifu, You Will Do Anything for a Laugh” மற்றும் “Man and the Beast“. பல வருஷம் உண்மையாக உழைத்தபின் அரசு கம்பெனியில் layoff. ஷிஃபுவுக்கு வேலை போய்விடுகிறது. ஒரு ஓடாத பஸ்ஸை காட்டில் மணிக்கணக்கில் காதலர்களுக்கு வாடகைக்கு விடுகிறார். இது சட்ட விரோதம். ஒரு நாள் வந்த காதலர்கள் பஸ்ஸில் இறந்து கிடக்கிறார்கள். பிறகு? Man and the Beast சிறுகதையில் உலகப்போர் சமயத்தில் ஜப்பானில் ஒரு சீனக் கைதி. தப்பிவிடுகிறான். காட்டில் ஒரு குகையில் மாதக் கணக்கில். ஏறக்குறைய மிருக வாழ்வு. நரிகளோடு உயிர்ப் போராட்டம். அப்போது ஒரு பெண்ணைப் பார்க்கிறான், அவளைக் கற்பழிக்கப் போகிறான். பிறகு?

சில சமயம் magical ரியலிசம், சரியலிசம் – சரி எனக்கு சரியாகப் புரியாத ஒரு இசம் – கதைகள். ஒரு கதையில் (Soaring) பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். அழகான பெண். கணவனைப் பார்த்ததும் பறந்துபோய் மரத்தில் உட்கார்ந்து கொள்கிறாள். அவளைக் கீழே இறக்க ஊரே முயல்கிறது. இன்னொரு கதையில் (Iron Child) இரும்பைத் தின்னும் குழந்தைகள். இன்னொரு கதையில் (The Cure) அம்மாவைக் குணப்படுத்த மரண தண்டனை அடைந்த கைதியின் உடலில் இருந்து பித்த நீர் சுரப்பியைக் கொண்டு வரும் மகன்.

மற்ற இரு கதைகளும் (Love Story, Shen Garden) படிக்கலாம்.

மோ யான் நிச்சயமாக நல்ல எழுத்தாளர். இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைப்பேன். ஒரு விதத்தில் பஷீரை நினைவுபடுத்தினார். ஒரே ஒரு புத்தகத்தை வைத்து முடிவு செய்துவிட முடியாதுதான், ஆனால் இவரை விட சிறந்த பல இந்திய எழுத்தாளர்களை நான் படித்திருக்கிறேன். என் கண்ணில் பஷீரின் தரம் இவரை விட உயர்ந்தது.


தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், உலக இலக்கியம்

தொடர்புடைய சுட்டி: மோ யானைப் பற்றி நோபல் கமிட்டி

Advertisements

From → Awards, World Fiction

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: