மிஸ்டர் சிப்ஸ்

james_hiltonஜேம்ஸ் ஹில்டன் எழுதிய குட்பை மிஸ்டர் சிப்ஸ் என்ற புத்தகத்தை எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களது பள்ளிப் பருவம் பற்றி இருக்கும் நாஸ்டால்ஜியாவை வைத்து எழுதப்பட்ட புத்தகம்.

mr_chips1870-இல் பரூக்ஃபீல்ட் பள்ளியில் வாத்தியாராகச் சேரும் சிப்பிங் மெதுமெதுவாக பள்ளியின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறார் என்கிற சிம்பிள் கதைதான். எனக்குப் பிடித்த விஷயம் அன்றைய நாட்டு நடப்பைப் பற்றி தொடர்ச்சியாக ஓரிரு வரிகள் எழுதப்படுவதுதான். இதை நான் எல்லோருக்கும் பரிந்துரைக்கமாட்டேன். ஆனால் நான் படிப்பேன்.

இதைத் தவிர To You, Mr. Chips (1938) என்று ஒரு புத்தகமும் உண்டு.

1939-இல் ராபர்ட் டொனாட் நடித்து திரைப்படமாகவும் வந்தது. டொனாட் தன் நடிப்புக்காக ஆஸ்கார் விருது பெற்றார். 1969-இல் பீட்டர் ஓ’டூல் நடித்த படமும் (musical) நன்றாக இருக்கும். ஆனால் திரைக்கதை எழுதிய டெர்ரன்ஸ் ராட்டிகன் அதை ஒரு காதல் கதையாக மாற்றி இருப்பார். நன்றாக வசனம் எழுதி இருப்பார்.

r_f_delderfieldto_serve_them_all_my_daysஆர். எஃப். டெல்டர்ஃபீல்ட் எழுதிய “To Serve Them All My Days” புத்தகமும் சிப்ஸ் பாணியில் எழுதப்பட்டது. நாயகன் டேவிட் முதல் உலகப் போரில் எப்படியோ பிழைத்து ஒரு பள்ளியில் ஆசிரியனாக சேருகிறான். பள்ளியே அவன் வாழ்க்கையாகிறது. இந்த பின்புலத்தில் முதல் உலகப்போர் முடிந்து இரண்டாம் போர் ஆரம்பிக்கும் வரை உள்ள காலகட்டத்தின் அரசியல் நிகழ்வுகளை – குறிப்பாக லேபர் கட்சி வலுப்பெறுவதை – விவரிக்கிறார். படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய புத்தகம் இல்லை.


தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்