Skip to content

டோண்டு ராகவனின் நினைவாக: நெவில் ஷூட் எழுதிய “ட்ரஸ்டி ஃப்ரம் த டூல்ரூம்”

by மேல் ஏப்ரல் 11, 2013

Dondu Raghavan

சமீபத்தில் மறைந்த டோண்டு ராகவனின் நினைவாக சிலிகான் ஷெல்ஃபில் என்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இந்தப் பழைய பதிவு கண்ணில் பட்டது. டோண்டு பரிந்துரைத்த புத்தகம். டோண்டுவால் நான் படித்த புத்தகம். கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து மீள்பதித்திருக்கிறேன்.

Nevil_Shuteடோண்டு ராகவன் எழுதிய இந்த போஸ்டை படித்தபோது நெவில் ஷூட் எழுதிய Trustee from the Toolroom (1960) புத்தகத்தை படிக்க வேண்டும் என்று தோன்றியது. என் அதிர்ஷ்டம், உள்ளூர் நூலகத்தில் கிடைத்தது.

நாவல் சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால் நாயகனின் திறமை அவருக்கு உலகெங்கும் பல நண்பர்களை ஏற்படுத்தி கொடுத்தது நன்றாக இருக்கிறது. அதே நேரத்தில் அவருக்கு எல்லாம் க்ளிக் ஆவது கொஞ்சம் தமிழ் படம் பார்ப்பது போல இருக்கிறது.

படிக்கலாம். A feel good book.

கதையை எல்லாம் டோண்டு எழுதி இருக்கிறார். அதனால் அதையே மீண்டும் நானும் எழுத வேண்டிய வேலை மிச்சம். டோண்டுவின் வார்த்தைகளில்:

நாவலின் கதாநாயகன் Keith Stewart மேற்கொண்ட வேலை பிரம்மாண்டமானது. ஆனால் அவரோ சாதாரண மனிதன். அதை அவர் எவ்வாறு செய்து முடிக்கிறார் என்பதுதான் கதை. கதை நடக்கும் காலம் 1957.

அவர் ஒரு மாடல் இஞ்சினியர். பெரிய இயந்திரங்களை சிறிய மாடல்களாக தயாரிப்பவர். அதை ஒரு முழுநேர வேலையாகவே வைத்திருப்பவர். அது சம்பந்தமாக Miniature Mechanic என்னும் ஒரு பிரிட்டிஷ் சஞ்சிகையில் ரெகுலராக எழுதுபவர். அவருக்கு உலகம் பூராவும் வாசகர்கள் உண்டு. தங்களுக்கு தோன்றும் சந்தேகங்களையெல்லாம் அவருக்கு எழுத, அவரும் எல்லோருக்கும் மெனக்கெட்டு பதிலெழுதி அனுப்புவார்.

Trustee_from_the_Toolroomஅவரது தங்கையும் அவள் கணவரும் தங்கள் பத்து வயது மகள் ஜேனிஸை அவரிடம் ஒப்படைத்து விட்டு, ஒரு பாய்மரக் கப்பலில் கனடா நோக்கி பயணம் செல்கின்றனர். பூமியின் தென்பகுதிக் கடல் மூலமே செல்கின்றனர். பிரெஞ்சு பாலினீஷியாவில் டாஹிட்டி அருகில் ஒரு ஆள் இல்லாத தீவில் அவகள் படகு பவளப்பாறையில் மோதி அவர்கள் இருவரும் உயிரிழக்கின்றனர்.

இறந்தவர்கள் நல்ல பணவசதி படைத்தவர்கள். தங்கள் மரணத்துக்கு பிறகு தங்களது பெண்ணை பாதுகாத்து அவள் வயதுக்கு வந்ததும் தங்கள் சொத்தை அவளுக்கு தரும் பொறுப்பை நம் கதாநாயகரிடமே தெளிவாக ஒப்படைத்துள்ளனர். ஆக உயிலில் ஒரு குழப்பமும் இல்லை. ஆனால் அதே சமயம் வங்கியில் அவர்களது அக்கவுண்டில் பணமும் இல்லை. எல்லா பணத்தையும் வைரங்களாக மாற்றி தங்களுடன் தங்கள் கப்பலில் எடுத்து சென்றுள்ளனர். அதில் உள்ள சிறு மோட்டாருக்குள் ஒரு பெட்டியில் வைத்து அதை ஒளித்து வைத்துள்ளனர். அந்த பெட்டியை அங்கு அவர்களுக்கு பொருத்தி வைத்து குடுத்ததே நம் கதாநாயகனே. ஆனால் அவருக்கு அச்சமயம் முழு உண்மையும் தெரியாது. அக்காலத்திய இங்கிலாந்தில் சொத்துக்களை வெளிநாட்டுக்கு எடுத்து செல்வதில் பல கெடுபிடிகள் உண்டு. ஆகவேதான் அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர்.

இப்போது சிக்கல் என்னவென்றால் அத்தனை வைரங்களும் மோட்டாரில் சிக்கியுள்ளன. அவற்றை எடுத்து வர வேண்டும். அதற்கு டாஹிட்டி வரை செல்ல வேண்டும். அதே சமயம் விஷயமும் யாருக்கும் தெரியக் கூடாது. அவர் அதை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதில்தான் முழுக்கதையே அடங்கியுள்ளது.

அனுமாருக்கு தன் பலம் தெரியாதது போல நம் கதாநாயகனுக்கும் தனது பிரபலம் பற்றி தெரியவில்லை. அவர் போகுமிடமெல்லாம் அவரது கட்டுரைகளின் வாசகர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் வழியிலே அவருக்கு செய்யும் உதவிகளை பற்றி படிக்கையில் மனம் நிறைகிறது. கதையை படியுங்கள், நீங்களே உணருவீர்கள்.

எல்லாவற்றையும் முடித்த பின்னரும் கதாநாயகன் சிறிதும் கர்வமின்றி இருப்பதுதான் அவருக்கு இன்னும் சிறப்பைக் கூட்டுகிறது.


தொகுக்கப்பட்ட பக்கம்: உலகப் புனைவுகள்

தொடர்புடைய பதிவுகள்:
டோண்டுவின் பதிவு
விக்கிபீடியாவில் நெவில் ஷூட்
விக்கிபீடியாவில் Trustee from the Toolroom

Advertisements

From → World Fiction

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: