குட்டி அஸ்டிராய்டிலிருந்து பாலைவனத்தில் வந்து இறங்கிய சின்ன இளவரசனின் கதை எல்லாருக்கும் தெரியும். இதைப் பற்றி புதிதாக என்ன சொல்வது? ஃபிரெஞ்ச் மொழிப் புத்தகங்களில் இதுவே மிகவும் படிக்கப்பட்ட புத்தகம், மிகவும் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் என்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த ஃபிரெஞ்ச் மொழிப் புத்தகம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டதாம்.
எனக்கு புத்தகத்தில் பிடித்த அம்சம் படங்கள். அதுவும் முதலில் வரும் யானையை விழுங்கிய மலைப்பாம்பின் படம் பிரமாதம்! அதை சரியாக அடையாளம் கண்டு கொள்ளும் ஒரே ஜீவன் இளவரசன் என்பது நல்ல டச்.
இந்தப் புத்தகம் சிம்பிளாக இருக்க ரொம்ப கஷ்டப்பட்டு எழுதப்பட்டது என்று நான் கருதுகிறேன். கொஞ்சம் pretentiousness தெரியும். இருந்தாலும் படிக்கலாம். அதுவும் சிறு வயதில் நிச்சயமாகப் படிக்கலாம். படங்களோடு உள்ள ஒரு மின்புத்தகத்தை இணைத்திருக்கிறேன். மின்புத்தகத்தை இணைக்கத்தான் இந்தப் பதிவே. படிக்காதவர்கள் படித்துக் கொள்ளுங்கள், உங்கள் குழந்தைகளைப் படிக்க வையுங்கள், படித்துக் காட்டுங்கள்.
தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்
I bought a Tamil translation of this book by Sriram in Auroville recently. Its a really good translation. I am teaching my niece to read Tamil using the book.
LikeLike
அருணா,
எங்கே இருக்கிறீர்கள்? உலகம் சுற்றும் வாலிபியாக மாறிவிட்டீர்களா?
LikeLike