சரவண கார்த்திகேயன் சிபாரிசுகள்

எனக்கு சரவண கார்த்திகேயன் யார் என்று தெரியவில்லை. ஆனால் லிஸ்டைப் பார்த்தால் பதித்துவிடும் மனநிலையில் இருக்கிறேன். 🙂 இதுவும் பழைய லிஸ்ட். இவருடைய டேஸ்ட் மிகவும் catholic ஆக இருக்கிறது. வாலியின் கவிதையையும், விஷ்ணுபுரத்தையும் ஒரே லிஸ்டில் பார்ப்பது எனக்கு பெரிய ஆச்சரியம்!

சரவண கார்த்திகேயன் tamilpaper.net இல் தொடர்ந்து எழுதுகிறார்; குங்குமத்தில் தற்போது ஒரு தொடர் எழுதுகிறார்; பரத்தை கூற்று, தேவதை புராணம் கவிதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார்; விகடன் நடத்திய கவிதைப் போட்டி ஒன்றில் வென்றார் என்றும் நினைவு என்று கோபி தகவல் தருகிறார்.

என் இஷ்டத்துக்கு வரிசையை மாற்றி தொகுத்திருக்கிறேன்.

கவிதைகள்:

  1. பாரதியார் கவிதைகள்
  2. பட்டினத்தார் பாடல்கள்
  3. பாரதிதாசன் கவிதைகள்
  4. கண்ணதாசன் கவிதைகள்
  5. வைரமுத்து கவிதைகள்
  6. சுந்தர ராமசாமி கவிதைகள்
  7. கலாப்ரியா கவிதைகள்
  8. கல்யாண்ஜி கவிதைகள்
  9. கொங்குதேர் வாழ்க்கை
  10. கவிதை மழை – கலைஞ‌ர் மு. கருணாநிதி
  11. அவதார புருஷன் – வாலி
  12. பாண்டவர் பூமி – வாலி
  13. கிருஷ்ண விஜயம் – வாலி
  14. காமக் கடும்புனல் – மகுடேஸ்வரன்
  15. தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப் பிசாசுகள் – விக்ரமாதித்யன்
  16. அகி – முகுந்த் நாகராஜன்
  17. பித்தன் – அப்துல் ரகுமான்
  18. கருவறை வாசனை – கனிமொழி
  19. பாலகாண்டம் – நா. முத்துக்குமார்

சிறுகதைகள்:

  1. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
  2. லா.ச.ரா. சிறுகதைகள்
  3. சுந்தர ராமசாமி சிறுகதைகள்
  4. அ. முத்துலிங்கம் கதைகள்
  5. ஜெயமோகன் சிறுகதைகள்
  6. விசும்பு – ஜெயமோகன்
  7. அம்பை சிறுகதைகள்
  8. ஆதவன் சிறுகதைகள்
  9. யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்
  10. பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள்
  11. துப்பறியும் சாம்புதேவன்
  12. சுஜாதாவின் மர்மக் கதைகள்
  13. நாட்டுப்புறக் கதைகள் – கி.ராஜநாராயணன்
  14. விஞ்ஞான சிறுகதைகள் – சுஜாதா
  15. ஸ்ரீரங்கத்துக் கதைகள் – சுஜாதா
  16. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா
  17. பீக்கதைகள் – பெருமாள் முருகன்
  18. ஜெயமோகன் குறுநாவல்கள்
  19. ஜி. நாகராஜன் ஆக்கங்கள்
  20. என் வீட்டின் வரைபடம் – ஜே.பி. சாணக்யா
  21. சித்தன் போக்கு – பிரபஞ்சன்
  22. உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன்
  23. ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்
  24. காக்டெய்ல் – சுதேசமித்திரன்

நாவல்கள், நாடகங்கள்:

  1. சுஜாதாவின் நாடகங்கள்
  2. பொன்னியின் செல்வன்கல்கி
  3. ஒரு புளியமரத்தின் கதைசுந்தர ராமசாமி
  4. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
  5. பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்
  6. விஷ்ணுபுரம்ஜெயமோகன்
  7. ஏழாவது உல‌கம்ஜெயமோகன்
  8. புலிநகக் கொன்றைபி.ஏ.கிருஷ்ணன்
  9. சில நேரங்களில் சில மனிதர்கள்ஜெயகாந்தன்
  10. குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதி
  11. யாமம் – எஸ். ராமகிருஷ்ணன்
  12. கங்கணம்பெருமாள் முருகன்
  13. ராஸ‌லீலா – சாரு நிவேதிதா
  14. பகடையாட்டம் – யுவன் சந்திரசேகர்
  15. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்
  16. சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன்
  17. தேரோடும் வீதி – நீல. பத்மநாபன்
  18. ஆதலினாற் காதல் செய்வீர் – சுஜாதா
  19. இனியெல்லாம் சுகமே – பாலகுமாரன்
  20. வால்கள் – ராஜேந்திர குமார்
  21. மீனின் சிறகுகள் – தஞ்சை பிரகாஷ்
  22. இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா

அபுனைவுகள்:

  1. வந்தார்கள் வென்றார்கள் – மதன்
  2. சத்திய சோதனை – மகாத்மா காந்தி
  3. திருக்குறள் – மு.வ. உரை
  4. அசோகமித்திரன் கட்டுரைகள்
  5. நீங்களும் முதல்வராகலாம் – ரா.கி. ரங்கராஜன்
  6. நூறு பேர் – மணவை முஸ்த‌ஃபா
  7. கண்மணி கமலாவிற்கு… – புதுமைப்பித்தன்
  8. சிந்தாநதி / பாற்கடல் – லா.ச. ராமாமிருதம்
  9. ஆளுமைகள் விமர்சன‌ங்கள் – சுந்தர ராமசாமி
  10. இவை என் உரைகள் – சுந்தர ராமசாமி
  11. நினைவோடை – சுந்தர ராமசாமி
  12. அங்க இப்ப என்ன நேரம் – அ. முத்துலிங்கம்
  13. கோணல் பக்கங்கள் – சாரு நிவேதிதா
  14. இலக்கிய முன்னோடிகள் வரிசை – ஜெயமோகன்
  15. சு.ரா. நினைவின் நதியில் – ஜெயமோகன்
  16. சங்க சித்திரங்கள் – ஜெயமோகன்
  17. துணையெழுத்து – எஸ். ராமகிருஷ்ணன்
  18. கதாவிலாசம் – எஸ். ராமகிருஷ்ணன்
  19. தேசாந்திரி – எஸ். ராமகிருஷ்ணன்
  20. கேள்விக்குறி – எஸ். ராமகிருஷ்ணன்
  21. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
  22. கற்றதும் பெற்றதும் – சுஜாதா
  23. ஏன்? எதற்கு? எப்படி? – சுஜாதா
  24. திரைக்கதை எழுதுவது எப்படி? – சுஜாதா
  25. யாருக்கு யார் எழுதுவது? – இளையராஜா
  26. ஓ பக்கங்கள் – ஞானி
  27. தெருவோரக் குறிப்புகள் – பாமரன்
  28. குமரி நில நீட்சி – சு.கி. ஜெயகரன்
  29. சுபமங்களா நேர்காணல்கள் – கோமல் சுவாமிநாதன்+இளையபாரதி
  30. உறவுகள் – டாக்டர் ருத்ரன்
  31. உயிர் – டாக்டர் நாராயணமூர்த்தி
  32. பிரம்ம ரகசியம் – ர.சு. நல்லபெருமாள்

இதெல்லாம் நாவலா சிறுகதையா தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

  1. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் – எம்.ஜி. சுரேஷ்

மொழிபெயர்ப்புகள்:

  1. வாரணாசி – எம்.டி. வாசுதேவன் நாயர்
  2. தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரப் பிள்ளை

3 thoughts on “சரவண கார்த்திகேயன் சிபாரிசுகள்

  1. //வாரணாசி – எம்.டி. வாசுதேவன் நாயர்//

    இதைப் படித்து அசந்து போனேன். சிற்பி மொழிபெயர்ப்பு. கவிதா வெளியீடு. மன நிறைவைத் தந்த படைப்பு.

    //இதெல்லாம் நாவலா சிறுகதையா தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.//

    சில சிறுகதைத் தொகுப்புகள். சில நாவல்கள். சில கட்டுரைகள்.

    இதில் ’அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்’ – எம்.ஜி. சுரேஷ் – ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். ’பிரம்ம ரகசியம்’ நிறைய தத்துவ விஷயங்களைப் பேசும். ’உள்ளேயிருந்து சில குரல்கள்’ மனப் பாதிப்பு பற்றிய கதை.

    இந்த லிஸ்டில் ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, மௌனி, நகுலன், பிரமிள் எல்லாம் காணோமே. 🙂

    //வாலியின் கவிதையையும், விஷ்ணுபுரத்தையும் ஒரே லிஸ்டில் பார்ப்பது எனக்கு பெரிய ஆச்சரியம்!//

    30 வயதைத் தாண்டாத இளைஞர்களுக்குத் தான் இப்படி ஒரு ”டேஸ்ட்” இருக்கும் என்பது என் அனுபவம் 😉

    //எனக்கு சரவண கார்த்திகேயன் யார் என்று தெரியவில்லை.//

    ”சந்திரயான்” என்ற நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது வாங்கியவர். இந்த விருது விஷயம் அவருக்குத் தெரியும் முன்னாலே எனக்குத் தெரிய வந்ததுதான் சுவாரஸ்யம். மற்றபடி அவர் யார் என்று எனக்கும் தெரியாது.

    நானும் ஒரு லிஸ்ட் போடலாம்னு பார்க்குறேன். ஆனா, நான் எழுத்தாளர் இல்லையே, வெறும் வாசகன் தானே!! 😦

    Like

  2. \\என் வீட்டின் வரைபடம் – ஜே.பி. சாணக்யா
    சித்தன் போக்கு – பிரபஞ்சன்\\

    சிறுகதைகள்

    \\மீனின் சிறகுகள் – தஞ்சை பிரகாஷ்\\

    நாவல்

    \\உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன்
    ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்
    காக்டெய்ல் – சுதேசமித்திரன்\\

    சிறுகதைகள்

    \\அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் – எம்.ஜி. சுரேஷ்\\

    தெரியவில்லை

    \\இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா\\

    நாவல்

    \\உயிர் – டாக்டர் நாராயணமூர்த்தி
    பிரம்ம ரகசியம் – ர.சு. நல்லபெருமாள்\\

    கட்டுரைகள்

    //எனக்கு சரவண கார்த்திகேயன் யார் என்று தெரியவில்லை.//

    tamilpaper.net இல் தொடர்ந்து எழுதுகிறார். குங்குமத்தில் தற்போது ஒரு தொடர் எழுதுகிறார். பரத்தை கூற்று, தேவதை புராணம் கவிதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். விகடன் நடத்திய கவிதைப் போட்டி ஒன்றில் வென்றார் என்றும் நினைவு’

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.