ரெண்டாமூழம் “மொழிபெயர்ப்பு” – பிரேம் பணிக்கரின் “பீம்சேன்”

பிரேம் பணிக்கர் எனக்குப் பிடித்த ஒரு ஆளுமை. அவரது கிரிக்கெட் எழுத்துக்களால் கவரப்பட்டு அவரைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவரது தலை சிறந்த “படைப்பாக” நான் கருதுவது எம்.டி. வாசுதேவன் நாயரின் ரெண்டாமூழம் புத்தகத்தை அவர் “மொழிபெயர்த்ததுதான்“. மொழிபெயர்ப்போடு சொந்தச் சரக்கும் நிறைய உண்டு என்பதை அவரே ஒத்துக் கொள்கிறார். சித்ரா பானர்ஜி திவாகருணி எழுதிய “Palace of Illusions” படித்து பயங்கர கடுப்பாகிவிட்டாராம். தனக்குப் பிடித்த ஒரு மகாபாரத மறுவாசிப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித்து அது மொழிபெயர்ப்பா, மறுபடைப்பா என்று அறுதி இட்டு சொல்ல முடியாத ஒரு படைப்பாக முடிந்ததாம்.

pdf வடிவத்தில் முழுதும் கிடைக்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். இந்த கலவையே இப்படி என்றால் ரெண்டாமூழம் பிரமாதமாகத்தான் இருக்கும். படிக்க இன்னும் வாய்ப்பு கிட்டவில்லையே…

“எம்.டி.வி.யின் நாவல் தமிழில்”இரண்டாம் இடம்” என்று வந்துள்ளது. குறிஞ்சிவேலன் மொழிபெயர்ப்பும் அருமையாக உள்ளது. தமிழிலேயே படிக்கலாம் – சொந்தச் சரக்கு இல்லாத நேரடி மொழிபெயர்ப்பு” என்று ஜடாயு தகவல் தருகிறார்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள், இந்திய இலக்கியம்

தொடர்புடைய சுட்டி: நண்பர் கோபியின் விரிவான பதிவு