கணேஷ்-வசந்த் கதை – விபரீதக் கோட்பாடு

ganesh-vasanthஇன்னுமொரு எழுபதுகளின் கணேஷ்-வசந்த் கதை. (1976) ஏதோ மாத நாவலாக வந்தது (மாலைமதி?) என்று நினைவு.

sujathaவழக்கம் போல வசந்த் சைட் அடிக்கக் கூடிய பெண்ணான தருணா; தான் சாமியை மணக்க விரும்புவதாகவும், ஆனால் சாமிக்கு முதல் மனைவி ப்ரதிமா என்று ஒருத்தி இருப்பதாகவும், அவள் வேறொருவனோடு ஓடிவிட்டதாகவும், அவளைக் கண்டுபிடித்து விவாகரத்து பெற்றுத் தர வேண்டும் என்றும் கேஸ் கொண்டு வருகிறாள். சாமியின் சித்தப்பா ஆன்மிகம், மந்திரம் தந்திரம் என்று இருப்பவர். அவரைச் சார்ந்துதான் சாமியின் வாழ்க்கை. வழக்கம் போல புத்திசாலித்தனமாக கணேஷ் பிரதிமாவைக் கண்டுபிடித்து அவளைச் சந்திக்க செல்லும்போது ப்ரதிமா கொல்லப்படுகிறாள். பின்னால் இருக்கும் விபரீதக் கோட்பாடு என்ன என்பதுதான் கதை.

vibareethak kotpaaduபிரமாதமான த்ரில்லர் என்று இல்லாவிட்டாலும் இன்றும் படிக்கக் கூடிய கதை. விறுவிறுப்பாகச் செல்லும் கதை. இதைப் போல நல்ல டைம் பாஸ் த்ரில்லர்களை இன்றும் யாரும் எழுதுவதில்லை என்பது தமிழில் எனக்குப் பெரிய குறையாகத்தான் தெரிகிறது.

அந்தக் காலத்தில் படிக்கும்போது மிகவும் த்ரில்லிங் ஆக இருந்தது. பதின்ம வயதினரைக் கவரும் விதத்தில் கொஞ்சம் செக்ஸ், கொஞ்சம் மர்மம் என்று கலந்து கட்டி அடித்திருந்தார். என் நண்பர் கூட்டம் சுஜாதாவின் பெரிய விசிறிகளாக மாற இதுவும் ஒரு காரணம்.

கணேஷ்-வசந்த் ரசிகர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம்