Skip to content

(முழு) மஹாபாரதம் தமிழில்

by மேல் மே 27, 2013

mahabharathamஎனக்கு மகாபாரதம் அறிமுகமானது எனது பாட்டி மற்றும் அம்மா மூலமாகத்தான். அது ஒரு குழந்தைக்கேற்ப எளிமையாக்கப்பட்ட கதை. பதின்ம வயதில் ராஜாஜியின் சுருக்கத்தைப் படிக்கும்போதுதான் பிரமித்துப் போனேன். அப்புறம் வில்லிபாரதத்தைப் படித்தேன். அதில் இருந்த சின்னச் சின்ன மாற்றங்கள் தெரிந்தது. மூலத்தைப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் கிளம்பியது, ஆனால் சமஸ்கிருதம் தெரியாது. அங்கும் இங்குமாகப் பல பிரதி பேதங்களைப் படித்தேன். மனம் நிறைவு அடையவே இல்லை.

arul_selvap_perarasanகிசாரி மோகன் கங்குலி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுதான் மூலத்துக்கு மிகவும் நெருக்கமானது என்று கேள்விப்பட்டேன். இப்போது அருள் செல்வப் பேரரசன் என்பவர் இதை தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். இது வரை ஆதி பர்வத்தில் நூற்றி சொச்சம் அத்தியாயங்களை மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்கு ஒரு ஜே!

கங்குலின் மொழிபெயர்ப்பு இணையத்தில் கிடைக்கிறது ஆனால் படிக்க கை கூடி வரவில்லை. பிரச்சினை என்னவென்றால் அது எடிட் செய்யப்படாத ஒரு படைப்பு போல இருப்பதுதான். எக்கச்சக்க கூறியது கூறல், பிராமணர்களை வலிந்து புகழ்தல் எல்லாம் நிரடுகின்றன. இருந்தாலும் ஒரு நாள் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனக்கு எப்போதுமே தமிழில் படிப்பது ஆங்கிலத்தில் படிப்பதை விட ஒரு மடங்கு சுலபம். எனவே தனிப்பட்ட முறையிலும் அவருக்கு நன்றி!


தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்

Advertisements

From → Legends

6 பின்னூட்டங்கள்
  1. முழு மஹாபாரதத்தைத் தங்கள் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தமைக்கு நன்றி திரு.ஆர்.வி. அவர்களே.

    Like

    • அருள் செல்வப் பேரரசன், உங்களுக்கு நாங்கள் அல்லவா நன்றி சொல்ல வேண்டும்!

      Like

  2. Raj permalink

    very nice …i want full book.(முழு மஹாபாரதம் )

    Like

    • Raj permalink

      This is my E-ID : rajumnanum@gmail.com send me to this ID

      Like

      • ராஜ், நீங்கள்தான் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு சென்று மகாபாரத மொழிபெயர்ப்பைப் படித்துக் கொள்ள வேண்டும்.

        Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: