மனுபென் காந்தி எழுதிய “பாபு – என் தாய்”

manu_gandhi_and_gandhiமனுபென் காந்தியின் grand-niece. காந்தியின் கடைசி காலத்தில் – குறிப்பாக நவகாளி யாத்திரையின்போது – அவர் கூடவே இருந்து அவரைக் கவனித்துக் கொண்டவர். காந்தி இறக்கும்போது அவருக்கு பதினெட்டு பத்தொன்பது வயதிருக்கலாம். கஸ்தூரிபாவின் கடைசி காலத்திலும் அவரோடு (13, 14 வயதில்) இருந்து அவரை கவனித்துக் கொண்டவர். காந்தியை தன் தாயாக வரித்துக் கொண்டிருக்கிறார். காந்தியும் தன்னை அவரது தாய் – தந்தை இல்லை, தாய் – என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார். (புகைப்படத்தில் காந்தியின் வலது பக்கம் தலையில் முக்காடு இல்லாமல் இருப்பவர் மனு.)

புத்தகம் என்னை கவர்ந்தது. காந்தி எப்பேர்ப்பட்ட மகாத்மா என்றெல்லாம் மனு பேசவில்லை. காந்தியைப் பார்த்துக் கொள்ளூம், அவருக்கு பணிவிடை செய்யும், அரசியல் தெரியாத ஒரு சிறு பெண்ணின் நோக்கில்தான் காந்தியைப் பற்றி எழுதுகிறார். நவகாளியில் நடந்த கொடுமைகளை விட காந்திக்கு அங்கே ஆட்டுப்பால் கிடைக்கவில்லை, தேங்காய்ப்பால் குடித்து பேதி ஆனது என்ற விவரங்கள்தான் நிறைய. மிகவும் genuine ஆன புத்தகம்.

உண்மையாகச் சொல்கிறேன், காந்தி ஒரு நச்சுப் பிடித்தவர். அவரை ஒரு பதின்ம வயதுப் பெண் எப்படி பொறுத்துக் கொண்டாள் என்பது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. நவகாளி யாத்திரையின்போது கிராமம் கிராமமாக போயிருக்கிறார். ஒரு கிராமத்தில் அவர் குளிக்கும்போது தேய்த்துக் கொள்ளும் ஒரு கல்லை மறந்துவிட்டு வந்ததால் மனுவை மீண்டும் அந்த கிராமத்துக்குப் போய் அதைக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார். என்ன இந்தியாவில் கல்லா கிடைக்காது? நானாக இருந்தால் ஓடிவிட்டிருப்பேன். அவருக்கு மாலை போட்டவர்களை பணவிரயம் என்று திட்டிவிட்டு, பூக்களைக் கோர்த்த நூலைப் பிரித்து சுற்றி எடுத்துக் கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு பழைய படத்தில் சுருளிராஜன் கஞ்சன் என்று காட்டுவார்கள். அவர்கள் எல்லாம் காந்தியிடம் பிச்சை வாங்க வேண்டும்!

ஆனால் அப்படி அவர் இருந்ததால்தான் – எந்த விதமான தக்குனூண்டு சமரசமும் செய்து கொள்ளாமல் இருந்ததால்தான் – அவர் காந்தியாக இருக்கிறார். என் போன்றவர்கள் அவருடைய நிலையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட அடைய முடியவில்லை.

மனுபென் என்றால் உடனே நினைவு வருவது காந்தி தன் பிரமச்சரிய சோதனை என்று மனுவோடு நிர்வாணமாக படுத்து உறங்கியதுதான். அப்படி உறங்கும்போது ஒரு முறை அவருக்கு விறைத்துக் கொண்டதாம். விவரம் தெரியாத ஒரு சிறு பெண்ணை இப்படி நடத்துவது கொடுமை இல்லையா என்று அவ்வப்போது காந்தி எதிர்ப்பாளர்கள் எழுதுவார்கள். உண்மைதான், இது நெருடலாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் காந்தி தன் மனதுக்கு உண்மையாக இருந்தார் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால் இது நமக்கெல்லாம் தெரிய வந்ததே காந்தி சொல்லித்தான்! இதைப் பற்றி மனு குறிப்பிடவே இல்லை.

சின்ன புத்தகம். மின் புத்தகத்தை இணைத்திருக்கிறேன். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்

12 thoughts on “மனுபென் காந்தி எழுதிய “பாபு – என் தாய்”

 1. //ஏனென்றால் இது நமக்கெல்லாம் தெரிய வந்ததே காந்தி சொல்லித்தான்!//

  Got From FB :
  மகாத்மா காந்தியா ..நித்யானந்தாவா…நாறியது காந்தி புகழ்!!

  மகாத்மா காந்தி பற்றி இந்த வாரம் வெளிவந்த இந்தியாடுடே பல விசயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி விட்டது..இந்தியா டுடேயில் பென்னிப்பென் என்ற பெண் உதவியாளர் டைரியில் குறிப்பிட்டிருந்தவற்றை கட்டுரை ஆக்கியிருக்கிறார்கள்..காந்தி தனக்கு பணிவிடை செய்ய நிறைய இளம்பெண்களை ஆசிரமத்தில் தங்க வைத்திருந்தார் அவர்களை ஷிப்ட் முறையில் இரண்டு இரண்டு பேராக தனது வலது இடது பக்கத்தில் ஒரே படுக்கையறையில் படுக்க வைத்துக்கொள்வார்….அணைப்பார்.. சில்மிசம் செய்வார்..பெரும்பாலும் நிர்வாணமாகதான் தன் பக்கத்தில் படுக்க வைத்துக்கொள்வார்.. அவர்கள் உணர்ச்சி வசப்படாமல் இருக்கின்றனரா என டெஸ்ட் செய்வாராம் இதற்கு பெயர்…பிரம்மச்சர்ய பரிசோதன என பெயரும் வைத்திருக்கிறார்..தன்னை தினசரி ஒரு பெண் குளிப்பாட்ட வேண்டும் என சொல்லி இருக்கிறார்…குளிப்பட்டும் அந்த பெண் உடையில்லாமல் இருக்க வேண்டும்..அப்படி குளிப்பாட்டிய சுசீலா நாயர் காந்தி இறந்தபின் சுதந்திர இந்தியாவில் இரு முறை சுகாதார மந்திரியாக இருந்தார்….பிரம்மச்சர்ய டெஸ்டை பென்களிடம் காட்டிய காந்தி ஆண்களிடம் காட்டவில்லை..இவருக்கு இந்த பரிசோதனை செய்யதான் நேரம் இருந்தது இதனால்தான் சுதந்திரத்தை வாங்கி தருவதிலும் நேரம் கடத்தினார்…பேச்சுவார்த்தை நடத்தி இருந்தா எப்போதோ சுதந்திரம் கிடைச்சிருக்கும்..காந்தியின் பாலுணர்வு பரிசோதனையை .. கண்டித்து மொரார்ஜி தேசாயும்,வல்லபாய் பட்டேலும் உடனே இதை நிறுத்தும்படி காந்திக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்..இது இன்னும் ஆவண கப்பகத்தில் இருக்கிறது..சரி இந்த தகவல்கள் எப்படி வெளிவந்தது..? காந்தி இரு பெண்களை தாங்கி நிற்கும் புகைப்படம் அடிக்கடி பார்த்திருப்போம்…அந்த பெண்களில் ஒருவர்தான் மனுப்பெண்…அவரது…டைரி இப்போது இந்தியா டுடேவுக்கு கிடைத்திருக்கிறது மொத்தம் 14 டைரி..எல்லாமே பாபுவின் லீலைகள் தான்….பாபு..? அதான் நம்ம மகாத்மா..!!

  எது உண்மை..?

  Like

  1. பிரபு ராஜேந்திரன், அதைதானே நானும் சொல்லி இருக்கிறேன்? இதில் என்ன முரண்பாடு? காந்தி இதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டால் தெரிந்திருக்காது. படேல் போன்றவர்கள் இது வெளியே தெரிந்தால் காந்தியின் இமேஜ் பாதிக்கப்படும் என்று காந்தியை நிறுத்தும்படி கெஞ்சி இருக்கிறார்கள் திட்டியே இருக்கிறார்கள். ஆனால் காந்தியே எல்லாருக்கும் – தனக்கு விறைத்தது உட்பட – சொல்லி இருக்கிறார்! அவருடைய நேர்மையை பிறகு எப்படி சந்தேகிக்க?

   என்ன பக்ஸ், context-இல் கூடவா புரியவில்லை? நச்சுப் பிடித்தவர் என்று திருத்தி இருக்கிறேன்.

   Like

 2. >>>உண்மையாகச் சொல்கிறேன், காந்தி ஒரு நச்சு.

  Ambiguous ஆக இருக்கிறதுப்பா! நச்சு என்று எதை குறிப்பிடுகிறாய் என்று விளக்கிவிடு. (நச்சு – poison அல்ல்து தொல்லை)

  Like

 3. இந்த விஷயத்தைப் பற்றி ஜெ.மோ தளத்தில் விளக்கோ விளக்கு என்று விளக்கியிருக்கின்றார். ஆயிரம் காரணம் இருந்தாலும், இது கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கின்றது. சாதரண ஆத்மாக்களுக்கு கொஞ்சம் ஜீரணிக்க கஷ்டமாகத்தான் இருக்கும் போல.

  மேலே கூறியபடி, எதையும் அவர் மறைக்கவில்லை. தனக்கு சரி என்று தோன்றியதை செய்தார். மனுவின் டைரிக்கு முன்பே இது பலருக்கு தெரிந்த விஷயம் என்கின்றார் ஜெ.மோ. அந்த FB(I) கமெண்ட் போல், யாரோ துப்பறிந்து கண்டுபிடித்தது இல்லை. (எதோ தோழர்! எழுதியது போல உள்ளது).

  http://www.jeyamohan.in/?p=5130
  http://www.jeyamohan.in/?p=5167
  http://www.jeyamohan.in/?p=5182
  http://www.jeyamohan.in/?p=5193

  அவர் கொஞ்சம் நை நை ஆசாமிதான். கலிகாலத்திற்கு ஏற்ற கிருஷ்ணனை விடுத்து, த்ரேதாயுகத்து ராமனை முன்மாதிரியாக கொண்டால் இப்படித்தான்.

  Like

 4. ஒரு தவறை செய்துவிட்டு, அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாலேயே ஒருவர் நேர்மையானவர் என்று ஆகிவிட முடியுமா?. அடையும் இலக்கைவிட பாதை முக்கியம் என்று சொன்னவர் அவர். ஆனால் அவரே தவறான பாதையைத் தேர்ந்துவிட்டு அதன் விளைவை சிலாகித்துப் பேசுவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். அவர்களும் மனிதர்கள்தானே என்று கூறி தப்பித்துவிட முடியாது.

  சித்பவானந்தா (பெயர் சரியா என்று நினைவில்லை) தான் தங்கும் அறைகளை கண்ணாடி தடுப்பு கொண்டுதான் மூடியிருப்பார். அவர் உள்ளே என்ன செய்கிறார் என்று யாரும் தெளிவாகப் பார்க்க முடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

  பொதுவாழ்வில் ஈடுபடுபவர் சதா எல்லோரின் பார்வைக்கும் ஆளாகிறார் என்பதால் அவர் தப்பிக்க முடியாது. அவர்களை விமர்சிப்பவர்களை, “நீ யோக்கியமா?” என்று கேட்கவும் முடியாது.

  இந்த புரிதல் அவசியம் என்பது என் தாழ்மையான கருத்து (அவரைப் பற்றிய கருத்துக்கள் உண்மையிலேயே உண்மையாக இருக்கும் பட்சத்தில்).

  Like

 5. ரெங்கசுப்ரமணி, ஆம் ஜெயமோகனின் விளக்கங்களை நானும் படித்திருக்கிறேன். ஜெயமோகனும் காமத்தைப் பற்றிய காந்தியின் அணுகுமுறையை உவக்கவில்லை. ஆனால் என் அளவுக்கு அவருக்கு நெருடுவதாகத் தெரியவில்லை.

  கேசவமணி, அது நமக்குத் தவறாகத் தெரிகிறது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல அவருக்குத் தவறாகத் தெரியவில்லை என்பதும் உண்மை. அதனால்தான் அவரால் அப்படி செய்ய முடிந்திருக்கிறது, அதைப் பற்றி வெளிப்படையாக பேசவும் முடிந்திருக்கிறது, படேல் போன்றவர்களின் ஆட்சேபங்களை தாண்டவும் முடிந்திருக்கிறது. (காந்தி தான் தவறு செய்திருந்ததாக நினைத்திருந்தால் அதையும் சொல்லி இருப்பார் என்று நீங்களும் நம்புவீர்கள் என்று நினைக்கிறேன்.)

  Like

 6. ஒரு தவறை செய்துவிட்டு, அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாலேயே ஒருவர் நேர்மையானவர் என்று ஆகிவிட முடியுமா?. // சரியான வாதம்.

  ஒண்ணும் வேண்டாம். இதே பரிசோதனைகளை கஸ்தூரிபாவும் செய்திருந்தால் காந்தி ஒத்துக் கொண்டிருந்திருப்பாரா?

  – சிமுலேஷன்

  Like

 7. இதை இப்படியும் பார்க்கலாம். ஜெயமோகன் சமீபத்தில் (’இப்படியும் இருக்கிறார்கள்’ என்று நினைக்கிறேன் – ”மொண்ணைகள்” பற்றியது ) ஒரு பெரியவர் (70 வயது) நாஞ்சிலையும், ஜெயமோகனையும் அடாத கேள்விகள் கேட்டதால் பெரியவருக்கு (பொதுவாக மொண்ணைகளுக்கு – பெரியவர் ஒரு ரெப்ரஸ்ண்டேஷன் மட்டுமே) ஒரு வித மன ஊணத்தை ஏற்படுத்தியதாக கூறுகிறார். அதன் முக்கியத்துவம் என்ன என்பதையும், இது போன்ற செயல்களை சமூகத்தில் யார் செய்யலாம், யார் செய்யக்கூடாது என்றும் விளக்குகிறார். விதி சமைப்பவர்கள் செய்யும் “பரிசோதனைகள்” யதார்த்த உலகத்திற்கு முரண்பட்டது. அந்த வகையில் பார்த்தால் காந்தி செய்த யாவும் ”தவறு தவறில்லை” என்று நீதி அளிக்க சராசரி மக்களுக்கு ஞானமும் இல்லை. உரிமையும் இல்லை. இங்கே சராசரி என்று நான் குறிப்பிடுவதில் ”ஒரு வகையில்” சர்தார் படேல், நேரு, ஜின்னா போன்றவர்கள் கூட அடங்குவர். (அது பற்றி தனி விளக்கம் கொடுக்க வேண்டும். முடிந்தால் பின்னர் பார்ப்போம்). படேல் ஒரு பெரிய தாதா வேலை ”மட்டுமே” செய்திருக்கிறார். ஆனால் காந்தியின் சோதனை தளங்களில் அவருக்கு பரிச்சயம் கிடையாது. அதனால் அவர் சொல்வதால், தட்டி கேட்பதால் எல்லாம் காந்தியை யதார்த்த தளத்தில் வைத்து பார்த்துவிடமுடியாது. சாக்ரடீஸ் தன் புரட்சிகர முற்போக்கு சிந்தனைகளால் இளைஞர்களை கெடுக்கிறார் என்று அனறைய யதார்த்த உலகமும் அரசும் பார்த்தது. ஆனால் இன்று அந்த சிந்தனைகள் நம் நாகரீக உலகின் எந்த மூலையிலும் ஒரு உரிமையாக பார்க்கப்படுகிறது.

  ”மனுபென் இந்தப் பரிசோதனைகளால் தான் மன நோய் கொண்டார்” என்றெல்லாம் சராசரிகளால் push poll வகை சூழ்ச்சிகள் செய்வது ”மொண்ணையாக” பார்ப்பவர்கள் மற்றும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் நுகர்வுக்கே.

  Like

 8. இதே கஸ்தூரிபா வை வேறு ஆண்கள், இந்த பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தால் காந்தி ஏற்றுகொள்வாரா ?

  Like

 9. சிமுலேஷன், தங்கராஜ், கஸ்தூரிபா என்ன செய்திருப்பார், அதை காந்தி எப்படி எதிர்கொண்டிருப்பார் என்றெல்லாம் நான் எப்படி யூகிக்க? ஆனால் அவருக்கு என்ன தோன்றி இருந்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்லி இருப்பார் என்று மட்டும் நான் பரிபூரணமாக நம்புகிறேன்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.