ஜான்சன் என்னை fascinate செய்யும் ஒரு ஆளுமை. ஏறக்குறைய நம்மூர் கருணாநிதி மாதிரி மனிதர். வாய்ப்பு கிடைத்தால் அடுத்தவர்களை அமுக்கிக் கொண்டே இருப்பது, சின்னத்தனம், ஊழல், கள்ள ஓட்டு, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கூஜா தூக்குவது, தனக்குக் கீழே பணி செய்பவர்களை ஏறி மிதிப்பது, அதிகார ஆசை என்ற பல வித பலவீனங்கள் உள்ளவர். அதே நேரத்தில் சிறு கூட்டங்களில், நேருக்கு நேராக, நன்றாகப் பேசத் தெரிந்தவர். மனிதர்களை புரிந்து கொண்டு அவர்கள் மூலம் காரியம் நடத்திக் கொள்ளத் தெரிந்தவர். ஏழைகளின் மீது உண்மையான பரிவு உள்ளவர். தான் ஏழையாக இருந்தபோது பட்ட அவமானங்களை மறக்காதவர். பல பலவீனங்கள் இருந்தாலும் தலைமைப் பண்பு உடையவர்.
இந்த மாதிரி ஒரு மனிதர்தான் லிங்கனுக்கு அடுத்தபடியாக அமெரிக்கக் கறுப்பர்களுக்கு ஆதரவாக இருந்தவர், சட்டங்கள் இயற்றியவர் என்றால் நம்ப முடிகிறதா? ஜான்சனின் இந்த முரண்பாடுகள்தான் என்னை fascinate செய்கின்றன. அமெரிக்க அரசியல் அமைப்பில் அப்படி என்ன மாயம் இருக்கிறது? இந்திய அரசியல் அமைப்பில் அப்படி என்ன இல்லாமல் போய்விட்டது? ஏன் ஜான்சன் கருணாநிதி போல வெற்றுவேட்டாக முடியவில்லை? ஏன் கருணாநிதி எத்தனையோ கொள்ளைகளுக்கு நடுவில் உருப்படியாக எதையும் செய்ய முடியவில்லை?
கியர்ன்சின் இந்தப் புத்தகம் ஜான்சனின் சாதனைகள், தோல்விகள் எல்லாவற்றுக்கும் காரணம் அவரது ஆளுமையே, அவரது சிறு வயதில் அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள், ஏழ்மை, எல்லாம் அவரை ஒரு manipulator ஆக மாற்றியது, அதுதான் அவரை பெரிய பதவிக்கும் கொண்டு வந்தது, வியட்நாமில் தோல்வி அடையவும் வைத்தது என்று வாதிடுகிறார்.
கியர்ண்ஸ் ஜான்சனின் உதவியாளர் மாதிரி ஒரு பதவியில் இருந்தவர். ஹார்வர்டில் படித்தவர்கள் என்றால் பிஸ்தா என்று ஜான்சனுக்கு ஒரு எண்ணம் உண்டு. பதவிக்காலம் முடிந்த பின் கியர்ன்ஸுடன் தன் வாழ்க்கையை ஆவணப்படுத்த முயற்சித்திருக்கிறார். கியர்ன்சுக்கு ஜான்சன் மீது அன்பு இருந்தாலும் அவரது பலவீனங்களை மறைக்கவில்லை. விமர்சங்கள் நிறைய. அவருக்கும் ஜான்சன் ஏன் இன்னும் சாதிக்கவில்லை என்ற கேள்விதான் மண்டையைக் குடைகிறது.
ராபர்ட் காரோவின் புத்தகங்களில் (1, 2) இன்னும் விவரமாக இருப்பதால் எனக்கு இந்தப் புத்தகம் பெரிதாக அப்பீல் ஆகவில்லை. ஆனால் தண்டி தண்டியாக காரோவின் புத்தகங்களைப் படிக்க சோம்பேறித்தனமாக இருந்தால் இதைப் படிக்கலாம். மேலும் காரோ இப்போதுதான் 1964 வரை வந்திருக்கிறார். இன்னும் ஜான்சனுக்கு 4 வருஷம் ஜனாதிபதி பதவி இருக்கிறது. 🙂
கியர்ண்சின் மிகவும் புகழ் பெற்ற புத்தகம் “Team of Rivals“. லிங்கனின் “மந்திரிசபை” பற்றிய புத்தகம். இதில் ஒரு சிறு பகுதிதான் சமீபத்தில் லிங்கன் என்று ஸ்பீல்பர்க் இயக்கத்தில் திரைப்படமாக வந்தது.
படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். அதுவும் காரோவின் புத்தகங்களைப் படிக்காதவர்கள் கட்டாயமாகப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்
தொடர்புடைய பதிவுகள்: ராபர்ட் காரோ எழுதிய Master of the Senate மற்றும் Passage to Power
RV,
You could add to your first paragraph on Johnson his rumored role in the assassination of Kennedy!
While on the subject of biographies, an astonishingly well researched one:
The Man Who Knew Infinity: A Life of the Genius Ramanujan by Robert Kanigel
GP
LikeLike
ஜிபி,
கென்னடி கொலையில் ஜான்சனின் பங்கு என்பது என்னைப் பொறுத்த வரையில் ஒரு conspiracy theory மட்டுமே. கனிகெலின் புத்தகத்தை என்றாவது படிக்க வேண்டும்…
LikeLike