ஃபேஸ்புக்கில் இரா. முருகன்:
சார்வாகனின் ‘அமர பண்டிதன்’ படித்திருக்கிறீர்களா? விஷ்ணு நாகராஜனின் ‘கொடுகொட்டியாட்டம்’ படித்திருக்கிறீர்களா? பொ.கருணாகரமூர்த்தியின் ‘அகதி உருவாகும் நேரம்’ படித்திருக்கிறீர்களா? ராஜநாராயணனின் ‘கிடை’ படித்திருக்கிறீர்களா? ஸ்ரீதரனின் ‘ராமாயணக் கலகம்’ படித்திருக்கிறீர்களா? நாகூர் ரூமியின் ‘குட்டி யாப்பா‘ படித்திருக்கிறீர்களா? ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’? ஜெயமோகன் பாலசங்கராக அவதாரம் எடுத்துக் கணையாழியில் எழுதிய ‘அம்மன் மரம்’?
எனக்குப் பிடித்த குறுநாவல்களில் இவையெல்லாம் (இன்னும் குறிப்பிட அவகாசம் இல்லாத பலவும் – என்னுடைய ‘விஷம்’ உட்பட) அடங்கும்.
நான் குறத்தி முடுக்கு மட்டுமே படித்திருக்கிறேன். குறத்தி முடுக்கை விட நாளை மற்றொரு நாளே எனக்கு இன்னும் பிடித்தமானது.
தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்
ஆச்சர்யமான பதிவு. தற்போதுதான் புத்தக அலமாரி நூலகத்துக்காக பழைய கணையாழி இதழ்களைப் புரட்டி, அம்மன் மரம, குட்டியப்பா கதைகளைத் தேர்ந்து வைத்தேன். ஜெயமோகன்தான் பாலசங்கர் என்பதை இப்போதே அறிய முடிந்தது.
LikeLike
கேசவமணி, குட்டி யாப்பா கதையை இன்னும் சில நாட்களில் இங்கே மீள்பதிக்கப் போகிறேன்.
LikeLike