Skip to content

சுஜாதாவின் “ஒரு நடுப்பகல் மரணம்”

by மேல் ஓகஸ்ட் 9, 2013

sujathaவாரப் பத்திரிகையில் தொடர்கதை எழுதுபவர்களுக்கு ஒரு பிரச்சினை உண்டு. கதையை எப்படி கொண்டு போவது என்று ஒரு ஐடியா இருக்கும். ஆரவாரமாக ஆரம்பிப்பார்கள். ஆனால் வாரம் போகப் போக குறித்த தேதியில் பத்து பக்கம் கொடுக்க வேண்டிய பிரஷர், குறித்த காலத்தில் முடிக்க வேண்டிய பிரஷர் எல்லாம் சேர்ந்து கொஞ்சம் சொதப்பிவிடும். வாராவாரம் படிக்கும்போது தெரியாமல் போகலாம். மொத்தமாகப் படிக்கும்போது தெளிவாகத் தெரிந்துவிடுகிறது. சுஜாதாவும் இதற்கு விலக்கல்ல.

sujatha_oru_naduppagal_maranamநடுப்பகல் மரணம் பிரமாதமாக ஆரம்பிக்கிறது. புது மாப்பிள்ளை மூர்த்தி, பெண் உமா. அவர்களுக்குள் ஏற்படும் ஆரம்ப கால உறவு. ஹனிமூன் காலத்தில் உடல் கவர்ச்சிக்கு கிடைத்துவிட்ட லைசன்ஸ். அதுவும் குறிப்பாக அவர்கள் பெங்களூர் போவது அமர்க்களமாக இருக்கும்.

ஆனால் சுஜாதாவுக்கு மர்மக் கதை மன்னர் என்று ஒரு பிம்பம் இருக்கிறதே? அதனால் மூர்த்தி இறக்கிறான். கொன்றது யார் என்று உமா துப்பறியக் கிளம்புகிறாள். கல்யாணம் ஆகி சில நாட்களே ஆன சூழலில் புகுந்த வீட்டில் சமநிலை () இல்லை, பிரச்சினைகள். உமாவின் பழைய காதலன், முறைப்பையன், மூர்த்திக்குப் பேசிய பெண் என்று சில பேர் மேல் சந்தேகம் பரவுகிறது. யார் கொலை செய்தது என்றுதான் கதை. மர்மம் சுவாரசியப்படவில்லை.

ரஜினியின் பிம்பம் அவரை சில ரோல்களையே திருப்பி திருப்பி செய்ய வைப்பது போல சுஜாதாவுக்கும் சில கட்டாயங்கள் இருந்திருக்கின்றன. தி.ஜா. அரைத்த மாவை அரைக்கிறார் என்று சில சமயம் எனக்குத் தோன்றுவதுண்டு. ஆனால் இது எல்லா பிரபல எழுத்தாளர்களுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை.

குங்குமத்தில் வந்த தொடர்கதை என்று தெரிகிறது. ஏனென்றால் கடைசியில் நாயகியிடம் பழைய காதலன் என்ன வேண்டும் என்று கேட்க கடைசி வரியில் அவள் சொல்வது – “குங்குமம்”.

NHM தளத்தில் கிடைக்கிறது. விலை 160 ரூபாய்.

ஆரம்ப அத்தியாயங்களுக்காக படிக்கலாம். தீவிர சுஜாதா ரசிகர்களுக்கு மட்டும்.


தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

Advertisements

From → Sujatha

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: