Skip to content

சுஜாதா எழுதிய “குருபிரசாதின் கடைசி தினம்”

by மேல் ஓகஸ்ட் 17, 2013

sujathaஇன்னும் ஒரு நேர்த்தியான படைப்பு.

தொழிலாளி குருபிரசாத் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் இறந்து போகிறான். அவ்வளவுதான் கதை.

டாக்டர், ஆம்புலன்ஸ் டிரைவர், மற்றும் பலரின் சாதாரண அலட்சியங்கள் சேர்ந்து அவனைக் கொன்றுவிடுகின்றன. Bureauracracy-இன் அலட்சியம் நன்றாக வந்திருக்கும்.

அமைப்புகளின் ஒவ்வொரு கண்ணியிலும் இருக்கும் சின்னக் சின்னக் குறைகள்; அலட்சியங்கள்; அவை ஒவ்வொன்றும் சேர்ந்து snowball ஆகி ஒரு தவிர்க்கக் கூடிய துயரத்தை கிரேக்க சோக நாடகங்களின் inevitability போல, கர்ணனின் வாழ்வு போல, தவிர்க்க முடியாத துயரமாக மாற்றுவதை கச்சிதமாகச் சித்தரித்திருக்கிறார்.

bk121206_guruprashathin-kadasi-dinamMatter of fact, documentary style-உம் நடையும் துயரத்தை உயர்த்திக் காட்டுகின்றன, நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றன. இதே கதையை நா.பா.வோ அகிலனோ எழுதி இருந்தால் சமூகத்தின் குறைகளைப் பற்றி பொங்கி எழுந்திருப்பார்கள். அப்படி உபதேசம் செய்யாமல் இருந்ததுதான் அந்தக் காலத்தில் சுஜாதாவை வித்தியாசப்படுத்தி காட்டி இருக்கிறது.

கதையின் முடிவில் இந்த அலட்சியங்களுக்கு எதிராக தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் நடக்கிறது. ஆனால் இறந்த தொழிலாளியின் பேர் என்ன என்று கூட யாருக்கும் சரியாக தெரியவில்லை. சிறு வயதில் படிக்கும்போது இந்த அபத்தம் (irony) என்னைக் கவர்ந்தது. ஆனால் இன்று அந்த அபத்தத்தின் விவரிப்பு இல்லாமல் இருந்தால் இன்னும் subtle ஆக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

சுஜாதா இது தன் படைப்புகளில் தனக்கும் பிடித்தமானது என்று எங்கோ சொல்லி இருக்கிறார். ஒரு வாசகர் கேள்விக்கு சுஜாதா பதில்:

எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களில் சராசரி மனிதர் ரங்கராஜனைப் பாதித்த நாவல்கள் எவை ?
குருபிரசாதின் கடைசி தினம், காகிதச் சங்கிலிகள்.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை எழுபது ரூபாய்.

சுஜாதாவின் இலக்கியப் பங்களிப்பு இது போன்ற கதைகளில்தான்.


தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

From → Sujatha

3 பின்னூட்டங்கள்
 1. கை என்றொரு குறு நாவல் படித்திருக்கிறீர்களா?
  இந்த மாதிரிக் கதைகள் தான் சுஜாதாவுக்கு நன்றாக வந்தது. அவர் ஏனோ கொஞ்சம் கிளுகிளுப்பு சேர்த்து துப்பறியும் கதை அல்லது கிளுகிளுப்பு சேர்த்து மர்மக் கதை என்றே எழுதி காலத்தை வீணடித்து விட்டாரோ என்று எனக்குத் தோன்றுவது உண்டு. கம்ப்யூட்டர் கிராமம், கரையெல்லாம் செண்பகப்பூ என்று நன்றாக ஆரம்பிக்கும் கதைகளைக் கூட கடைசியில் ஒரு மர்மக் கதையாக மாற்றும் சுஜாதா பாணி எனக்குக் கொஞ்சம் வியப்பை அளிப்பது உண்மைதான். அப்படி இல்லாமல் இறுதி வரை மனிதர்களின் நுண்ணிய உணர்வுகளை வைத்து எழுதிய கதைகள் எல்லாமே நிச்சயம் இலக்கியம் தான் (உ.ம். விடிவதற்குள் வா, வண்ணத்துப் பூச்சி வேட்டை, ஒரே ஒரு துரோகம், வாய்மையே சில சமயம் வெல்லும் போன்றவை).

  Like

  • ப்ருந்தாபன், கையை நான் பெரிதாக சிலாகிக்க மாட்டேன். ஆனால் சுஜாதா நேரத்தை வீணடித்தாரோ என்று எனக்கும் தோன்றுவது உண்டு.
   ரமேஷ் கல்யாண், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பற்றி நல்ல அவதானிப்பு.

   Like

 2. Ramesh Kalyan permalink

  இறுதியில் இறந்தவரின் பெயர் கூட சரியாக தெரியாமல் போவது என்பதை ஓரிரு வாக்கியங்களில்தான் சொல்லி இருப்பார். இதில் இரண்டு விஷயங்களை கவனிக்கலாம். டாக்டர் உள்ளிட்ட பலரும் அலட்சியமாக இருக்கையில் ஆம்புலஸ் ட்ரைவன் நிலை தர்மசங்கடம் – தன் வேலை பற்றிய பயம் இருக்கிறது. இன்றைய சூழலில் இந்த சம்பவம் பெரிய அதிர்வை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் அது இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது என்பதே சமூகத்தின் தோல்வியைச் சொல்லும் கதையின் வெற்றி.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: