மாடஸ்டி ப்லைஸ்

modesty_blaiseசிறு வயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக Modesty Blaise காமிக்ஸ் புத்தகங்களை படித்திருந்தாலும், மனத்தைக் கவரவில்லை. மாடஸ்டியின் இரண்டாவது பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கூட நினைவில்லை. ப்லைஸ், ப்ளைஸ், ப்லேய்ஸ், ப்ளேய்ஸ்? தமிழ் மொழிபெயர்ப்புகளில் ப்ளேஸ் என்று எழுதப்பட்டுள்ளது என்று காமிக்ஸ்களின் பரம விசிறி ஆன கிங் விஸ்வா தகவல் தருகிறார். தற்செயலாக சில ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை சமீபத்தில் படித்தேன்.

Pulp fiction என்று சொல்வார்கள். கொஞ்சம் வன்முறை, குற்றங்கள், விறுவிறுவென்ற நடை, வேகமாக நகரும் கதை, பல ஆக்ஷன் – அதாவது அடிதடி சீன்கள் நிறைந்த கதைகள்; காரக்டர்கள் அனேகமாக ஸ்டீரியோடைப்பாக இருக்கும். தமிழில் பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேஷ்குமார் போன்றவர்கள் ஏறக்குறைய இந்த மாதிரி எழுதுகிறார்கள். மாடஸ்டி அந்த ரகம். 37, 38 வயதுப் பெண் புயல்; கோங்கோ என்ற சின்ன ஆயுதத்தைப் பயன்படுத்துவதில் (கிட்டத்தட்ட வர்மக்கலை மாதிரி) நிபுணி; குற்ற வாழ்க்கையின் மூலம் நிறைய பணம் சேர்த்தாயிற்று. இப்போது வாழ்க்கை கொஞ்சம் போரடிக்கிறது. வலது கையான, கத்தி வீசுவதில் நிபுணனான வில்லி கார்வினுக்கும் இதே நிலைதான். இங்கிலாந்தின் உளவுத்துறை தலைவர் டரான்ட் இருவரையும் தனது துறைக்காக recruit செய்துகொள்கிறார்.

modesty_willie_garvinஎல்லா கதைகளிலும் யாராவது வில்லன்(கள்) டராண்டின் கண்களில் படுவார்கள்; இல்லை என்றால் மாடஸ்டி, கார்வின் இருவரில் யாராவது ஒருவருக்கு வேண்டியவரை கொல்வார்கள், கடத்துவார்கள் இந்த மாதிரி; சில சமயம் இருவரும் போவார்கள், இல்லை என்றால் மாடஸ்டியுடன் பாதி புத்தகத்தில் கார்வின் சேர்ந்து கொள்வார். ஒரு confrontation சீன் இருக்கும். அந்த சீனில் கார்வின் கத்தி வீசுவார், மாடஸ்டி சுடுவாள்/இல்லை என்றால் தன் கோங்கோவை பயன்படுத்தி எதிரியை செயலிழக்க செய்வாள்.

மாடஸ்டியின் பலம் ஓவியர் ஜிம் ஹோல்டவேயின் மிக நேர்த்தியான சித்திரங்கள்; மாடஸ்டிக்கும், வில்லி கார்வினுக்கும் உள்ள உறவு; சிம்பிளான வாழும் முறை; மாடஸ்டியின் moral code; பலவீனம் ஃபார்முலாவை தாண்டாத கதைகள் – ஃபார்முலாவை தாண்ட ஆசிரியர் பீட்டர் ஓ’டொன்னல் விரும்பவில்லை. அதனால் ஒன்றிரண்டு படித்தால் போதும். கிட்டத்தட்ட நூறு 96 புத்தகங்கள் இருக்கின்றனவாம். ஒவ்வொன்றிலும் ஒரு நூற்று இருபது, முப்பது panels (மூன்று சித்திரங்கள் கொண்டது) இருக்கலாம்.

எனக்குப் பிடித்த strips Scarlet Maiden (1981), Moonman (1982). சமீபத்தில் நான் படித்த பிற strips Galley Slaves (1968), Red Gryphon (1968), Hell-Makers (1969), Takeover (1969), Warlords of Phoenix (1970), Willie the Djinn (1970), Puppet Master (1972), With Love from Rufus (1972), The Bluebeard Affair (1972), A Few Flowers for the Colonel (1982).

சில நாவல்களும், சிறுகதைத் தொகுப்புகளும் கூட வந்திருக்கின்றன. மாடஸ்டி எப்படி டராண்டின் unofficial employee ஆனாள் என்பதை Modesty Blaise (1965) நாவல் விவரிக்கிறது. Pieces of Modesty (1972) ஒரு சிறுகதைத் தொகுப்பு. ஒரு கதையில் பெர்லின் சுவரைக் கடக்க மனித பீரங்கி என்று சர்க்கஸில் இருக்குமே அதைப் போன்ற ஒன்றை வைத்து ‘விஞ்ஞானியை’ சுவரைத் தாண்டி சுட்டு அனுப்புகிறார்கள். Last Day in Limbo (1976) சுவாரசியமான களத்தைக் கொண்டது. வில்லி/வில்லன்கள் பணக்காரர்களைக் கடத்தி தங்கள் பண்ணையில் அடிமையாக சேர்த்துக் கொள்கிறார்கள்! Dragon’s Claw (1978)விலும் இதே போல ஒரு வில்லன். தான் உலகமெங்கும் திருடி சேர்த்திருக்கும் ஓவியங்கள், கலைப்பொருட்களை காட்டி பீற்றிக் கொள்வதற்காக ஓவியர்கள், கலை விமர்சகர்களை கடத்திக் கொண்டு வந்து அவற்றைக் காட்டிவிட்டு பிறகு கொன்றுவிடுகிறான். Xanadu Talisman (1981) நாவலில் இரானிய ஷாவின் கிரீடத்தை பின்புலமாக வைத்து ஒரு கதை. Cobra Trap (1996) மற்றுமொரு சிறுகதைத் தொகுப்பு. கடைசி சிறுகதையில் இப்போது ஐம்பத்து சொச்சம் வயது இருக்கும் மாடஸ்டியும் கார்வினும் இறந்துவிடுகிறார்கள்.

கிங் விஸ்வா தரும் தகவல்கள்: மூன்று/நான்கு கதைகளை கொண்ட ஒரு தொகுப்பாக டைட்டன் இதுவரை இருபது புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள். அதில் இந்த கதைகளின் பின்புலம், கதை உருவான வரலாறு என்று அட்டகாசமான ஒரு கலெக்டர்ஸ் எடிஷனாக அது அமைந்து இருக்கிறது. மாடஸ்டி தமிழுக்கு அறிமுகம் ஆனது கல்கி/குமுதம் வாயிலாக. மேற்கொண்டு விவரங்களுக்கு தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்துக்குப் போய்ப் பாருங்கள்.

த்ரில்லர் படிப்பதில் விருப்பம் உள்ளவர்களுக்கு மாடஸ்டி ஒரு சிம்பிள் pulp fiction உலகத்தை காட்டுகிறது. அந்த உலகத்துக்குள் இது ஒரு கிளாசிக்.


 

தொகுக்கப்பட்ட பக்கம்: காமிக்ஸ்

தொடர்புடைய சுட்டிகள்:
மாடஸ்டி ப்ளைஸ் பற்றிய விக்கி குறிப்பு
பீட்டர் ஓ’டொன்னல் பற்றிய விக்கி குறிப்பு
தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் மாடஸ்டி

3 thoughts on “மாடஸ்டி ப்லைஸ்

 1. 1. தமிழ் “படுத்தப்பட்ட” பெயர் = ப்ளேஸ்

  2.//தற்செயலாக சில ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை சமீபத்தில் படித்தேன்// எந்த தொகுப்பில்?

  டைட்டன் நிறுவன வெளியீடாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் இந்த பதிவை எழுதி இருக்க மாட்டீர்கள். மூன்று/நான்கு கதைகளை கொண்ட ஒரு தொகுப்பாக டைட்டன் இதுவரை இருவது புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள். அதில் இந்த கதைகளின் பின்புலம், கதை உருவான வரலாறு என்று அட்டகாசமான ஒரு கலெக்டர்ஸ் எடிஷனாக அது அமைந்து இருக்கிறது.

  3. //இங்கிலாந்தின் உளவுத்துறை தலைவர் டரான்ட் இருவரையும் தனது துறைக்காக recruit செய்துகொள்கிறார்.//

  இந்த சொற்தொடர் பிரயோகமே தவறாக இருக்கிறதே? They never got recruited.

  4. // அதனால் ஒன்றிரண்டு படித்தால் போதும். கிட்டத்தட்ட நூறு புத்தகங்கள் இருக்கின்றனவாம். //

  மொத்தம் 96 தான். ஆனால் நீங்கள் சொல்வது போல ஒன்றிரண்டு மட்டுமே படித்தால் போதாது.

  பின் குறிப்பு: மாடஸ்டி தமிழுக்கு அறிமுகம் ஆனது கல்கி / குமுதம் வாயிலாக. மேற்கொண்டு விவரங்களுக்கு (விளம்பரமாக கருதாத பட்சத்தில்)

  http://tamilcomicsulagam.blogspot.in/2010/06/modesty-blaise-arguably-best-comics.html

  Like

 2. காமிக்ஸ்களின் அத்தாரிட்டி சொன்னால் சரியாகத்தான் இருக்கும். பயங்கர ரசிகர் போல. ஒரே ஒரு காமிக்ஸ் படித்த நினைவு வருகின்றது. ஏதோ ஒரு தீவில் சென்று அடைபட்டு தப்பித்து வருவது. ராணி காமிக்ஸ்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.