Skip to content

பாலகுமாரனின் “ஆனந்த வயல்”

by மேல் செப்ரெம்பர் 16, 2013

balakumaranபாலகுமாரனைப் பற்றி பல மாதங்கள் முன்னால் ஜெயமோகன் தளத்தில் ஒரு சர்ச்சை. பாலகுமாரனுக்கு “ஆதரவாக” பேசிய பலரும் ஜெயமோகன் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ள முயற்சி கூட செய்யவில்லை. அவர்களது கோபம் வெறும் (ஆனால் உண்மையான) உணர்ச்சியின் வெளிப்பாடு, ஜெயமோகன் சொல்வதைப் புரிந்து கொண்டு அதற்கு எதிராக எழுந்த வாதம் இல்லை. அதே நேரத்தில் ஜெயமோகனும் பாலகுமாரன்=சுஜாதா+தி.ஜா.+ஒரு மேல் காமப் பூச்சு என்று சுலபமாக புறம் தள்ளியது எனக்கு சரியாகப் படவில்லை. பாலகுமாரன் பல எக்கச்சக்க குப்பைகளை எழுதி இருக்கிறார் என்பது வாஸ்தவம்தான். ஆனால் அவருக்கு சில சாதனைகளும் உண்டு, தமிழ் இலக்கியத்தில் ஒரு footnote அளவுக்காவது இடம் உண்டு என்றே நான் கருதுகிறேன்.

aanandha_vayalமெர்க்குரிப் பூக்கள், பந்தயப் புறா, இரும்புக் குதிரைகள், கரையோர முதலைகள், அகல்யா, ஆனந்தவயல் போன்ற நாவல்கள் இந்த மாதிரி நான் நினைப்பதற்கு ஒரு முக்கியமான காரணம். நான் பாலகுமாரனைப் படிக்க ஆரம்பித்தபோது இந்த நாவல்கள், மற்றும் பல தளங்களில் (பூ வியாபாரி, காய்கறி மார்க்கெட், சென்னையில் நடக்கும் கண்காட்சி, நிலக்கடலை விவசாயம்…) அவர் எழுதியதைப் பார்த்து அவரை தி.ஜா.வை விடவே ஒரு படி அதிகமாக மதிப்பிட்டேன். என்ன தற்செயலோ, அவரது குப்பைகள் எதுவுமே அப்போது கண்ணில் படவில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அந்த முதல் பிரமிப்பு குறைந்துபோய் பாலகுமாரன் எங்கே, தி.ஜா. எங்கே என்பது புரிந்தது.

ஆனந்த வயல் உலகத்தரம் வாய்ந்த நாவல் என்று சொல்வதற்கில்லை. குறைகள் இல்லாத நாவல் இல்லை. மெலோட்ராமா அதிகம். அங்கங்கே வலிந்து sexual references-ஐ புகுத்தி இருக்கிறார். ஆனால் எந்த ஒரு நாவலுக்கும் வேண்டிய அடிப்படைத் தேவையான சுவாரசியம் இருக்கிறது. பாத்திரங்களில், உரையாடல்களில் நிஜம் தெரிகிறது. சம்பவங்களில்தான் கொஞ்சம் செயற்கைத் தன்மை. முதலிலேயே திட்டமிட்டு எழுதாமல் வாராவாரம் தொடர்கதையாக எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன், அதனால் அவ்வப்போது கதையை எப்படி கொண்டு போவது என்ற குழப்பம் தெரிகிறது. ஆரம்பத்தில் இருக்கும் ஜோர் போகப் போகக் குறைந்துவிடுகிறது.

ஆனந்த வயலின் பெரிய பலம் பாத்திரங்கள். அதுவும் குறிப்பாக நாயகன் பன்னீர்செல்வத்தின் மாமியார். இந்த மாதிரி ஆட்கள் இப்போதும் இருப்பார்கள் என்று தோன்றவில்லை, ஆனால் சிறுவனாக இருந்த காலத்தில் நான் பார்த்து பழகி இருக்கிறேன். பதினைந்து பதினாறு வயதுக்குப் பின் – லுங்கி கட்ட ஆரம்பித்த பின் – நான் அவர்களுக்கு திடீரென்று வேற்று மனிதனாகிவிட்டது அதிசயப்படுத்தியது. அந்த மாதிரி மனிதர்களை தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார். ஒரு கிராமத்து “பெரிய” மனிதர்கள் சூழல், மிகுந்த அன்புள்ள கணவன் மனைவி, “பங்காளிகளுக்குள்” உள்ளுக்குள் புழங்கும் கடுப்பு எல்லாம் நன்றாக வந்திருக்கும்.

அதே போல சில காட்சிகளும் – கப்பலோட்டிய தமிழன் படத்தை இலவசமாகத் திரையிடும் பன்னீர், அடிக்க வந்த செண்பகாவின் உறவினர்களுக்கு சுக்குக்காப்பி வைத்துக் கொடுக்கும் பன்னீரின் அப்பா, கோவிலுக்கு மாமியாரை அழைத்துச் செல்லும் பன்னீர் – நன்றாக இருக்கும்.

இதெல்லாம் இருந்தாலும் கதை கொஞ்சம் பலவீனமானது. கதையில் முடிச்சை எப்படிப் போடுவது என்று சரியாகப் புரியாமல் என்னவோ பழைய கதை, பங்காளி கதை என்றெல்லாம் இழுத்திருப்பார்.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 95 ரூபாய்.

பாலகுமாரனின் படைப்புகளில் முக்கியமான ஒன்று. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: பாலகுமாரனின் தளம்

Advertisements

From → Balakumaran

2 பின்னூட்டங்கள்
 1. aramanan permalink

  I have read “Anandha vayal”, it is okay.  

   

  Thamizhargalin Thaagam Thamizh Eazha Thayagam  Ramanan –

  ________________________________

  Like

Trackbacks & Pingbacks

 1. பாலகுமாரன் – அஞ்சலி | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: