கோவை ஞானியைப் பற்றி நான் கேள்விப்பட்டிருப்பதெல்லாம் ஜெயமோகன் மூலம்தான். அவருக்கு ஒரு தளம் புதிதாக செயல்படுகிறது. அவரது பல புத்தகங்களை அங்கே படிக்க முடிகிறது. “மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம்” என்ற புத்தகத்தில் அவர் ஒரு பட்டியல் போட்டிருக்கிறார். (புத்தகம் எனக்குப் பெரிதாக அப்பீல் ஆகவில்லை) முக்கியமான முயற்சிகள் என்று பொதுவாகக் கருதப்படும் பல புத்தகங்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறுகின்றன. அவை வெற்றி பெற்றனவா இல்லையா என்பதைப் பற்றி அவர் அவ்வளவாக கவலைப்படவில்லை. 🙂 அந்தப் பட்டியல் கீழே.
- க.நா.சு. – பொய்த்தேவு
- கல்கி – சிவகாமியின் சபதம்
- சி.சு. செல்லப்பா – சுதந்திர தாகம்
- அகிலன் – பாவை விளக்கு
- நா.பா. – குறிஞ்சி மலர்
- மு.வ. – நெஞ்சில் ஒரு முள்
- கோவி. மணிசேகரன் – குற்றாலக் குறிஞ்சி
- தி.ஜா. – மோகமுள்
- எம்.வி. வெங்கட்ராம் – காதுகள்
- கரிச்சான் குஞ்சு – பசித்த மானுடம்
- சுந்தர ராமசாமி – ஜேஜே சில குறிப்புகள்
- விந்தன் – பாலும் பாவையும்
- ஜெயகாந்தன் – ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
- பிரபஞ்சன் – வானம் வசப்படும்
- தொ.மு.சி. ரகுநாதன் – பஞ்சும் பசியும்
- டி. செல்வராஜ் – தேனீர்
- சின்னப்ப பாரதி – சங்கம்
- ராஜம் கிருஷ்ணன் – மண்ணகத்துப் பூந்தளிர்
- சு. சமுத்திரம் – வாடாமல்லி
- அஸ்வகோஷ் – சிறகுகள் விரித்து
- இ.பா. – ஏசுவின் தோழர்கள்
- அசோகமித்ரன் – ஒற்றன்
- சா. கந்தசாமி – தொலைந்து போனவர்கள்
- வண்ணநிலவன் – கடல்புரத்தில்
- சம்பத் – இடைவெளி
- சுஜாதா – கனவுத் தொழிற்சாலை
- பாலகுமாரன் – இரும்புக் குதிரைகள்
- திலகவதி – சொப்பன பூமியில்
- ஜெயந்தன் – ஞானக் கிறுக்கன்
- மா. அரங்கநாதன் – பறளியாற்று மாந்தர்
- காவேரி – ஆத்துக்குப் போகணும்
- தோப்பில் – சாய்வு நாற்காலி
- ம.ந. ராமசாமி – நாலாவான்
- சிவசங்கரி – பாலங்கள்
- ஜோதிர்லஜா கிரிஜா – மணிக்கொடி
- நாஞ்சில் – சதுரங்கக் குதிரைகள்
- நாஞ்சில் – மிதவை
- சி.ஆர். ரவீந்திரன் – மஞ்சுவெளி
- தமிழ்நாடன் – சாரா
- தமிழவன் – ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
- சுப்ரபாரதிமணியன் – மற்றும் சிலர்
- சூரியகாந்தன் – மானாவாரி மனிதர்கள்
- இறையன்பு – ஆற்றங்கரையோரம்
- தஞ்சை பிரகாஷ் – கள்ளம்
- பாமா – கருக்கு
- சாரு நிவேதிதா – ஜீரோ டிகிரி
- அஸ்வத் – நல்லூர் மனிதர்கள்
- கணேசலிங்கன் – தரையும் தாரகையும்
- கே. டானியல் – பஞ்சமர்
- எஸ்.பொ. – சடங்கு
- தேவகாந்தன் – விதி
- செ. யோகநாதன் – அகதியின் முகம்
- ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் – தேம்ஸ் நதிக்கரையில்
- ஜெயமோகன் – விஷ்ணுபுரம்
- இமயம் – கோவேறு கழுதைகள்
- சோ. தர்மன் – தூர்வை
- சு. வேணுகோபால் – நுண்வெளி கிரணங்கள்
- நீல. பத்மநாபன் – தலைமுறைகள்
- ஆ. மாதவன் – கிருஷ்ணப்பருந்து
- ஆர். ஷண்முகசுந்தரம் – நாகம்மாள்
- காவ்யா ஷண்முகசுந்தரம் – அந்தி
- தங்கர் பச்சான் – ஒன்பது ரூபாய் நோட்டு
- கி.ரா. – கோபல்லபுரத்து மக்கள்
- அழகியநாயகி – கவலை
- ஜி. நாகராஜன் – நாளை மற்றொரு நாளே
- கருணாநிதி – தென்பாண்டி சிங்கம்
- பாவை சந்திரன் – நல்ல நிலம்
- ர.சு. நல்லபெருமாள் – கல்லுக்குள் ஈரம்
- ஹெப்சிபா ஜேசுதாசன் – புத்தம்வீடு
- லா.ச.ரா. – அபிதா
- ப. சிங்காரம் – புயலிலே ஒரு தோணி
- வடிவேலன் – தொட்டிக்கட்டு வீடு
- பா. விசாலம் – மெல்லக் கனவாய் பழங்கதையாய்
- நகுலன் – வாக்குமூலம்
- எஸ். சங்கரநாராயணன் – மானுட சங்கமம்
- விட்டல் ராவ் – நதிமூலம்
- பெருமாள் முருகன் – ஏறுவெயில்
- கிருத்திகா – நேற்றிருந்தோம்
- சிவகாமி – ஆனந்தாயி
- வே. சபாநாயகம் – ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது
- ஆதவன் – காகித மலர்கள்
- பூமணி – நைவேத்யம்
பாவண்ணன் மற்றும் அண்ணாதுரையின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருந்தாலும் எந்த நாவலும் குறிப்பிடப்படவில்லை.
தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்