Skip to content

சிறுவர் பாடல்

by மேல் ஜனவரி 19, 2014

நான்கரை வயதில் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தபோது முதல் முதலாகக் கற்றுக் கொண்ட பாட்டு இதுதான்.

ஒரு ஈயாம். அதற்கு அதன் பேர் என்னவென்று மறந்துவிட்டதாம். அது ஒரு கன்றுக்குட்டியிடம் போய் தன் பேர் என்ன என்று கேட்டதாம்.
        கொழுகொழு கன்றே என் பேரென்ன?

கன்றுக்குட்டி எனக்குத் தெரியாது, என் அம்மாவிடம் கேள் என்றதாம். உடனே ஈ அந்தப் பசுவிடம் சென்று கேட்டதாம்.
        கொழுகொழு கன்றே கன்றின் தாயே என் பேரென்ன?

அந்தப் பசு எனக்குத் தெரியாது, என்னை மேய்க்கும் இடையனிடம் கேள் என்றதாம். உடனே அந்த இடையனிடம் கேட்டதாம்.
        கொழுகொழு கன்றே கன்றின் தாயே மாடு மேய்க்கும் இடையா என் பேரென்ன?

இப்படியே தொடரும் பாட்டு:

கொழுகொழு கன்றே
கன்றின் தாயே
மாடு மேய்க்கும் இடையா
இடையன் கைக்கோலே
கோல் வளர்ந்த கொடிமரமே
கொடிமரத்துக் கொக்கே
கொக்கு வாழும் குளமே
குளத்தங்கரை மீனே
மீன் பிடிக்கும் வலையா
வலையன் கைச்சட்டியே
சட்டி செய்த மண்ணே
மண்ணில் வளரும் புல்லே
புல்லைத் தின்னும் குதிரை
என் பேரென்ன?

அந்தக் குதிரை ஈஈஈஈஈஈஈ என்று கனைத்தாம். உடனே அந்த ஈக்கும் அதுதான் தன் பேர் என்று ஞாபகம் வந்துவிட்டதாம், சுபம்!

இந்த மாதிரிப் பாட்டுகளெல்லாம் இப்போதும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றனவா இல்லை பாபா ப்ளாக் ஷீப்தானா? இதை எல்லாம் மறந்து கொண்டிருக்கிறோம் என்றால் சோகம்தான். சோகத்தைக் குறைத்துக் கொள்ள நல்ல வழி இப்படிப்பட்டவற்றைத் தொகுப்பது. அதனால் நினைவிருப்பதை பின்னூட்டமாக எழுதுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலவும்

Advertisements

From → Misc

5 பின்னூட்டங்கள்
 1. யூட்யூபில் அபிராமி மேஜிக் பாக்ஸ் என்று ஏகப்பட்ட பாடல்கள் கிடைக்கின்றது. விலங்குகள் பற்றியது, பள்ளிகளில் கற்றுத்தரும் பாட்டு என்று. என் பெண்ணிற்காக தேடி, கொஞ்ச நாள் நானே தனியாக இப்பாடல்களை முனங்கிக் கொண்டிருந்தேன். அவளால் இப்பாடல்கள் மூலம் விலங்குகளை அடையாளம் காண முடிகின்றது. குட்டி குட்டி கதைகளும் கிடைக்கின்றன. ஆனால் பெரும்பாலான பாடல்கள் தெரிந்தவைதான். தோசையம்மா தோசை, நிலா நிலா ஓடி வா, பல்லு போன பாட்டி.

  Like

 2. அந்த நாட்களை நினைவூட்டும் நண்பருக்கு நன்றி.

  புல்லைத் தின்னும் குதிரையே என் பேரென்ன?

  வரி மட்டுமே நினைவில் இருக்கிறது.
  பாடலின் முதல்வரிகள், எங்கள் பள்ளியில் வேறுவிதமாக சொல்லித் தரப்பட்டதா, இல்லை முற்றிலும் மறந்து விட்டேனா, தெரியவில்லை.

  Like

  • ரெங்கசுப்ரமணி, பிரபலமான சிறுவர் பாடல்களையும் தொகுக்கத்தான் வேண்டும்…

   மின்னல்சொல், இந்தப் பாட்டைக் கேட்ட இன்னொருவர்! சந்திப்பதில் மகிழ்ச்சி! (இது தில்லி துரையா?)

   Like

 3. இதே மாதிரி இன்னொரு வேடிக்கையான ஒரு பாடலையும் நான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன் .. அது குழந்தைகள் விளையாடும் போது கண்ண முடிக்கிற ஒருத்தரையோ இல்ல கடைசியா SORT பண்றதுக்கோ பண்ற பாடல்.. ஏறக்குறைய அது “அக்கிளி பிக்கிலி மகா சுகா பால் பரங்கி கட்டமா குட்டமா செல்லடி போ ” இந்த மாதிரி வரும்.. தெரிஞ்சா சொல்லுங்களேன் !!.. 🙂

  Like

 4. அருணா permalink

  ஆர்,வி – எனக்கும் இந்த பாடல் ஞாபகம் இருக்கிறது. நான் என் தங்கைக்கு சொல்லியும் கொடுத்திருக்கிறேன்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: