முந்தைய ஒரு பதிவின் நீட்சி இது
சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் இட்ஸ்டிஃப் என்ற வானொலி நிகழ்ச்சியை பல வருஷங்களாக சிறப்பாக நடத்தி வரும் ஶ்ரீகாந்த் ஶ்ரீனிவாசா தமிழ்ப் புத்தகங்களை ஆடியோவாகக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கல்கியின் சரித்திர நாவல்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை, உ.வே. சாமிநாதய்யரின் “என் சரித்திரம்” ஆகியவை itunes மற்றும் ஆண்ட்ராய்ட் தொழில் நுட்பத்தில் கேட்கலாம். ஶ்ரீ பல தமிழ் நாடகங்களில் நடித்தவர். அவர் இந்த ஆடியோ புத்தகங்களை பாத்திரத்துக்கேற்ப குரலை கொஞ்சம் மாற்றிப் பேசுவது இவற்றை இன்னும் சுவாரசியமாக ஆக்குகிறது.
இந்த ஆடியோ புத்தகங்கள் தமிழ் படிக்கத் தெரியாத இன்றைய தலைமுறையினருக்கு உதவியாக இருக்கும்.
2011இல் வெளியான பொன்னியின் செல்வன் ஆடியோ 75 மணி நேரம்; சிவகாமியின் சபதம் 33 மணி நேரம் (2012); பார்த்திபன் கனவு 11 மணி நேரம் (2011). என் சரித்திரம் 24 மணி நேரம் (2014)
வாங்க இந்தத் தளத்துக்கு செல்லுங்கள்.
இவற்றைப் பற்றிய தினமலர் விமர்சனம் இங்கே. பதிவர் ரமணனின் விமர்சனம் இங்கே. ஸ்ரீயைப் பற்றி ஹிந்து பத்திரிகையில் வந்த குறிப்பு இங்கே.
தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்