த நேம் இஸ் பாண்ட். ஜேம்ஸ் பாண்ட்.

என் பதின்ம வயதின் high points-களில் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களுக்கு முக்கிய இடம் உண்டு. அதுவும் கல்லூரியில் சிவகுருவும் நானும் இந்தப் படங்கள் வந்தால் விடாமல் போய்ப் பார்ப்போம். திரைப்படங்கள் மூலமாகத்தான் நான் பாண்ட் நாவல்களை படிக்கத் தொடங்கினேன்.

திரைப்படங்களோடு ஒப்பிட்டால் நாவல்கள் கொஞ்சம் low-keyதான். என்னதான் வர்ணனை செய்தாலும் உர்சுலா ஆண்ட்ரஸ், ஹாலே பெர்ரியின் அழகை எல்லாம் காகிதத்தில் கொண்டு வர முடியுமா என்ன? எனக்குப் பொதுவாக வில்லன்களோடு பாண்ட் விளையாடும் விளையாட்டுகள் – மூன்ரேக்கரின் பிரிட்ஜ் ஆட்டம், கோல்ட்ஃபிங்கருடன் கோல்ஃப் போன்றவைதான் வில்லன்களுடன் போராடுவதை விட சுவாரசியமாக இருக்கும்.

Ursula_Andress_in_Dr._Noஅந்தக் காலத் தமிழ்த் திரைப்படங்களில் வீடுகளில் அழகான சிவப்புக் கம்பளங்கள், இரண்டு பக்கமும் வளைந்து போகும் மாடிப்படிகள், பல வித சாப்பாட்டு வகைகள் நிறைந்த சாப்பாட்டு மேஜை என்று பலவும் காட்டப்படும். பார்ப்பவர்களுக்கு ஒரு vicarious மகிழ்ச்சி. ஜேம்ஸ் பாண்டின் ஒரு காலக் கவர்ச்சிக்கும் இது மாதிரி vicarious மகிழ்ச்சி ஒரு முக்கிய காரணம். Martini, shaken but not stirred, சாப்பாடு, கார், மது வகைகள், கூப்பிடக் கூட வேண்டாம் பார்த்த உடன் படுக்கத் தயாராக இருக்கும் அழகிய பெண்கள் மாதிரி ஒரு சுகபோக வாழ்க்கை – பல வித வில்லன்களை முறியடிக்கும் (எம்ஜிஆர் டைப்) சாகசங்கள் இதெல்லாம் பற்றிப் படிப்பது, அந்தக் கால சென்சார்கள் எவ்வளவு அனுமதிப்பார்களோ அவ்வளவு தூரம் அவிழ்க்கும் நாயகிகள் வரும் திரைப்ப்டங்களைப் பார்ப்பது எல்லாம் அறுபது, எழுபதுகளின் பதின்ம வயதினருக்கு செம த்ரில்லாக இருந்திருக்கலாம். அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கென்னடி ஜேம்ஸ் பாண்ட கதைகளைத் தான் விரும்பிப் படிப்பேன் என்று சொன்னதும் இவை பிரபலமானதுக்கு ஒரு காரணம். ஆனால் எண்பதுகளில் இதை விட நல்ல சாகசக் கதைகள் பலவற்றை அதே நேரத்தில் படித்ததாலோ என்னவோ பாண்ட் கதைகள் என்னை எப்போதும் பெரிதாகக் கவர்ந்ததில்லை. இன்று இத்தனை pretentiousness இல்லாத மாடஸ்டி ப்ளெய்ஸ் காமிக்ஸ் இதை விடப் பிடிக்கின்றன. இருந்தாலும் சாகசக் கதை உலகத்தில் ஒரு footnote அளவுக்காவது ஜேம்ஸ் பாண்டுக்கு இடம் உண்டுதான்.

Casino Royale (1953) முதல் புத்தகம். நல்ல பாண்ட் புத்தகம் கிடையாது. பிரமாத திரில்கள் எதுவும் கிடையாது. ஆனால் வெளியானபோது அது சுஜாதாவின் நைலான் கயிறு போல ஒரு தாக்கத்தை உருவாக்கி இருக்கும் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய amoral ஒற்றன் (புத்தகத்தின் இறுதியில் பாண்டுக்கு மனசாட்சி உறுத்தினாலும்), காமிக் புத்தகங்களை விட நம்பகத்தன்மை நிறைந்த வில்லன், சம்பவங்கள், நாயகி இதெல்லாம் ஒரு மாற்றமாக இருந்திருக்க வேண்டும்.

ian_flemingஇதைத் தவிர 13 பாண்ட் புத்தகங்களை இயன் ஃபிளெமிங் எழுதி இருக்கிறார். இப்போதே புத்தகங்கள் போரடிக்கத் தொடங்கிவிட்டன. திரைப்படங்கள் வருவதால் மட்டும்தான் இந்தப் புத்தகங்கள் நினைவு கூரப்படும். Moonraker (1955), From Russia With Love (1957), Dr. No (1958), Goldfinger (1959), Thunderball (1961) போன்றவற்றைப் படிக்கலாம். படிக்கக் கூடிய ஒரு காட்சியாவது இருக்கும். மூன்ரேக்கரில் வில்லன் ஹ்யூகோ ட்ராக்ஸோடு பாண்ட் பிரிட்ஜ் விளையாடும் காட்சி. ஃப்ரம் ரஷியா வித் லவ் புத்தகத்தில் ரயில் பயணம். டாக்டர் நோவில் உயிர் பிழைக்க பல அபாயங்கள் நிறைந்த ஒரு obstacle course வழியாக பாண்ட் போக வேண்டி இருக்கும் காட்சி. கோல்ட்ஃபிங்கரில் கோல்ஃப் விளையாட்டு. தண்டர்பாலில் சானடோரியத்தில் லிப்பேயுடன் நடக்கும் தகராறு.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் டாக்டர் நோவைத்தான் பரிந்துரைப்பேன். அது Moonraker, From Russia With Love, Goldfinger, Thunderball ஆகியவற்றோடு ஒப்பிட்டால் first among equals.

பிற நாவல்களில் Live and Let Die (1954), You Only Live Twice (1964) மற்றும் Man with the Golden Gun (1965) திரைப்படம் எடுக்கவே எழுதப்பட்ட நாவல் போன்று இருக்கும். visual ஆகவே சிந்தித்திருக்கிறார். பஸ்ஸில் படிக்கலாம்.

Diamonds Are Forever (1956), For Your Eyes Only (1960), The Spy Who Loved Me (1962), On Her Majesty’s Secret Service (1963), Octopussy and the Living Daylights (1966) ஆகியவறைத் தவிர்த்துவிடலாம்.

ஃப்ளெமிங் இறந்த பிறகும் ஜேம்ஸ் பாண்ட் என்பது நன்றாகத் தெரிந்த ஒரு ட்ரேட்மார்க் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். புத்தகங்களுக்கான ஜேம்ஸ் பாண்ட் ட்ரேட்மார்க் (திரைப்படங்களுக்கான ட்ரேட்மார்க் பல ஜேம்ஸ் பாண்ட் படங்களைத் தயாரித்த ப்ரோக்கோலி குடும்பத்திடம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.) இயன் ஃப்ளெமிங் பப்ளிகேஷன்ஸ் என்று நிறுவனத்துக்கு சொந்தமானது. அந்த நிறுவனமே பிற எழுத்தாளர்களை ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் எழுத அழைத்திருக்கிறது. இலக்கிய எழுத்தாளர் கிங்ஸ்லி அமிஸ் (கர்னல் சன் (1968) என்ற ஒரு புத்தகம்), மற்றும் ஜான் கார்டினர் (16 புத்தகங்கள்), ரேமண்ட் பென்சன் (9 புத்தகங்கள்), செபாஸ்டியன் ஃபாக்ஸ் (1), ஜெஃப்ரி டீவர் (1) ஆகியோர் அப்படிப்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். நான் கார்டினர் எழுதிய ஒரு புத்தகத்தைப் (On Special Services, 1982) படித்திருக்கிறேன். இந்தத் தொடர்ச்சியை விட ஒரிஜினல்கள் எவ்வளவோ பரவாயில்லை.

இவற்றைத் தவிர சார்லி ஹிக்சன் பதின்ம வயது பாண்டை நாயகனாக வைத்து சில புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.

james_bondஜேம்ஸ் பாண்டை ஒரு icon ஆக மாற்றியதில் ஷான் கானரிக்கு பெரிய பங்குண்டு. ஆகச் சிறந்த ஜேம்ஸ் பாண்டாக அவரைத்தான் சொல்வேன். இன்றைய பாண்ட் டேனியல் க்ரெய்க். ஷான் கானரிக்குப் அடுத்தபடி அவரைச் சொல்லலாம். ரோஜர் மூர் நடித்தவை எல்லாம் பொம்மைப் படம் மாதிரி இருக்கும். அவர் நடித்த படங்களில் சிறந்தது காசினோ ராயேல். jaishankarதென்னகத்து ஜேம்ஸ் பாண்ட், மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு (இரு வல்லவர்கள், வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன்…) நான் எட்டு வயதில் பெரிய ரசிகன். நானும் சிவகுருவும் பதினெட்டு பத்தொன்பது வயதில் அந்தக் காலத்தில எங்க தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் மோட்டார்சைக்கிள்ள வருவார் பாரு என்று nostalgia வசப்பட்டிருக்கிறோம்!

தொகுக்கப்ப்ட்ட பக்கம்: சாகசக் கதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
Moonraker
Young James Bond Series

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.