Skip to content

கடிகாரம் டிக்டிக்கிக் கொண்டிருக்கிறது

by மேல் மார்ச் 22, 2014

என் உயிரின் கடிகாரம் டிக்டிக்கிக் கொண்டிருக்கிறது
ஏறிக்கொண்டே போகிறது வயது
சீப்பைப் பயன்படுத்தி சில வருஷமாயிற்று
சின்ன எழுத்துகளைப் படிக்க முடிவதில்லை
கனவில் கூட தொப்பை இல்லாமல் நான் வருவதில்லை
கண்ட கனவுகளில் நிறைவேறியவை கொஞ்சமே

செய்தவை பெரிதாகத் தெரியவில்லை
செய்ய வேண்டியவை ஏராளம்
செய்ய விரும்புபவை இன்னும் ஏராளம்
செய்வது என்ன என்று தெரிவதில்லை
செய்தது என்ன என்றும் தெரியவில்லை
தினம் தினமும் அதே அதே
தில்லியோ வெகு தூரத்தில்
காலை நாலு மணிக்கு சப்பாத்திக் கள்ளியை சுற்றிச் சுற்றி வரும் வாழ்க்கை
கடிகாரம் டிக்டிக்குவது மட்டும் நிற்பதே இல்லை

ஆனாலும் தோழர்களே
குறை ஒன்றும் இல்லை
கனவு மெய்ப்படாவிட்டால் கவலை ஏதும் இல்லை
இலக்கல்ல நடப்பதே என் ஜீவனின் வெற்றி
தில்லி அல்ல செல்லும் சாலையே என் இலக்கு

இன்னும் கனவு காண்பேன்
இன்னும் செய்வேன்
முடிந்தது அத்தனையும் செய்வேன்
முடியாததும் சில செய்வேன்
கடிகாரம் டிக்டிக்கிக் கொள்ளட்டும்
கடிகாரம் என் எதிரி அல்ல


கவிதை என்றாலே ஓடிவிடும் நான், நானே நான், எழுதிய முதல் கவிதை. மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்து அதை வாங்கி வரவில்லை. 🙂

அது என்ன ஆச்சுன்னா, மீரா எழுதிய கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் கவிதைத் தொகுப்பை பல்லைக் கடித்துக் கொண்டு படித்து முடித்தேன். உதாரணத்துக்கு ஒரு “கவிதை”

நியூட்டன்
புவியீர்ப்பு சக்தியைக்
கண்டுபிடித்தான்.

நான்
என் உயிர் ஈர்ப்பு சக்தியைக்
கண்டுபிடித்தேன்.

என் கண்டுபிடிப்பே,
நீ வாழ்க!

இதெல்லாமே கவிதை, இதையெல்லாமும் நாலு பேர் ரசிக்கிறார்கள் என்றால் எனக்கு சொல்ல விஷயமாவது இருக்கிறது, நான் ஏன் கவிதை எழுதக் கூடாது என்று தோன்றியது, அவ்வளவுதான்!


தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள், எழுத்துக்கள்

Advertisements

From → Poetry, Writings

2 பின்னூட்டங்கள்
  1. நேரம் ஓடுதே காலம் ஓடுதே என்று பரிதவித்துக்கொண்டே இருந்த வேளையில் இந்த கவிதை.. Looks amazing 🙂

    Like

    • ப்ரசன்னா, என் கவிதை இன்னொருவருக்கும் பொருத்தமாக இருப்பது சந்தோஷம்!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: