Skip to content

சிலிகான் ஷெல்ஃப் தேக்கம்?

by மேல் ஏப்ரல் 7, 2014

தேக்கநிலை அடைந்து விட்ட மாதிரிதான் இருக்கிறது இல்லையா?

இந்தத் தளத்தை என் படிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆறேழு மாதங்களாக நேரம் மிகக் குறைவாக இருக்கிறது. படிப்பது குறைந்துபோய்விட்டது; பழகிவிட்டது என்பதால்தான் படிக்கிறேன் என்று சமயங்களில் தோன்றுகிறது. எனக்கு சாப்பிடும்போது, கழிப்பறையில், காத்திருக்கும்போதெல்லாம் கையில் ஒரு புத்தகம் இருக்க வேண்டும். ஆனால் அந்த நேரங்களைத் தவிர பிற நேரங்களில் படித்து சில மாதங்களாகிவிட்டது. அதுவும் விட்டுவிட்டுப் படிப்பதால் பொழுதுபோக்குப் புத்தகங்கள், அபுனைவுகள், அதிக உழைப்பை எதிர்பார்க்காத புத்தகங்கள்தான் சரிப்படுகின்றன. நண்பர் கிரிஸ் ஆந்தனி கடற்புற மீனவர்கள் மொழியில் ஒரு புதினத்தின் வரைவை அனுப்பி இருந்தார். மொழியை நான் மனதில் மொழிபெயர்த்துக் கொண்டே படிக்க வேண்டி இருப்பதால் கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் நூறு பக்கம்தான் படித்திருக்கிறேன்.

அதுவும் எழுத வேண்டும் என்ற முனைப்பு மிக அதிகமாக இருக்கிறது. மனதில் ஒரு ஏழெட்டு மகாபாரதச் சிறுகதைகள், நாலைந்து மற்ற சிறுகதைகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. நேரம் கிடைக்கும்போது பதிவுகளுக்கு பதில் அவற்றை எழுதலாமே என்றுதான் தோன்றுகிறது. சகுனியை முக்கிய பாத்திரமாக வைத்து கொஞ்சம் நீளமான ஒரு சிறுகதையை இது வரை மனதில் மூன்று முறை முழுமையாக எழுதி நிராகரித்துவிட்டேன். கணினியில் ஒரு பக்கம்தான் எழுதி இருக்கிறேன். 🙂

என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கே சரியாகத் தெரியவில்லை. காலம் பூராவும் புத்தகங்களைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம்தான். ஆசையும் உண்டுதான். ஆனால் நேரம்தான் பிரச்சினையாக இருக்கிறது.

ஜடாயுவும் தமிழ் ஹிந்து தளமும் நிராகரித்துவிட்ட ஒரு சிறுகதையை அடுத்த வாரம் பதிக்கப் போகிறேன். அந்தக் கதையை ஜெயமோகனும் சரியாக வரவில்லை என்றுதான் சொல்லி இருக்கிறார். 🙂

இன்னும் இரண்டு மூன்று மாதத்துக்காவது அருணாவும் பாலாஜியும் விசுவும் முகினும் ராஜனும் சுந்தரேஷும் பக்சும் காவேரியும் பத்மநாபனும் கொஞ்சம் கை கொடுத்தால்தான் பதிவுகள்…

பின்குறிப்பு: கடுப்படிக்கும் ஒரு விஷயம். இந்த ஜெயமோகன் என்ன மனிதன்தானா இல்லை பிசாசா? தினம் தினமும் இரண்டு மூன்று பதிவு போட்டு – அதிலும் ஒன்று செறிவான மகாபாரதப் புனைவு… எப்படிய்யா?

Advertisements

From → Uncategorized

5 பின்னூட்டங்கள்
  1. kesavamani permalink

    எனக்கும் ஒரு தேக்கநிலை ஏற்பட்டுவிட்டதாக அறிகிறேன். ஒவ்வொரு முறையும் இப்படி நடப்பதும் நாம் சோர்ந்து போவதும் வழக்கமான ஒன்றுதானே. எதற்கும் ஒரு இடைவெளி அவசியம் தேவைப்படுகிறது.

    ஆனால் ஜெயமோகன் கதை வேறு. எழுதஎழுதத்தான் அவர் உத்வேகம் கொள்கிறார். நாமோ எழுதஎழுத சோர்ந்துபோகிறோம்.

    அதனால்தான் அவர் எழுத்தாளர். நாம் வாசகர்.

    Like

  2. பாலகிருஷ்ண்ன் permalink

    ஸ்வாமின் கொஞ்சம் கவிதை தொகுப்பு “ஏதாவது” படிக்க முயலுங்கள்! எங்களுக்கு ”கவிதை”யாவது போணியாகும் 🙂

    Like

  3. பாலகிருஷ்ணனின் சதி வலையில் விழுந்து விடாதீர்கள். ஆசை காட்டுகின்றார். :).

    ஜெயமோகனின் வீட்டில் ஒரு யட்சி இருக்கின்றதாம், அவர் மனதில் நினைப்பதை எல்லாம் உடனே அது டைப்பி விடுகின்றது. அதனால் அவர் பாட்டுக்கு நினைத்து கொண்டே போகின்றார், அது எழுதிக் கொண்டே போகின்றது, நாமும் படித்துக் கொண்டே இருக்கின்றோம். அவரது பேய்க்கதைகளை படித்துவிட்டு இம்ப்ரெஸ்ஸாகி அங்கு வந்துவிட்டதாக கேள்வி. 🙂

    Like

    • பாலகிருஷ்ணன் permalink

      என்ன ஓய்! எங்க RV’க்கு, டிக் டிக்’கினா உமக்கு பக், பக்’குதா?

      Like

      • // RV’க்கு, டிக் டிக்’கினா உமக்கு பக், பக்’குதா? // பாலகிருஷ்ணன், என் கவிதைக்கும் ஒரு ரசிகரா? எனக்கு பக்பக்குங்குது!

        Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: