25 கூல் புத்தகங்கள்

இப்படி ஒரு பட்டியல் போடுவதே ஒரு கூல் விஷயமாக இருக்கிறதே! பட்டியலில் பல இன்றைய எழுத்தாளர்கள் இருப்பது இன்னும் ஒரு கூல் விஷயம்! இவற்றில் நான் ஐந்தாறு புத்தகம்தான் படித்திருக்கிறேன், அவற்றில் வால்டன் நிச்சயமாக ஒரு கூல் புத்தகம்தான். கர்ட் வானகட், கார்மாக் மக்கார்த்தி போன்றவர்கள் எழுத்தை எல்லாம் நான் கொஞ்சமாகத்தான் படித்திருக்கிறேன், எதுவும் என்னை இது வரை கவரவில்லை. அதுவும் வானகட் ரொம்ப pretentious ஆகத் தெரிகிறது.

வசதிக்காக பட்டியலை கீழே கொடுத்திருக்கிறேன்.

 1. Sun Also Rises – Ernest Hemingway
 2. Art of War – Sun Tzu
 3. Fear and Loathing in Las Vegas – Hunter S. Thompson
 4. Slaughterhouse-Five – Kurt Vonnegut
 5. Trainspotting – Irvine Welsh
 6. Walden – Henry David Thoreau
 7. Blood Meridian – Cormac McCarthy
 8. Gravity’s Rainbow – Thomas Pynchon
 9. Rabbit, Run – John Updike
 10. Fight Club – Chuck Palahniuk
 11. All Quiet on the Western Front – Erich Maria Remarque
 12. Amazing Adventures of Kavalier and Clay – Michael Chabon
 13. Catcher in the Rye – J.D. Salinger
 14. Professional – W.C. Heinz
 15. All the King’s Men – Robert Penn Warren
 16. Malcolm Lowry – Under the Volcano
 17. Last Exit to Brooklyn – Hubert Selby
 18. American Psycho – Bret Easton Ellis
 19. Bright Lights, Big City – Jay McInerney
 20. Tropic of Cancer – Henry Miller
 21. Adventures of Huckleberry Finn – Mark Twain
 22. Into Thin Air – Jon Krakauer
 23. Prince – Niccolo Machiavelli
 24. Outsiders – S.E. Hinton
 25. Tree of Codes – Jonathan Safran Foer

தமிழிலும் இப்படி ஒரு பட்டியல் போடலாமா? முதலில் என் கண்ணில் கூல் புத்தகம் என்றால் என்ன என்று சொல்லிவிடுகிறேன். ஓரளவு புத்திசாலி இளைஞர்களை, படிப்பதில்-இலக்கியத்தில் ஆர்வம் உள்ள இளைஞர்களைக் கவரக் கூடியதாக இருக்க வேண்டும். புத்தகத்தில் கொஞ்சம் புத்திசாலித்தனம் தெரிய வேண்டும். அந்த இளைஞன்/இளைஞிக்கு இதைப் படித்து எனக்கு அப்பீலும் ஆகிவிட்டது என்று கொஞ்சம் பெருமிதம் ஏற்பட வேண்டும். இதைப் படிச்சிட்டியா என்று அவன்/அவள் நண்பர் கூட்டத்தில் ஒரு சிலராவது வியக்க வேண்டும். அவர்களது இளமைப் பருவம் முடிந்த பின்னும் அவர்கள் அந்தப் புத்தகங்களை புன்னகையோடு, அபிமானத்தோடு (fondly) நினைவு கூர வேண்டும். இதெல்லாம் இருந்தால் அதை கூல் புத்தகம் என்று சொல்வேன்.

In no particular order:

 1. விஷ்ணுபுரம்
 2. பின் தொடரும் நிழலின் குரல்
 3. ஏழாம் உலகம்
 4. ஜேஜே சில குறிப்புகள்
 5. கரைந்த நிழல்கள்
 6. என் பெயர் ராமசேஷன்
 7. நாளை மற்றொரு நாளே
 8. கடவு
 9. வாசவேஸ்வரம்
 10. பாற்கடல்
 11. பசித்த மானுடம்
 12. புலிநகக் கொன்றை
 13. அம்மா வந்தாள்
 14. சாயாவனம்
 15. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
 16. கிருஷ்ணன் நம்பி சிறுகதைகள்
 17. நிர்வாண நகரம்
 18. ஸ்ரீரங்கத்துக் கதைகள்
 19. ஒளிவிலகல்
 20. குயில் பாட்டு
 21. ஒற்றன்
 22. வெக்கை
 23. ஜீரோ டிகிரி
 24. இடைவெளி
 25. வாடிவாசல்
 26. தரையில் இறங்கும் விமானங்கள்

என் கூல் பட்டியலில் நாஞ்சில், கி.ரா., எம்.வி.வி., க.நா.சு., பெருமாள் முருகன், இ.பா.வுக்கு இடமில்லை. ஆனால் இ.பா.வின் டெல்லி நாவல்கள் நிறைய பேரின் கூல் பட்டியலில் இடம் பெறும் என்று நினைக்கிறேன். வா.மு. கோமுவை இன்னும் படித்தால் அவரது நாவல் எதையாவது சேர்க்க வாய்ப்புண்டு. மோகமுள்ளைப் பற்றி கொஞ்சம் யோசித்து ஒதுக்கிவிட்டேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

4 thoughts on “25 கூல் புத்தகங்கள்

 1. நீங்கள் சொன்ன விதிமுறைகள் சுஜாதா புத்தகங்கள் அனைத்துக்கும் பொருந்துமே. என்னுடைய மலர்ச்சோலை மங்கை வயதானவர்களை மட்டுமல்ல இளைஞர்களையும் கூட கவர்ந்திருக்கிறதே. டாக்டர் எல். கைலாசம், முத்துச்சிப்பி, விலாசினி ஆக்கியோன்.

  Like

 2. டாக்டர் கைலாசம், நான் தங்கள் புத்தகங்களைப் படித்ததில்லை அதனால் அவற்றைப் பற்றி தெரியாது. என்னுடைய நோக்கில் சுஜாதாவின் எல்லாப் புத்தகங்களுக்கும் இது பொருந்தாது. அவர் புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில் எக்கச்சக்கமாக சொதப்பியும் இருக்கிறார். அப்போதிருந்த் craze-இல் அதெல்லாம் தெரியவில்லை, இன்று படித்தால் நன்றாகவே தெரிகிறது.

  Like

 3. ஜீரோ டிகிரி – ஏதாவது புரிந்தது தெரிந்தது? அந்த ரகசியத்தை கூரை மேலேறி கூவினால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.

  பொன்னியின் செல்வன் இல்லையே 😦 எனது லிஸ்டில் அதுதான் முதலில் வரும். நினைவு தெரிந்து படித்த ஒரு பெரிய புத்தகம்.

  Like

 4. ரெங்கசுப்ரமணி, பொ. செல்வனை நான் கூல் புத்தகம் என்று சொல்ல மாட்டேன். அதில் புத்திசாலித்தனம் தெரிவது ஆ. கரிகாலனை யார் கொன்றது என்ற மர்மத்தை விடுவிக்காததில் மட்டுமே.

  உங்கள் கமெண்டைப் பார்த்ததும் ஜீரோ டிக்ரீ புத்தகத்தைத் தேடி எடுத்து வைத்திருக்கிறேன். எப்போது எழுதுவேனோ தெரியாது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.