Skip to content

ஹிந்து வேதங்களில் இஸ்லாம்

by மேல் மே 5, 2014

ஐரோப்பாவின் இருண்ட காலம் (Dark Ages) என்று அறியப்படும் காலத்தில் அன்றைய அறிஞர்கள் மண்டையைக் குழப்பிக் கொண்டு யோசித்த ஒரு கேள்வி உண்டாம் – ஒரு குண்டூசியின் தலைப் பகுதியில் எத்தனை தேவதைகளால் நிற்க முடியும்? அறிஞர் – சீச்சீ பேரறிஞர் – அதுவும் பத்தவில்லை மஹா மஹா மஹா பேரறிஞர் – அபு ஆசியா எழுதி இருக்கும் “ஹிந்து வேதங்களில் இஸ்லாம்” என்ற சின்னப் புத்தகத்தைப் படித்து சிரித்துக் கொண்டிருந்தபோது அந்த கேள்விதான் அடிக்கடி நினைவு வந்தது. புத்தகமே பிரமாதம் என்றாலும் முன்னுரையை எழுதி இருக்கும் கமாலுதீன் மதனி அபு ஆசியாவையே மிஞ்சிவிட்டார். அபு ஆசியாவின் நிரூபணங்களை எல்லா ஹிந்து சகோதரர்களிடமும் சேர்க்க வேண்டும், அப்படி சேர்த்துவிட்டால் போதும், எல்லா ஹிந்துக்களும் உடனே இஸ்லாமுக்கு மாறிவிடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் ஜனகராஜ்-ஆர்.எஸ். சிவாஜி மாதிரி “சார், நீங்க எங்கியோ போய்ட்டீங்க! நோ சில்லி ஃபீலிங்ஸ்!” என்று பேசிக் கொள்வார்களோ என்னமோ!

அடடடடா! என்ன ஆராய்ச்சி! பகவத் கீதையில் “நான் பல பேர்களால் அறியப்படுகிறேன்” என்று கிருஷ்ணன் தெரியாத்தனமாக சொல்லிவிட்டதால், கிருஷ்ணனே ஒரு இறைத் தூதர், வேதங்களை எழுதியவர்கள் எல்லாம் இறைத் தூதர்கள், முகமது நபியே நான்தான் கடைசி இறைத் தூதன் என்று சொல்லி இருக்கிறார், அதனால் அவர்தான் கல்கி அவதாரம் (இந்த கல்கி பாபா என்று ஒருவர் சுற்றிக் கொண்டிருந்தாரே, அவருக்கு இதெல்லாம் தெரியுமோ என்னவோ), கல்கி பகவான் குதிரையில் வருவார், முகமது நபி புராக் என்ற குதிரையில் ஏறி ஜெருசலேம் போனார், அந்த ஒரு ஆதாரமே போதுமே என்ற ரேஞ்சில் நிறைய எழுதி இருக்கிறார். புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். ஏதோ மற்ற மதத்து நூல்களைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார், அதற்காகப் பாராட்ட வேண்டியதுதான். (ஆனால் பிரம்மாவுக்கு மூன்று தலை என்று எழுதிவிட்டார். அருணாசலேஸ்வரர் ஒரு தலையை கொய்தால் இவரும் ஒரு தலையைக் கொய்கிறார்!)

எனக்கு ஹிந்து தொன்மங்கள் பற்றி நிறையத் தெரியும் என்று கொஞ்சம் கர்வம் இருந்தது. நூஹ் நபி நூஹ் நபி என்கிறார், யாரைச் சொல்கிறார் என்றே தெரியவில்லை. ஒரு வேளை விஷ்(நூஹ்)வைச் சொல்கிறாரா? இப்படி என் இறுமாப்பை அழித்துவிட்டாரே!

சுட்டி கொடுத்த ஜெயமோகன், சிவேந்திரன் இருவருக்கும் நன்றி!

Advertisements
4 பின்னூட்டங்கள்
 1. இதையெல்லாம் யாரவது உல்டா செய்து, அனைத்து மதங்களுமே இந்து மதத்திலிருந்தே தோன்றியது. நடுவில் ஏகப்பட்ட திரிபுகள். அனைவரும் இங்கு வருக என்று ஒரு பத்து புத்தகம் எழுதுவதே சரியான வழி.

  அல்லா உபநிஷத்தாம். மோடி, சோனியா பெயரில் ஏதாவது உபநிஷத் கிடைத்து தொலைக்க போகின்றது.

  நரகத்தை நோக்கி அணிஅணியாக செல்கின்றார்களாம். கஷ்டகாலம்.

  கிறிஸ்தவர்கள்தான் இது போன்ற கோமாளித்தனமான விஷமத்தை செய்து வந்தனர். இப்போது இவர்களுமா?

  இந்த ஆசிரியரின் நான்காவது வெளியீடு. முதல் மூன்று என்வாக இருக்கும். ராமாயணத்திலும் , மகாபாரதத்திலும் ஏதாவது தேடியிருப்பாரோ

  Like

 2. இப்படி எல்லாம் இடையில் புகுந்து தேவைப்பட்ட வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டால் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நிறுவலாம்!:))))

  Like

 3. ரெங்ககசுப்ரமணி, நான் எழுதியதற்குப் பிறகும் உங்களை யார் இதைப் படிக்கச் சொன்னது? 🙂
  ஸ்ரீராம், இதெல்லாம் காமெடியாக விட்டுவிடுவது நம்மை பைத்தியம் பிடிக்க வைக்காமல் இருக்கும்…

  Like

 4. என்ன செய்வது, காலை எழுந்தவுடன் பல் தேய்த்து குளித்து, மடியாக மகாபாரதம் படித்து முடித்த பின் இது போன்ற சிலவும் கண்ணில் பட்டுவிடுகின்றது. அதனால் நேரடியாக மெயிலுக்கு வரும் படி செய்துவிட்டேன். இருந்தும் கை தானாக அதை தட்டி விடுகின்றது. இன்று கூட தோழர் சங்கரரை பற்றி எழுதியிருந்ததை படித்து குழம்புற்றேன்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: