Skip to content

எல்லா உரிமையும் உங்களுக்கே

by மேல் மே 15, 2014

எதற்கும் வெளிப்படையாக சொல்லியே விடுகிறேன்.

இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன். இதன் மூலம் இந்த வலைப்பதிவின் உள்ளடக்கத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். திருத்தி மேம்படுத்தலாம். விற்கலாம். முழுக் கட்டுரையாக இன்னொரு தளத்தில் இடலாம். அச்சிட்டோ, ஒலிப்பதிவாகவோ, EPUB, PDF, MOBI போன்ற வடிவங்களிலோ பகிரலாம். இவற்றைச் செய்ய என்னுடைய முன் ஒப்புதல் தேவையில்லை.

ஆனால், அவ்வாறு பயன்படுத்தும்போது, நீங்கள் வெளியிடும் உள்ளடக்கமும் மேற்கண்ட அனைத்து உரிமங்களையும் அதனைப் பயன்படுத்துபவருக்குத் தர வேண்டும். உள்ளடக்கத்தின் மூலமாக இந்த இணையத்தளத்தின் முகவரியையும் கட்டுரையையும் குறிப்பிட வேண்டும். இணையத்தை அணுக வல்ல ஊடகமாக இருப்பின், சொடுக்க வல்ல இணைப்பு ஒன்றைத் தருவதும் வரவேற்கப்படுகிறது.

இதெல்லாம் யாரோ ஒருவர் போட்டதை கட்-பேஸ்ட் செய்தது. என் பதிவுகளுக்கு இதை விட அதிக உரிமைகளைத் தர விரும்புகிறேன். ஆனால் அதற்கு என்ன உரிமத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் தெரியவில்லை. நீங்கள் இந்தத் தளத்தின் பதிவுகளைப் பகிர்வதும் பயன்படுத்துவதும் அடுத்தவர் பகிர்வதையும் பயன்படுத்துவதையும் எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது என்பதைத் தவிர வேறு எந்த நிபந்தனையும் இல்லை. மூலச்சுட்டிக்கு இணைப்பு கொடுப்பது கூட வேண்டுகோள்தான். அப்படி செய்தால் எனக்கு கொஞ்சம் திருப்தியாக இருக்கும்.

ஆனால் இவை அனைத்தும் நான் எழுதும் பதிவுகளுக்கு மட்டும்தான். அடுத்தவர் எழுதும் பதிவுகளில் யார் ஆசிரியர் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது, எதிர்காலத்திலும் குறிப்பிடப்படும். அவர்களே வெளிப்படையாக அனுமதித்தால் ஒழிய அந்தப் பதிவுகளைப் பயன்படுத்த அவர்களின் அனுமதியைப் பெற வேண்டும்.

Advertisements

From → Misc

4 பின்னூட்டங்கள்
  1. எதற்கு இப்படி ஒரு அறிவிப்பு?

    Like

  2. அருமையான முடிவு ஐயா.

    நன்றி

    உங்கள் பதிவுகளைக் கொண்டு விரைவில் ஒரு மின்னூலை FreeTamilEbooks தளத்தில்
    வெளியிடலாம்.

    Like

  3. சார், நீங்கள் இது எல்லாம் சொல்லவே வேண்டியதில்லை. வழி பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பவர்கள் ஏராளம்.

    Like

  4. ஸ்ரீராம்/ரெங்கசுப்ரமணி, வழிப்பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்தால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்லிவிடுவது நல்லது என்று நினைத்தேன், அவ்வளவுதான்.
    ஸ்ரீனிவாசன், நல்ல ஐடியாதான், பார்ப்போம்…

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: