Skip to content

சஞ்சயா பாரு எழுதிய Accidental Prime Minister

by மேல் மே 26, 2014

accidental_prime_ministerமுன்னாள் பிரதமர் மன்மோஹன் சிங் அறிவாளி, நல்ல நிர்வாகி, தனிப்பட்ட முறையில் மிக நேர்மையானவர் என்பதை அவரது எதிரிகள் கூட ஒத்துக் கொள்வார்கள். பல திறமைகள் இருந்தும் அவர் 2009-2014 காலகட்டத்தில் – 2G ஊழல், நிலக்கரி ஊழல் என்று பல – கேவலப்பட்டார், நாடே அவரை கரித்துக் கொட்டியது என்பது நம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். அவரது ஆளுமையை 2004-2008 காலகட்டத்தில் அவரது ஊடக ஆலோசகராக பணியாற்றிய சஞ்சயா பாரு அவரது கண்ணோட்டத்தில் விவரிக்கிறார்.

sanjaya_baruபாரு வசதியான மேல்தட்டுக் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா ஆந்திர மாநில அரசில் உயர் அதிகாரி, பல பெரும் தலைகளோடு கனெக்‌ஷன் உண்டு. எகனாமிக் டைம்ஸ் ஆசிரியராக பணி புரிந்தவரை சிங் 2004-இல் தன் ஊடக ஆலோசகராக பணி புரியுமாறு அழைத்திருக்கிறார்.

2004-இல் சிங் அவரே சொல்லிக் கொண்ட மாதிரி ஒரு “Accidental Prime Minister”. சோனியாவால் பிரதமராக பதவி ஏற்க முடியவில்லை, இரண்டாம் நிலை தலைவர்களில் இவர்தான் பிரனாப் முகர்ஜியை விட, அர்ஜுன் சிங்கை விட சரிப்படுவார் என்று இவரை பிரதமர் ஆக்கி இருக்கிறார். சிங்கும் இதை நன்றாக உணர்ந்திருக்கிறார், சோனியாவின் விருப்பப்படியே நடக்க முயற்சிக்கிறார். ஆனால் வெளியுறவுக் கொள்கைகளில் மட்டும் தன் முத்திரையைப் பதிக்க முயற்சிக்கிறார். அமெரிக்காவோடு அணு ஆயுத ஒப்பந்தம் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2009-இல் சிங் “நேக் ஆத்மி” என்று பலரும் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டிருக்கின்றனர்.

sonia_gandhiஆனால் சிங் தன் பிரதமர் பணியை மிகவும் குறுகியதாகவே வரையறுத்துக் கொண்டிருக்கிறார். 2009-இல் அவர் லோக்சபாவுக்குப் போட்டியிட வேண்டும் என்று பாரு, அவரது மனைவி உட்பட பலரும் வற்புறுத்தி இருக்கிறார்கள். சிங் அதற்காக முயற்சித்த மாதிரியே தெரியவில்லை. அப்படி அவர் போட்டி இட்டிருந்தால் அது அவரது legitimacy-ஐ வலுப்படுத்தி இருக்கும். மந்திரிகள் ஊழல் செய்தாலும் அவர்களை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் தனக்கில்லை; அது சோனியாவின், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பொறுப்பு என்று நினைத்திருக்கிறார். பாருவுக்கே இரண்டாம் முறை பிரதமர் ஆனபோது முதலில் மீண்டும் வேலைக்கு வா என்று அழைத்திருக்கிறார், பிறகு சோனியா எதிர்ப்பினால் ஜகா வாங்கி இருக்கிறார். ஒரு பிரதமர் தன் உதவியாளராக யாரை நியமிக்கலாம் என்ற அதிகாரத்தைக் கூட செயல்படுத்தவில்லை என்றால் அவரால் என்ன முடிவு எடுக்க முடியும்? சோனியா “All power and no responsibility” என்ற நிலையிலும் சிங் “All responsibility and no power” என்ற நிலையிலும் ஐந்து வருஷத்தை ஓட்டி இருக்கிறார்கள். முதல் முறை வெளியுறவுக் கொள்கையிலாவது தன் முத்திரையைப் பதிக்க வேண்டும் என்று முயற்சித்தவர் இரண்டாம் முறை சும்மா உட்கார்ந்துவிட்டு வந்திருக்கிறார்.

manmohan_singhபாருவின் புத்தகம் இந்தத் தேர்தலில் சிங்கின் இமேஜை இன்னும் கொஞ்சம் கீழே தள்ளி இருக்கிறது. ஆனால் பாருவே சொன்ன மாதிரி பாரு மன்மோஹன் சிங் மீது நிறைய மதிப்பு வைத்திருக்கிறார். இத்தனை தவறுகள் இருந்தாலும் அவர் ஒரு நல்ல பிரதமரே, முதல் முறை நாட்டின் பொருளாதாரம் மற்றும் வெளியுறவுத் துறைகளில் சாதித்திருக்கிறார் என்பதை வலியுறுத்திச் சொல்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால் இதில் தெரியும் சிங் தனக்குக் கொடுக்கப்படும் கடமைகளை திறமையாக நிறைவேற்றக் கூடியவர். ஆனால் யாராவது கொடுக்க வேண்டும், அவராகவே அதை வரையறுத்துக் கொள்ள மாட்டார். தலைமைப் பண்பு என்பது அவரிடம் இல்லை. இது என் ஏரியா, நீ உள்ளே வராதே என்று சொல்லும் மனோதிடம் அவருக்கு இல்லை. அவர் ஒரு சிறந்த follower, ஆனால் நல்ல leader இல்லை. சோனியா அவரது ஆளுமையை சரியாகவே கணித்திருக்கிறார்.

புத்தகத்தின் பெரிய பிரச்சினை சுவாரசியக் குறைவு. சிங்கைப் பற்றி விவரிப்பது புத்தகத்தில் அறுபது சதவிகிதம்தான் இருக்கும். இருப்பதே 200 பக்கம், அதில் ஒரு நூறு பக்கமாவது பாருவின் இளமைப் பருவம், யாருக்கு எந்த ரூம் என்ற சண்டை, protocol பிரச்சினைகள் என்றெல்லாம் போகிறது.

நம் ஊரில் தலைவர்கள் பற்றி ஆவணப்படுத்தும் முயற்சிகள், நடுநிலையான ஆராய்ச்சிகள் மிகக் குறைவு. தலைவர்கள் பற்றி வந்தால் வாராது போல வந்த மாமணி இவர் என்று உணர்ச்சிவசப்படும் hagiographies-தான் வெளிவருகின்றன. இது குறைகள் உள்ள புத்தகம்தான், ஆனால் hagiography அல்ல. இது போன்ற புத்தகங்கள் தேவை. அமெரிக்காவில் அனேகமாக ஒவ்வொரு ஜனாதிபதியைப் பற்றியும் இப்படிப்பட்ட புத்தகங்கள் நிறைய வெளிவரும். சில புத்தகங்களில் சாய்வு நிலை தெரியும். உதாரணமாக ஆர்தர் ஷ்லெஸ்ஸிங்கர் ஜூனியருக்கு கென்னடி மீது பெரும் ஈர்ப்பு உண்டு, ஆனால் அவர் எழுதிய 1000 Days புத்தகம் கென்னடியின் புகழ் மாலை இல்லை. நம்மூரில் சர்வபள்ளி கோபால், ராமச்சந்திர குஹா, ராஜ்மோஹன் காந்தி தவிர வேறு யாரும் இப்படி எழுதுவதில்லை.

படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்க மாட்டேன். இது இந்திய அரசியலில், தலைமைப் பண்பு பற்றி புரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்காக மட்டுமே.


தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

Advertisements
பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: