ஏறக்குறைய கிசுகிசு போலத்தான் இருக்கிறது.
ஜே. கிருஷ்ணமூர்த்தி பதின்ம வயதுகளில் அன்னி பெசண்ட் மற்றும் லெட்பீட்டரால் “கண்டெடுக்கப்பட்டார்”, உலக குருவாக வளருவார் என்று தியாசஃபிகல் இயக்கம் நினைத்தது, ஆனால் சில ஆண்டுகளில் அவரது அப்பா அன்னி பெசண்டிடமிருந்து தன் பையனைத் திரும்பிப் பெற கோர்ட்டில் கேஸ் தொடுத்தார் என்பது வரலாறு. அன்னி பெசண்டை வாலறுந்த நரியாகவும், ஜே.கே.வை வால் அறுக்கப்பட்ட கழுதைக் குட்டியாகவும் உருவகித்து பத்து பனிரண்டு பக்கங்களுக்கு ஒரு கதை எழுதி இருக்கிறார். பாரதிக்கும் அன்னி பெசண்டுக்கும் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. எனக்கெல்லாம் பாடப் புத்தகங்கள் மூலம் தெரிய வந்த அன்னி பெசண்ட் மிதவாதி-தீவிரவாதிகளை ஒன்றிணைத்தார், ஹோம் ரூல் இயக்கம் என்று ஒன்றை முன்னின்று நடத்தினார், காங்கிரஸ் தலைவராக ஒரு வருஷம் இருந்தார், அடையாரில் தியாசஃபிகல் இயக்கத்தை நிறுவினார் என்பதுதான்.
அப்பவும் தமிழர்களுக்கு வம்பு என்றால் வெல்லம்தான் போலிருக்கிறது. பாரதியில் பாடல்களை வாங்கினார்களோ இல்லையோ இதை மட்டும் எல்லாரும் காசு கொடுத்து வாங்கிப் படித்திருக்கிறார்கள். பாரதி காலத்திலேயே இரண்டு பதிப்பு வந்திருக்கிறது!
கதை ஒரு பொருட்டில்லை, பின்புலம் மற்றும் பாரதி எழுதிய கிசுகிசு என்பது மட்டுமே இதை ஒரு historical curiosity ஆக்குகிறது. மின்னூலை இணைத்திருக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்
பரபரப்பான செய்திகளுக்கு என்றுமே முதலிடம்தான் போலும்! மின்னூலுக்கு நன்றி.
LikeLike