கர்நாடக இசையில் பாட்டு புரிவது தனி சுகம்தான். அப்படி கேட்கும் பாடல்களில் நன்றாகப் பரிச்சயமானவை ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் பாடல்கள்தான். அலைபாயுதே, குழலூதி மனமெல்லாம், தாயே யசோதா, ஆடாது அசங்காது வா கண்ணா மாதிரி பாட்டுகளை இன்று அனேகத் தமிழர்கள் கேட்டு அனுபவத்திருக்கிறோம். அதுவும் மகாராஜபுரம் சந்தானம் குரலில் கேட்பதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்.
கிருஷ்ணகானம் என்று பேர் இருந்தாலும் அங்கங்கே முருகன், பிள்ளையார் மீதும் பாடல் உண்டு. 105 பாடல்களில் சில சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை.
அவரது பாடல்களை ப்ராஜெக்ட் மதுரையில் தொகுத்திருக்கிறார்கள். வசதிக்காக இங்கே pdfசுட்டியை இணைத்திருக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: மின்னூல்கள்