குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய “தஞ்சைப் பெரிய கோவில்”

இன்றும் ஒரு மின்னூல். அழகிய விவரப்படங்களுக்காகவே படிக்கலாம். அடுத்த முறை தஞ்சாவூர் போகும்போது இவரை சந்திக்க வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: மின்னூல்கள்

வ.வே.சு. ஐயரின் கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகள்

va_ve_su_iyerஎனக்கு இன்னும் கம்ப ராமாயணத்தின் கற்பூர வாசனை தெரியவில்லை என்பதை பதிவு செய்துவிடுகிறேன். கம்பனைப் பற்றி பரவசப்படுபவர்கள் வர்ணனைகள், சந்தம், மொழியைக் கையாண்டிருக்கும் விதம் ஆகியவற்றைத்தான் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்கள். இலக்கியம் என்றால் அதில் மானுட தரிசனங்கள் வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. வர்ணனை கிர்ணனை எல்லாம் எனக்கு இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறது.

ஐயரும் கம்பனைக் கண்டு பரவசப்படும் ஜாதிதான். கம்பனில் ஊறித் திளைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இன்று அவரது மொழி கொஞ்சம் பழையதாகிவிட்டாலும் படிக்கும்படியாகத்தான் எழுதி இருக்கிறார். வால்மீகியை விட கம்பன் உசத்தி என்கிறார். எனக்கு அவர் கர்ண பரம்பரைக் கதைகளைப் பற்றி எழுதியது பிடித்திருக்கிறது. கம்பனின் காலம் முதல் பராந்தக சோழனின் காலம் என்கிறார். ஈ.வெ.ரா. ராமனையும் சீதையையும் இழித்துப் பேசியதை வலுவாக மறுக்கிறார். அதுவும் எம்.ஆர். ராதா நாடகங்களில் பேசுவதைக் கண்டு நல்ல கோபம்!

ஆர்வம் உள்ளவர்களுக்காக மின்னூலை இணைத்திருக்கிறேன். கம்ப ராமாயணப் பிரியர்களுக்கு ஒரு அபூர்வமான புத்தகம் கிடைக்கட்டும் என்றுதான் இந்தப் பதிவே. இல்லாவிட்டால் கவிதை ஆய்வைப் பற்றி எல்லாம் நான் ஏன் எழுதப் போகிறேன்?

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

ஈசாப் கதைகள்

இன்னும் கொஞ்ச நாளைக்கு எதுவும் பெரிதாக எழுதும் நிலையில் இல்லை. அனேகமாக மீள்பதிப்புகள், மின்னூல் இணைப்புகள் மட்டும்தான்.

சின்னக் குழந்தைகளுக்காக ஒரு மின்னூலுடன் இந்த phaseஐத் தொடங்குகிறேன். – ஈசாப் கதைகள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மின்னூல்கள்