வெகுவேகமாகப் படிக்க?

எத்தனை வேகமாகப் படிக்கிறோம் என்பது எதைப் படிக்கிறோம் என்பதைப் பொறுத்தது இல்லையா? சாண்டில்யன் கதைகள் என்றால் ஒரு மணிக்கு 100, 125 பக்கம் படிப்பேன் என்று நினைக்கிறேன். Digital Signal Processing பற்றிய புத்தகம் என்றால் ஒரு மணிக்கு 30, 40 பக்கம் படிப்பேனோ என்னவோ. அதனால் இதையெல்லாம் நான் பெரிதாக அளந்து பார்த்ததில்லை.

கண்ணில் பட்ட செய்தி – வெகு வேகமாகப் படிக்க ஒரு டெக்னாலஜி! வார்த்தைகளில் நமக்கு ஒரு எழுத்துதான் anchor point-ஆம், அதை கணினித்திரையில் சரியாக ஒரே இடத்தில் கொண்டுவந்தால் கண் நகர வேண்டாம், வெகுவேகமாகப் படிக்கலாம் என்கிறார்கள். சும்மா டெமோ பார்த்தபோது வேகமாகப் படிப்பது போலத்தான் இருக்கிறது. என் சாதாரண படிப்பு வேகம் என்ன என்று தெரியாததால் quantitative ஆக ஒரு தீர்மானத்துக்கு வரமுடியவில்லை.

நண்பர்கள் சும்மா டெமோவாவது பாருங்களேன்! உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று எழுதினால் தன்யனாவேன்…

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்