Skip to content
Tags

வெகுவேகமாகப் படிக்க?

by மேல் ஜூலை 8, 2014

எத்தனை வேகமாகப் படிக்கிறோம் என்பது எதைப் படிக்கிறோம் என்பதைப் பொறுத்தது இல்லையா? சாண்டில்யன் கதைகள் என்றால் ஒரு மணிக்கு 100, 125 பக்கம் படிப்பேன் என்று நினைக்கிறேன். Digital Signal Processing பற்றிய புத்தகம் என்றால் ஒரு மணிக்கு 30, 40 பக்கம் படிப்பேனோ என்னவோ. அதனால் இதையெல்லாம் நான் பெரிதாக அளந்து பார்த்ததில்லை.

கண்ணில் பட்ட செய்தி – வெகு வேகமாகப் படிக்க ஒரு டெக்னாலஜி! வார்த்தைகளில் நமக்கு ஒரு எழுத்துதான் anchor point-ஆம், அதை கணினித்திரையில் சரியாக ஒரே இடத்தில் கொண்டுவந்தால் கண் நகர வேண்டாம், வெகுவேகமாகப் படிக்கலாம் என்கிறார்கள். சும்மா டெமோ பார்த்தபோது வேகமாகப் படிப்பது போலத்தான் இருக்கிறது. என் சாதாரண படிப்பு வேகம் என்ன என்று தெரியாததால் quantitative ஆக ஒரு தீர்மானத்துக்கு வரமுடியவில்லை.

நண்பர்கள் சும்மா டெமோவாவது பாருங்களேன்! உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று எழுதினால் தன்யனாவேன்…

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

Advertisements

From → Misc

3 பின்னூட்டங்கள்
  1. டெமோ பார்த்தேன் .. இணையத்தில் நிறைய படிப்பவர்களுக்கு கண்டிப்பாக உதவும்.. பயனுள்ள தகவல்.. நன்றி!

    Like

  2. டெமோவில் வருவதை 700WPM வைத்து படித்தால் கூட அனைத்தையும் படிக்க முடிகின்றது. ஒரு சில புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தத்தை மூளை தேடும் முன் அடுத்தது ஓடி விடுகின்றது. தமிழில் தாராளமாக படிக்கலாம். அபிதா நாவலை நான் மாதக்கணக்கில் படித்தும், முடியவில்லை. ஒரு வேளை அதை இதில் ஓட்டி பார்க்கலாம்.

    Like

  3. மனதில் பதியும்னு நெனக்கறீங்களா?

    செய்திகளும், மின்னஞ்சலும் புரட்ட வேண்டுமானால் உபயோகிக்கலாம். தீர்க்கமான கதைகளும் பொருள் பொதிந்த கட்டுரைகளும் இப்படி வாசிக்க என்னால் இயலாது.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: