இ.பா.வின் “உச்சி வெய்யில்” – தேசிய விருது பெற்ற திரைப்படத்தின் மூலக்கதை

marupakkam

ஒரே ஒரு இரண்டு தமிழ்ப்படங்கள் இது வரை சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கின்றன. ஒன்று கஞ்சிவரம் (திருத்திய கோபிக்கு நன்றி!) இன்னொன்று சிவகுமார், ராதா, ஜெயபாரதி நடித்து கே.எஸ். சேதுமாதவன் இயக்கிய மறுபக்கம். மூலக்கதை இ.பா.வுடையது.

indira partthasarathi

எளிமையான கதைக்கருதான். ஆசாரசீலர், வேதாந்த சிம்மம் வேம்பு ஐயரின் மகன் டெல்லியில் ஒரு கிறிஸ்துவப் பெண்ணை மணந்து கொள்கிறான். வேம்பு மகன் வீட்டுக்கு வரலாம், மருமகள் காலெடுத்து வைக்கக்கூடாது என்கிறார். ஆனால் மகன் மணவாழ்வு முறிவடைந்தது என்று கேட்டதும் அதிர்ச்சியில் தீவிரமாக உடல் நலம் பாதிக்கப்படுகிறது. தன் அம்மாவுக்காக தான் மிகவும் விரும்பிய, தன்னை விரும்பிய தன் முதல் மனைவி அவயத்தை தள்ளி வைத்து வேறு மணம் புரிந்து கொண்டதின் குற்ற உணர்ச்சிதான் அது, தான் செய்த தவறு தன் மகன் தலையில் விடிந்திருக்கிறது என்பது மெதுவாக எல்லாருக்கும் தெரிய வருகிறது.

இ.பா. சிறப்பாக எழுதியிருக்கிறார். அவர் உணர்ச்சிகரமான ஒரு கதையை எழுதுவார் என்று நான் நினைத்ததில்லை. அவருடைய hallmark cynicism எதுவும் இல்லாத கதை. அதுவே இந்தக் கதைக்கு ஒரு special charm-ஐத் தருகிறது. அதுவும் என்னை மிகவும் கவர்ந்தது அந்த அம்மா பாத்திரம்தான். அந்தப் பாத்திரத்தில் எத்தனை சொல்லப்படாத கதைகள்? இத்தனை காலம் ஒன்றாக வாழ்ந்தும் வேம்புவின் மனதில் அவயம்தான் வியாபித்திருக்கிறாள் என்று புரிந்து கொள்ளும்போது எப்படி உணர்ந்திருப்பாள்? ஏற்கனவே தெரிந்திருக்கும் என்றும் வைத்துக் கொள்ளலாம், ஆனால் அது ஊருக்கே தெளிவாகத் தெரியும்போது எப்படி உணர்ந்திருப்பாள்?

சிறுகதை 1968-இல் எழுதப்பட்டிருக்கிறது. வாசகர் வட்டம் அப்போது பதிப்பித்ததாம். இந்தக் கதையைப் பற்றி இ.பா. சொல்கிறார்.

I wrote Utchi Veyil in 1968, soon after my father’s death. Happening in Kumbakonam, my native town, this was my first long story based outside Delhi. The novella was published by Vacakar Vattam, an innovative publishing concern in the sixties that was, perhaps, ahead of its time. The story, when published along with five more novellas of up and coming writers like me, won critical acclaim as ‘a totally different piece of fiction portraying the distinctive cultural flavour of Tanjavur district.’ I thoroughly enjoyed writing this short novel, as it had some autobiographical references.

திரைப்படமும் சிறப்பாக வந்திருக்கிறது. ராதா, சிவகுமார், ஜெயபாரதி எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். இலவசமாக இங்கே பார்க்கலாம்.

உச்சி வெயில் சிறுகதையை நான் ஒரு தொகுப்பில்தான் படித்தேன். இந்தத் தொகுப்பில் விட அதிகமாக என்னைக் கவர்ந்த, ஒரு இ.பா. trademark சிறுகதை உண்டு – “ஒரு இனிய மாலைப்பொழுது“. பேராசிரியரின் மனைவி வெகுநாள் கழித்து சந்தித்த தன் கல்லூரித் தோழியையும் அவள் கணவனையும் விருந்துக்கு அழைத்திருக்கிறாள். தோழியின் கணவன் மர வியாபாரி. பேராசிரியரும் மர வியாபாரியும் பேசிக் கொள்வது க்ளாசிக். அபத்தத்தின் உச்சம். இருவருக்கும் பேச பொதுவாக விஷயமே இல்லை, இவர் கவிதையைப் பற்றிப் பேச, அவர் டைனிங் டேபிளில் அடக்கவிலை என்ன இருக்கும் என்று யூகிக்கிறார். தஞ்சாவூர் குசும்பு என்பார்கள், அது இ.பா.விடம் நிறையவே இருக்கிறது! கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

இந்தக் கதையைப் பற்றி இ.பா. சொல்கிறார்.

I wrote ‘A Pleasant Evening’ to tease my wife. She had invited her former classmate and her husband, a stiff-collared, blue-blooded bureaucrat for dinner. In my story I made him a timber merchant. I found conversation between me and him was tough and heavygoing and, as the evening began to fade, the rest was silence!

இந்தத் தொகுப்பில் இருக்கும் “பயணம்” சிறுகதை டிபிகல் இ.பா. அம்மாவின் பிணம், ஆனால் லாஜிஸ்டிக்ஸ் பற்றியே கதை. இ.பா.வே சொல்வது –

‘The Journey’, was written soon after my mother’s death in Delhi in 1969. Of course, I am not a ‘fingering slave’ ‘to peep’ and fictionalise ‘over my mother’s grave’, as Wordsworth would say, but I could not have helped an intrinsic part of me, detaching itself from my sorrowing self, to watch and observe others, who had arrived at the funeral to play the role, expected of them.

ஆங்கில மொழிபெயர்ப்பில் இந்த மூன்று சிறுகதைகளும் கிடைக்கின்றன. (High Noon and Other Stories)

இவற்றைத் தவிரவும் மூன்று சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் உண்டு. குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும் சிறுகதை ஜெயமோகனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று. இதை ஏன் பரிந்துரைக்கிறார் என்று என்னால் சரியாகப் புரிந்து கொள்ளமுடியவில்லை. சுமைகள் சிறுகதையின் நாயகன் அழகற்றவன். ஒரு அழகியை மணக்கிறார்ன். அவள் ஒரு பணக்காரனோடு தொடர்பு வைத்துக் கொள்வதை வெளிப்படையாக சொல்லி விவாகரத்து வாங்குகிறான். தீர்ப்பு சிறுகதையிலோ இளமையில் இருந்த அழகு போனதை அழகை பூஜிக்கும் இருவர் எப்படி அணுகுகிறார்கள் என்று கற்பனை செய்திருக்கிறார்.


தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம், திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: மறுபக்கம் திரைப்படம் பார்க்க

புகைப்படங்கள் வழியாக சென்னை வரலாறு

விகடனில் பழைய சென்னையின் பல புகைப்படங்களைப் போட்டிருக்கிறார்கள். ராயபுரத்தில் ஃபோட்டோ கண்காட்சி நடக்கிறது. இதையெல்லாம் ஒரு காஃபி டேபிள் புத்தகமாகப் போட்டால் நன்றாக இருக்கும்!

எனக்குப் பிடித்த ஒரு புகைப்படம் ஓவியம் கீழே.

old_chennai

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

அசோகமித்ரன் பரிந்துரைகள்

இது நண்பர் செல்வராஜின் பதிவு.

asokamithranஅசோகமித்திரன் டாப் 10 நாவல்களாக “காலக்கண்ணாடி” என்ற கட்டுரை நூலில் குறிப்பிடும் நாவல்கள்

 1. பிரதாப முதலியார் சரித்திரம்
 2. கமலாம்பாள் சரித்திரம்
 3. தியாகபூமி
 4. மண்ணாசை
 5. நாகம்மாள்
 6. வாழ்ந்தவர் கெட்டால்
 7. தில்லானா மோகனாம்பாள்

8-10 இடங்களுக்கு அவர் பரிந்துரைக்கும் நாவல்கள்

 1. அசடு
 2. அவன் ஆனது
 3. உயிர்த்தேன்
 4. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
 5. ஒரு புளியமரத்தின் கதை
 6. கரிக்கோடுகள்
 7. காகித மலர்கள்
 8. நினைவுப் பாதை
 9. பள்ளிகொண்டபுரம்
 10. கிருஷ்ணப் பருந்து
 11. நதிமூலம்
 12. சுதந்திர பூமி

படைப்பாளிகளின் உலகம்” என்ற கட்டுரை நூலில் இந்திய விடுதலைக்குப் பின் வெளியான தமிழ் நாவல்களின் மைல் கற்கள் என குறிப்பிடும் நாவல்கள்

 1. மோகமுள்
 2. அசுரகணம்
 3. அறுவடை
 4. ஒரு புளியமரத்தின் கதை
 5. தலைமுறைகள்
 6. கரைந்த நிழல்கள்
 7. மலரும் சருகும்
 8. அம்மா வந்தாள்
 9. காகித மலர்கள்
 10. தந்திரபூமி
 11. கடல்புரத்தில்

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம், பரிந்துரைகள், மற்றும் Guest Posts

தொடர்புடைய சுட்டிகள்: அசோகமித்ரன் பரிந்துரைகள் 1, 2, கோபியின் பதிவு

எட்டு அமெரிக்க ஜனாதிபதிகளின் பட்லர்!

butlereugene_allen

பட்லர் என்று ஒரு நல்ல திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். யூஜீன் ஆலன் என்ற ஒரு கறுப்பர் ட்ரூமன், ஐசன்ஹோவர், கென்னடி, லிண்டன் ஜான்சன், நிக்சன், ஃபோர்ட், கார்ட்டர், ரீகன் ஆகிய எட்டு அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு பட்லராக முப்பது வருஷங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். ஆலன் பற்றிய அருமையான கட்டுரையை இங்கே காணலாம். சுவாரசியமான கட்டுரை.

திரைப்படத்தின் நாயகன் ஆலனால் inspire ஆன கதாபாத்திரம். நாயகனின் கண் மூலமாக இந்த முப்பது வருஷங்களில் கறுப்பர்-வெள்ளையர் உறவுகளை சித்தரித்திருக்கிறார்கள். ஃபாரஸ்ட் விட்டேக்கர், ஓப்ரா வின்ஃப்ரே, க்யூபா குட்டிங் ஜூனியர் நடித்திருக்கிறார்கள். பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

பாரதியும் முதல் உலகப் போரும்

bharathia_r_venkatachalapathyஅ.இரா. வெங்கடாசலபதி முதல் உலகப் போரைப் பற்றி பாரதியின் எண்ணங்கள் என்ன என்பதைப் பற்றி ஹிந்து பத்திரிகையில் எழுதி இருக்கிறார். (பகுதி 1, 2). நல்ல ஆவணம், படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

படிக்க விரும்புபவை – கோவை அய்யாமுத்துவின் நினைவுகள்

unmai (april 16-30) pages.pmdசட்டநாதக் கரையாளர் பற்றி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தேன். அவரைப் போலவே அவ்வளவாகத் தெரியாத இன்னொரு மூன்றாம் நிலை தலைவர் – தொண்டர் என்றே வைத்துக் கொள்ளலாம் – கோவை அய்யாமுத்து. என்னை fascinate செய்யும் ஆளுமைகளில் ஒருவர். காந்தி, ராஜாஜி, ஈ.வெ.ரா. ஆகியோரோடு நெருக்கமாகப் பணியாற்றி இருக்கிறார்.

அய்யாமுத்து சில memoirs-களை எழுதி இருக்கிறார். “நான் கண்ட பெரியார்“, “ராஜாஜி எனது தந்தை“, “எனது நினைவுகள்” புத்தகங்களைப் படிக்க ஆவலாக இருக்கிறது. சென்ற ஆண்டு எனது நினைவுகள் புத்தகத்தை விடியல் பதிப்பகம் மீண்டும் பதித்திருக்கிறாம். பார்க்க வேண்டும்.

அவரைப் பற்றி இணையத்தில் அடிக்கடி குறிப்பிடுபவர் கே.ஆர். அதியமான். அவருக்கு ஒரு ஜே!

Gandhi1காந்தியைப் பற்றி சொல்கிறார்:

காந்தியுடன் நெருங்கிப் பழகிய யாரும் அவரால் இன்பமுற்றதில்லை. துயரக்கண்ணீர் சிந்தியவர் பலர். அன்னை கஸ்தூரிபாவை தென்னாப்பிரிக்காவில், ஒருநாள் இரவு, கதவைத் திறந்து, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய காந்திதானே அந்த மகான்! மகாத்மாக்களுடன் சுவர்க்கத்தில் வசிப்பது இன்பமாயிருக்கலாம். பூலோகத்தில் அவர்களுடன் வசிப்பது துனபமென்று கூறி மகாதேவ தேசாய் மனமுருகிக் கண்ணீர் வடித்த காட்சியை நான் பார்க்கவில்லையா?

மனுபென் காந்தி குளிக்கும்போது உடல் தேய்க்கப் பயன்படுத்திய கல்லை மறந்துவிட்டு வந்தார் என்று பல மைல் நடந்து அதைக் கொண்டு வரச் சொன்னாராம். கல்லுக்கா நம் நாட்டில் பஞ்சம்? இந்த மனிதர் காந்தி என்னதான் மாயமந்திரம் செய்தாரோ குறைப்படுவர்கள் கூட அவரை விட்டு நீங்குவதில்லை…

அய்யாமுத்து ஆற்றிய சில சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக – சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் – கிடைத்தது. கேட்க நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

கந்துகூரி பிரகாசம் முதல்வராக இருந்தபோது கதரை பரப்ப மூன்று கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார். அய்யாமுத்து அந்தத் திட்டத்தை ‘சர்க்காரின் கதர் திட்டம் வெற்றி பெறுமா‘ என்ற பிரசுரத்தில் கிழிகிழி என்று கிழித்திருக்கிறார். நல்ல முறையில் தன் வாதங்களை முன்வைக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

சிறந்த 15 அமெரிக்க நாவல்கள்

இன்னும் ஒரு பட்டியல். இவற்றில் நான் பாதி படித்திருந்தால் அதிகம். படித்தவற்றில் நான் தயங்காமல் பரிந்துரைப்பவை Moby Dick, Huckleberry Finn, Catcher in the Rye மூன்றுதான். Scarlet Letter, Uncle Tom’s Cabin எல்லாம் காலாவதியாகிவிட்டன என்றுதான் கருதுகிறேன். Call of the Wild சிறு வயதில் படிக்க வேண்டிய புத்தகம். என் வயதிலும் படிக்கலாம், சுவாரசியமான புத்தகம்தான், ஆனால் பட்டியலில் இடம் பெறுவது என்பதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்தி. Color Purple ஒரு காலத்தில் பிடித்திருந்தது, மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும். கார்மாக் மக்கார்த்தி எனக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. Grapes of Wrath, Fear and Loathing in Las Vegas, Beloved, For Whom the Bell Tolls, மற்றும் Rabbit, Run என்றாவது படிக்க வேண்டும். Midnight in Paris பார்த்ததிலிருந்து ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரல்டைப் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், இந்த வருஷம் என் பெரிய பெண்ணுக்கு Great Gatsby பாடமாக வேறு இருக்கிறது.

வசதிக்காக இங்கே பட்டியலை மீள்பதித்திருக்கிறேன்.

 1. Scarlet Letter – Nathaniel Hawthorne (1850)
 2. Moby Dick – Herman Melville (1851)
 3. Adventures of Huckleberry Finn – Mark Twain (1884)
 4. House of Mirth – Edith Wharton (1905)
 5. Call of the Wild – Jack London (1903)
 6. Grapes of Wrath – John Steinbeck (1939)
 7. Independence Day – Richard Ford (1995)
 8. Colossus of Maroussi – Henry Miller (1941)
 9. Catcher in the Rye – J.D. Salinger (1951)
 10. Fear and Loathing in Las Vegas – Hunter S. Thompson (1971)
 11. Beloved – Toni Morrison (1987)
 12. All the Pretty Horses – Cormac McCarthy (1992)
 13. Heart is a Lonely Hunter – Carson McCullers (1940)
 14. Fugitive Pieces – Anne Michaels (1996)
 15. We Need to Talk About Kevin – Lionel Shriver (2003)

இரண்டாம் பட்டியல்

 1. Uncle Tom’s Cabin – Harriet Beecher Stowe (1852)
 2. Great Gatsby – F. Scott Fitzgerald (1925)
 3. For Whom the Bell Tolls – Ernest Hemingway (1940)
 4. Rabbit, Run – John Updike (1960)
 5. Color Purple – Alice Walker (1982)
 6. Human Stain – Philip Roth (2000)
 7. White Noise – Don DeLillo (1985)
 8. Bonfire of the Vanities – Tom Wolfe (1987)
 9. Shipping News – Annie Proulx (1993)
 10. Infinite Jest – David Foster Wallace (1996)

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்