Skip to content

என் இன்றைய டாப் டென் தமிழ் நாவல்கள்

by மேல் ஓகஸ்ட் 3, 2014

திண்ணை தளத்தில் செல்வராஜ் நான் எப்போதோ எங்கேயோ கொடுத்திருந்த டாப் டென் லிஸ்டை எடுத்துப் போட்டிருந்தார். வசதிக்காக அது மீண்டும்.

 1. பின் தொடரும் நிழலின் குரல்
 2. விஷ்ணுபுரம்
 3. பொன்னியின் செல்வன்
 4. என் பெயர் ராமசேஷன்
 5. கரைந்த நிழல்கள்
 6. சாயாவனம்
 7. கோபல்ல கிராமம்
 8. வெக்கை
 9. ஜேஜே சில குறிப்புகள்
 10. மோகமுள்

ஆனால் காலம் நிற்பதில்லையே! என் இன்றைய டாப் டென், வரிசைப்படி:

  டாப் 10

 1. விஷ்ணுபுரம்
 2. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
 3. பின் தொடரும் நிழலின் குரல்
 4. சாயாவனம்
 5. கோபல்ல கிராமம்
 6. வாசவேஸ்வரம்
 7. கரைந்த நிழல்கள்
 8. காடு
 9. ஆழிசூழ் உலகு
 10. என் பெயர் ராமசேஷன்

 11. டாப் 25

 12. மோகமுள்
 13. நிழல் முற்றம்
 14. மானசரோவர்
 15. வெக்கை
 16. ஜேஜே சில குறிப்புகள்
 17. புலிநகக் கொன்றை
 18. வாடிவாசல்
 19. ஒற்றன்
 20. நாளை மற்றொரு நாளே
 21. பொன்னியின் செல்வன்
 22. பொய்த்தேவு
 23. புயலிலே ஒரு தோணி
 24. வெள்ளை யானை
 25. ஒரு புளியமரத்தின் கதை
 26. 18ஆவது அட்சக்கோடு

 27. டாப் 50

 28. தண்ணீர்
 29. புத்தம்வீடு
 30. மானுடம் வெல்லும்
 31. கோபல்லபுரத்து மக்கள்
 32. பசித்த மானுடம்
 33. ஏழாம் உலகம்
 34. அம்மா வந்தாள்
 35. சில நேரங்களில் சில மனிதர்கள்
 36. இடைவெளி
 37. பாற்கடல்
 38. காலவெளி
 39. கமலாம்பாள் சரித்திரம்
 40. நித்யகன்னி
 41. ஜெயஜெய சங்கர
 42. நெடுங்குருதி
 43. வன்மம்
 44. அபிதா
 45. பத்மாவதி சரித்திரம்
 46. தலைமுறைகள்
 47. பிறகு
 48. கடல்புரத்தில்
 49. ஒரு கடலோர கிராமத்தின் கதை
 50. எட்டுத் திக்கும் மதயானை
 51. ரப்பர்
 52. கள்ளி

 53. டாப் 100: (இப்போதைக்கு 70தான்)

 54. தரையில் இறங்கும் விமானங்கள்
 55. நிர்வாண நகரம்
 56. வானம் வசப்படும்
 57. அஞ்சலை
 58. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
 59. என்பிலதனை வெயில் காயுமே
 60. உபபாண்டவம்
 61. ஸ்ரீமான் சுதர்சனம்
 62. குருதிப்புனல்
 63. நைலான் கயிறு
 64. கூளமாதாரி
 65. கூகை
 66. மெர்க்குரிப் பூக்கள்
 67. பந்தயப்புறா
 68. பிரதாப முதலியார் சரித்திரம்
 69. வெட்டுப்புலி
 70. அகல்யா
 71. புதிய மொட்டுக்கள்
 72. கருத்த லெப்பை

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

Advertisements

From → Book Recos

13 பின்னூட்டங்கள்
 1. 18,57 need deletion.

  Like

 2. G. Sundar permalink

  என் டாப் டென் நாவல்கள்:

  1. மோகமுள்

  2. அம்மா வந்தாள்

  3. மரப்பசு

  4. கரைந்த நிழல்கள்

  5. ஜே.ஜே. சில குறிப்புகள்

  6. நாளை மற்றும் ஒரு நாளே

  7. இரண்டாம் ஜாமங்களின் கதை

  8. 18-வது அட்சக்கோடு

  9. காகித மலர்கள்

  10. மெர்க்குரிப் பூக்கள்

  Like

  • சுந்தர், நீங்கள் தி.ஜா. விசிறி போலிருக்கிறதே!

   Like

   • G. Sundar permalink

    ஆர்.வி அவர்களே! மிகச் சரியாகக் கணித்திருக்கிறீர்கள், நான் ஒரு தி.ஜா விசிறி என்று. ஆம், நான் தி.ஜானகிராமனின் பரம விசிறி, தீவிர விசிறி. எனது இந்த டாப் டென் பட்டியலில் அதிகபட்சமாக முதல் 7 இடங்களை தி.ஜாவுக்கே அளிக்க ஆசை. ஆனால் நான் தி.ஜாவின் மூன்று நாவல்களை மட்டுமே வாசித்திருக்கிறேன். அவரது எல்லா நாவல்களையும் வாசித்திருந்தால், மலர்மஞ்சமும், உயிர்த்தேனும், நளபாகமும், செம்பருத்தியும் கூட இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கும். அதற்குப் பிறகு 3 இடங்கள் மிச்சம் இருக்கும், இல்லையா? அசோகமித்திரனின் கரைந்த நிழல்களும், ஜி.நாகராஜனின் நாளை மற்றொரு நாளேவும், சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதையும் அந்த 3 இடங்களைப் பிடித்திருக்கும்.

    Like

 3. தி.ஜா. விசிறி சுந்தர், உங்களுக்கு என்ன வயசு இருக்கும்?

  Like

  • G. Sundar permalink

   46 வசந்தங்கள் !!!

   Like

   • தி.ஜா. விசிறி சுந்தர், இன்றைய இளைய தலைமுறை மோகமுள்ளால் கவரப்படும் என்று நினைக்கிறீர்களா? எனக்குக் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது.

    Like

 4. G. Sundar permalink

  இல்லை ஆர்வி, இல்லை, கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை எனக்கு. இன்றைய தலைமுறை இளைஞர்களில் சீரியஸ் இலக்கிய வாசகர்களும் இருப்பார்கள் இல்லையா? அவர்கள் நிச்சயம் மோகமுள்ளை விருப்பத்துடன் வாசிப்பார்கள். உலக இலக்கியத்தில் காதலர்களுக்கு உதாரணமாக ரோமியோ – ஜூலியட், அம்பிகாபதி – அமராவதி, லைலா – மஜுனுவை சொல்வார்கள் இல்லையா? அதே போல காதல் தோல்விக்கு உதாரணமாக தேவதாஸ் – பார்வதியை சொல்வார்கள் இல்லையா? அதுபோலத்தான் மோகமுள்ளும் எனக்கு. வயதில் தன்னைவிட மூத்த ஒருத்தியைக் காதலிக்கிறான் ஒருவன். அவன் அவளை அடைந்தானா இல்லையா? இதுதான் மோகமுள்ளின் கதை.

  நான் தமிழ் இலக்கியம் மட்டுமல்ல, உலக இலக்கியங்களையும் விரும்பி வாசிப்பவன். ரஷ்ய, பிரெஞ்சு, ஆங்கில, ஜப்பானிய, சீன இலக்கியங்களையும், இந்திய மொழிகளை எடுத்துக்கொண்டால் கன்னட, மலையாள, வங்காள, இந்தி மொழி இலக்கியங்களையும் வாசித்திருக்கிறேன். ஆனால் மோகமுள்ளுக்கு நிகரான, அதாவது மோகமுள்ளின் கதைக்கருவைக் கையாண்டிருக்கக் கூடிய வேற்றுமொழி இலக்கியங்கள் எதையும் இதுவரை நான் வாசித்தேன் இல்லை.

  இன்றைய தலைமுறை இளைஞர்களைக் கவரக்கூடிய எழுத்துதான் தி.ஜானகிராமனுடையது. அவர்கள் தி.ஜா. எழுதிய அனைத்துக் கதைகளையும், கட்டுரைகளையும் வாசிக்க வேண்டியது இல்லை. ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் வாசித்தாலே போதுமானது. அந்த ஒரே ஒரு புத்தகம் மோகமுள்ளாகக் கூட இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘அம்மா வந்தாளை’யோ ‘நளபாகத்தை’யோ வாசித்தால் கூட போதுமானதுதான். இப்படி ஒரே ஒரு புத்தகத்தில் தொடங்கும் ஆர்வம் அவரது மற்ற எல்லா எழுத்துக்களையும் படிக்கத் தூண்டிவிடும். தி.ஜானகிராமன் ஒரு அபூர்வமான கதைசொல்லி.

  Like

  • தி.ஜா. விசிறி சுந்தர், எனக்கு தி.ஜா. மீது சில விமர்சனங்கள் உண்டு. என்றாவது விளக்கமாக எழுதுகிறேன். ஆனால் நீங்கள் தி.ஜா.வைப் பற்றி நிறைய எழுதலாமே? வேண்டுமென்றால் என் ஈமெயிலுக்கு அனுப்புங்கள், இங்கேயே பதித்துவிடுகிறேன். என் ஈமெயில் rv dot subbu at gmail

   Like

 5. எனக்கு 34 வயதாகின்றது. மோகமுள் முதல்முறை படிக்கும் போது 26 வயதிருக்கும். கல்கி, சுஜாதா விற்கு அடுத்து விரும்பி படித்தது தி.ஜாவே.

  நானெல்லாம் இளைய தலைமுறையில் வரமாட்டேனோ?

  Like

  • ரெங்கா, வடிவேலு ஸ்டைலில் சொல்வதென்றால் ‘ஒத்துக்கறேன். நீங்க இளைஞர்தான்னு ஒத்துக்கறேன்’

   Like

Trackbacks & Pingbacks

 1. ஜடாயுவின் பரிந்துரைகள் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: