Skip to content

சாமர்செட் மாம் எழுதிய “மூன் அண்ட் சிக்ஸ்பென்ஸ்”

by மேல் ஓகஸ்ட் 9, 2014

somerset_maughamசாமர்செட் மாமின் சிறந்த படைப்புகளில் ஒன்று. பால் காகினின் வாழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல்.

நாவலின் பலம் நாயகன் சார்லஸ் ஸ்ட்ரிக்லண்டின் சித்திரம்தான். ஸ்ட்ரிக்லண்ட் சாதாரண மத்திய தர வர்க்கத்தினன். ஒரு நாள் தன் வாழ்க்கையை முழுதுமாக கைகழுவிவிட்டு ஓவியம் வரையத் தொடங்குகிறான். அது வரை சமூகம் தன் மீது போர்த்தி இருந்த நியதிகள் எல்லாவற்றையும் நிராகரிக்கிறான். வரைவது ஒன்றே வாழ்வின் லட்சியம். தனக்காக வரைகிறான், அடுத்தவருக்காக இல்லை.

moon and sixpenceஸ்ட்ரிக்லண்ட் நியதிகளை மயிரே போச்சு என்று அலட்சியப்படுத்துவதும் ஓவியம் வரைந்து கொண்டே இருப்பதும்தான் கதை. அதைத்தான் மாம் நல்ல craft மூலம் வெளிப்படுத்துகிறார். அவரது understated ஸ்டைல் இந்த நாவலில் மிக நன்றாகப் பொருந்துகிறது. கதையின் எல்லா சம்பவங்களும் அதைத்தான் காட்டுகின்றன. பங்குகள் வாங்கி விற்கும் ப்ரோக்கராக வாழ்பவன் ஒரு நாள் திடீரென்று மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு, அவர்கள் தன் மீது ஏற்றி இருக்கும் பொறுப்புகளை கைகழுவிவிட்டு பாரிஸ் போகிறான். அங்கே வறுமை, நோய், ஓவியம் வரைவதில் தனக்கு இருக்கும் குறைபாடுகள், தன் எந்த ஓவியமும் விற்காதது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வரைந்து கொண்டே இருக்கிறான். அவனை ஜீனியஸ் என்று கணிக்கும் ஒரு “நண்பனுக்கு துரோகம்” செய்து அவன் மனைவியோடு வாழத் தொடங்குகிறான். கொஞ்ச நாளில் அவளையும் கைகழுவிவிட்டு டாஹிதி தீவுக்குப் போகிறான். அங்கேதான் தன்னுடைய மிகச் சிறந்த ஓவியங்களை வரைகிறான், ஆனால் அவற்றைத் தன் இறப்புக்குப் பிறகு எரித்துவிடும்படி சொல்லிவிட்டு சாகிறான்.

paul_gauginஉண்மையில் சம்பவங்கள் முக்கியமே இல்லை. எல்லாமே அவனுக்கு சமூகத்தைப் பற்றி அக்கறை இல்லாததையும் வரைவதில் மட்டுமே அவனுடைய ஜீவன் இருப்பதையும் காட்டுவதற்காக சிருஷ்டிக்கப்பட்ட சம்பவங்கள், அவ்வளவுதான்.

புத்தகத்தின் பெயர் எனக்குப் பிடித்த ஒன்று. நாம் எல்லாருமே கீழே கிடக்கும் ஆறு பென்னிகளைப் பொறுக்குவதில் மேலே ஒளி வீசும் நிலைவைப் பார்க்கத் தவறிவிடுகிறோம். காகின் ஸ்ட்ரிக்லண்ட் நிலவைப் பார்த்திருக்கிறான்.

moon_and_sixpence_movie1942-இல் ஆல்பர்ட் லெவின் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்தது.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். கூடன்பர்க் தளத்தில் கிடைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

Advertisements

From → World Fiction

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: