Skip to content

ஜான் டி. மக்டொனால்ட் எழுதிய “Executioners”

by மேல் ஓகஸ்ட் 11, 2014

cape_fear_1962உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அருமையான கதைக்களம் இருந்தாலும் Executioners அப்படி ஒன்றும் பிரமாதமான நாவல் இல்லை. இருநூறு பக்கம் கூட இருக்காது ஆனால் அங்கங்கே இழுவையாகத்தான் இருக்கிறது.

cape_fear_1991இருந்தாலும் Executioners பற்றி எழுத அதன் சினிமா வடிவங்கள்தான் காரணம். Cape Fear என்ற பேரில் இரண்டு முறை சினிமாவாக வந்திருக்கிறது. க்ரிகரி பெக், ராபர்ட் மிட்சம் நடித்து ஜே. லீ தாம்ப்ஸன் இயக்கத்தில் 1962இல் ஒரு முறை. மார்ட்டின் ஸ்கோர்சசே இயக்கத்தில் ராபர்ட் டி நீரோ, நிக் நோல்டி, ஜெஸ்ஸிகா லாங்கேகே நடித்து 1991இல் ஒரு முறை. இரண்டும் சிறப்பான த்ரில்லர்கள். கதையின் premise சினிமாவுக்கான பல சாத்தியங்களைக் கொண்டது, அதைப் புரிந்து கொண்டு டென்ஷன் மிகுந்த திரைப்படங்களாக எடுத்திருக்கிறார்கள். நாவலே 1957இல்தான் வெளியிடப்பட்டிருக்கிறது, ஐந்து வருஷத்துக்குள் திரைப்படம் வெளிவந்துவிட்டது.

சுவாரசியமான தகவல் ஒன்று – முதல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த க்ரிகரி பெக்கும் ராபர்ட் மிட்சமும் இரண்டாவது படத்தில் சின்ன வேடங்களில் வருவார்கள்.

john_d_mcdonaldஅது என்ன அப்பேர்ப்பட்ட premise? சின்ன ஊர் ஒன்றில் வக்கீல் சாம் பௌடன் தன் மனைவி, 14 வயதுப் பெண், 11 மற்றும் ஆறு வயதில் இரு மகன்கள், ஒரு பயந்தாங்கொள்ளி நாயோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். 14 வருஷங்களுக்கு முன் அவனால் ஜெயிலுக்குப் போன மாக்ஸ் கேடி – கேடி ஒரு 14 வயதுப் பெண்ணை கற்பழிக்க முயன்றபோது சாம் தடுக்கிறான், அவன் சாட்சி சொல்லித்தான் கேடிக்கு ஜெயில் – இப்போது அவனைத் தேடி வருகிறான். சாமைத் தொலைத்துவிடுவேன் என்று பூடகமாகச் சொல்கிறான். சாம் போலீசிடம் செல்கிறான், ஆனால் குற்றம் நடப்பதற்கு முன் எதுவும் செய்ய முடியவில்லை. கேடியை அடிக்க அனுப்பும் ஆட்கள் அடி வாங்குகிறார்கள். நாய் விஷத்தைச் சாப்பிட்டு செத்துவிடுகிறது. 11 வயதுப் பையன் வெகு தூரத்தில் ஒரு ரைஃபிளால் சுடப்படுகிறான், அதிர்ஷ்டவசமாக சின்னக் காயத்தோடு தப்புகிறான். காரின் சக்கரங்களின் திருகுகள் தளர்த்தப்பட்டு விபத்து ஏற்படுகிறது.

executionersகேடியின் பாத்திரம் நடிக்க நிறைய ஸ்கோப் உள்ள ஒன்று. நியாய தர்மங்களைப் பற்றி கவலை இல்லாத, எதிராளியைத் தொலைத்தே தீருவேன் என்று உறுதி பூண்ட, திறமையான வில்லன். டி நீரோவும் சரி, மிட்சமும் சரி கலக்குவார்கள். They exude menace!

திரைப்படங்களை முதலில் பாருங்கள், அப்புறம் வேண்டுமானால் புத்தகத்தைப் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், த்ரில்லர்கள்

Advertisements

From → Films, Thrillers

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: