கிழக்கு பதிப்பகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புகள்

nhmbadri_seshadriசமீபத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தபோது கிழக்கு பதிப்பகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் தமிழ் நாவல்களை பற்றிய ஒரு சுட்டி கிடைத்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவற்றில் முக்கால்வாசியாவது தமிழின் முக்கிய நாவல்கள் பட்டியலில் இடம் பெறுபவை, அதிகமாக விற்காத இலக்கியப் புத்தகங்கள். இவை எல்லாம் பிரமாதமாக வியாபாரம் ஆகும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. கிழக்கு பதிப்பகம் லாப நோக்கம் இல்லாமல் நடத்தப்படும் நிறுவனமோ, சாகித்ய அகாடமியோ, நேஷனல் புக் ட்ரஸ்டோ இல்லை. அப்படி இருந்தும் இதைச் செய்திருக்கும் பதிப்பகத்துக்கும் அதன் நிறுவனர் பத்ரி சேஷாத்ரிக்கும் ஒரு ஜே போட வேண்டுமென்று தோன்றியது, அதனால்தான் இந்தப் பதிவு.

தமிழ் படிக்கத் தெரியாத, படிக்கும் ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு பரிசாக வாங்கிக் கொடுங்கள்!

மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கும் தமிழ் நாவல்களின் பட்டியல்: ஆங்கிலப் பெயர் அடைப்புக்குறிக்குள்.

சா. கந்தசாமியின் “சூர்ய வம்சம்” (Sons of the Sun)
இந்துமதியின் “தரையில் இறங்கும் விமானங்கள்” (Surrendered Dreams)
கௌசல்யா சப்தரிஷியின் “TamBrahm Bride”
இரா. முருகனின் “அரசூர் வம்சம்” (Ghosts of Arasur)
யூமா. வாசுகியின் “ரத்த உறவு” (Blood Ties)
இ.பா.
      Ashes and Wisdom
      சுதந்திர பூமி (Into this Heaven of Freedom)
      தந்திர பூமி (Wings in the Void)
      கிருஷ்ணா கிருஷ்ணா (Krishna Krishna)
சிவசங்கரி
      Deception
      பாலங்கள் (Bridges)
ஹெப்சிபா ஜேசுதாசனின் “புத்தம்வீடு” (Lizzie’s Legacy)
விஜயராகவனின் “Twice Born”
ஜெயகாந்தன்
      ரிஷிமூலம் (Rishimoolam)
      ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (Once an Actress)
      உன்னைப் போல் ஒருவன்
நீல. பத்மநாபனின்பள்ளிகொண்டபுரம்” (Where the Lord Sleeps)
அசோகமித்ரன்
      இன்று (Today)
      கரைந்த நிழல்கள் (Star-Crossed)
பி.எஸ். ஸ்ரீயின் “Temple Elephant” (சிறுவர் புத்தகம் என்று யூகிக்கிறேன்.)
ஆதவன்
      காகித மலர்கள் (Paper Flowers)
      என் பெயர் ராமசேஷன் (I, Ramaseshan)
வாசந்தியின் ஆகாச வீடுகள் (A Home in the Sky) – நன்றி, ஜடாயு!

கௌசல்யா சப்தரிஷியின் “TamBrahm Bride”, விஜயராகவனின் “Twice Born” எல்லாம் தமிழ் நாவல்தானா? ஆசிரியரையும் புத்தகத்தையும் பற்றி கேள்விப்பட்டதே இல்லை.

இ.பா.வின் “Ashes and Wisdom”, சிவசங்கரியின் “Deception”, வாசந்தியின் “A Home in the Sky” ஆகியவற்றுக்கு ஒரிஜினல் தமிழ்ப் பெயரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

TamBrahm Bride மற்றும் Ashes and Wisdom இரண்டும் ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்பட்டவை, TamBrahm Bride சும்மா pulp என்று ஜடாயு தகவல் தந்திருக்கிறார். இவற்றைத் தவிர ஜெயமோகனின்காடு” (Forest) புத்தகமும் ஆங்கில மொழிபெயர்ப்பாக கிழக்கு பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கிறதாம்.


தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

5 thoughts on “கிழக்கு பதிப்பகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புகள்

  1. சம்பந்தம் இல்லாமல் ஒரு கேள்வி! சிறு உதவி! சிவராம் கரந்த்’தின் சுயசரிதை ‘வேடிக்கை மனதின் பத்து முகங்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளதாம். எந்த பதிப்பகம் என்று தெரியவில்லை. அது எந்தப் பதிப்பகம் என்று சொல்ல முடியுமா?

    Like

  2. // கௌசல்யா சப்தரிஷியின் “TamBrahm Bride” // Pulp fiction written in English

    // இ.பா.வின் “Ashes and Wisdom” // I think this is his direct English work, not a translation from Tamil

    // வாசந்தியின் “A Home in the Sky” // ஆகாச வீடுகள்

    Like

  3. ஒரு சந்தேகம். பள்ளி கொள்ளுதல் என்றால் படுத்திருத்தல் தானே. தூக்கம் எங்கே வந்தது .“பள்ளிகொண்டபுரம்” (Where the Lord Sleeps).

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.